தமிழ் - தமிழ் அகரமுதலி - மாயோனாள் முதல் - மாராயவஞ்சி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மாயோனாள் | திருவோணநாள் . |
| மார் | நெஞ்சு ; முலை ; மார்பு ; நெஞ்சு ; நான்குமுழ அளவுள்ள நீட்டலளவை ; ஓர் அசை ; பல்லோர் படர்க்கை விகுதியுள் ஒன்று ; ஒரு வியங்கோள் விகுதி ; பன்மைவிகுதி . |
| மார்க்கட்டி | மார்பில்வரும் புண் . |
| மார்க்கட்டு | மார்பின் உறுதியமைப்பு ; இரவிக்கை ; மார்பின் குறுக்கேயிடும் வேட்டிக்கட்டு ; சந்தை . |
| மார்க்கடம் | காண்க : மர்க்கடம் ; குரங்குக்கூட்டம் . |
| மார்க்கண்டம் | மார்பெலும்பு . |
| மார்க்கணம் | அம்பு ; இரப்பு ; தேடுகை ; நெஞ்சுப்பகுதி . |
| மார்க்கம் | நெறி , வழி ; நெடுந்தெரு ; ஒழுங்கு ; முறை ; ஒழுக்கம் ; சமயம் ; மூலம் ; மரபுவழி ; மறுதலை ; ஆராய்ச்சி ; மார்கழிமாதம் ; கத்தூரி ; அகப்பொருட்டுறை ; கூத்துவகை ; தாளப்பிரமாணத்துள் ஒன்று ; குதிரைநடை ; காண்க : மார்க்கவம் ; உலகம் . |
| மார்க்கவசம் | மார்பிலணியும் காப்புச்சட்டை . |
| மார்க்கவம் | கையாந்தகரைப்பூண்டு . |
| மார்க்கிகன் | வழிச்செல்வோன் ; வேடன் . |
| மார்க்சியம் | காரல்மார்கஸ் என்பவரின் கொள்கை . |
| மார்கழி | சௌரமான மாதம் பன்னிரண்டனுள் ஒன்பதாம் மாதம் . |
| மார்கழிநீராடுதல் | மார்கழி மாதத்தில் இளம்பெண்கள் நாடோறும் அதிகாலையில் குளத்திற்குச் சென்று நீராடுகை . |
| மார்ச்சரியம் | பொறாமை . |
| மார்ச்சளி | காண்க : மார்புச்சளி . |
| மார்ச்சனம் | துடைத்தல் ; தூய்மைசெய்தல் ; கடவுள் திருமுன் இடக்கையினின்று ஒழுகவிடும் நீரை மந்திரபூர்வமாய்த் தலையில் தெளிக்கை . |
| மார்ச்சனி | துடைப்பம் ; சீமையால் . |
| மார்ச்சனை | இனிது ஒலிக்க மேளத்திடும் கரிய மட்சாந்து ; முழவின் வார் . |
| மார்ச்சாலம் | பூனை ; காண்க : மரநாய் . |
| மார்ச்சிலந்தி | முலைப்பக்கத்துண்டாகும் புண் . |
| மார்த்தவம் | மென்மைத்தன்மை . |
| மார்த்தாண்டன் | சூரியன் . |
| மார்தட்டுதல் | போட்டிபோடுதல் ; குறித்த ஒரு துறையில் தான் மேன்மையானவன் என்பதைக் குறிப்பிக்குமாறு மார்பைத் தட்டுதல் ; தற்பெருமையடைதல் . |
| மார்பகம் | நெஞ்சு ; முலை . |
| மார்பம் | நெஞ்சு ; முலை . |
| மார்பாக | மூலமாய் . |
| மார்பாணி | ஒரு மார்பின் புண்வகை ; தலைமையாணி ; தண்டனையாக மார்பில் தைக்கும் ஆணி . |
| மார்பு | நெஞ்சு ; முலை ; வடிம்பு ; தடாகம் ; அகலம் ; கருப்பூரவகை ; நான்குமுழ அளவுள்ள நீட்டலளவை . |
| மார்புக்குழி | மார்பெலும்பின் கீழுள்ள குழி ; இதயம் , நுரையீரல் முதலிய உறுப்புகளடங்கிய நெஞ்சின் அறை . |
| மார்புச்சளி | நெஞ்சில் சளிபிடிக்கும் நோய்வகை . |
| மார்புநோவு | மார்பில் உண்டாகும் வலிவகை ; மார்த்தசையில் உண்டாகும் நோவுவகை . |
| மார்பெலும்பு | மார்பிலுள்ள எலும்பு . |
| மார்வம் | நெஞ்சு . |
| மார்வலி | காண்க : மார்புநோவு . |
| மாரகம் | சாவு ; இறப்பைத்தருவது ; கொடுமையான தொற்றுநோய் . |
| மாரகன் | சாவுக்குக் காரணமான கோள் ; சாவை உண்டாக்குவோன் . |
| மாரகாகளம் | மன்மத வாத்தியமான குயில் . |
| மாரசயன் | மாரனை வென்றவனான அருகன் . |
| மாரடித்தல் | இன்னற்படுதல் ; இழவில் அழும்போது மார்பில் மகளிர் அடித்துக்கொள்ளுகை . |
| மாரடைப்பு | நெஞ்சடைப்பு , மூர்ச்சை ; சூதகநோய் ; மார்பில் உண்டாகும் வலிவகை . |
| மாரணம் | சாவு ; அழித்தல் ; எண்வகை மாயவித்தையுள் ஒருவனை மந்திரத்தால் இறக்கச் செய்யும் வித்தை . |
| மாரதந்தி | காமன் யானையான இருள் . |
| மாரதன் | தான் ஒருவனே பத்தாயிரம் வீரரை எதிர்த்துப் போர் செய்யவல்ல தேர்வீரன் . |
| மாரப்பற்று | கருப்பூரவகை . |
| மாரபேரி | காமன் முரசான கடல் . |
| மாரம் | செடிவகை . |
| மாரவேள் | காமன் . |
| மாரன் | மன்மதன் ; புத்தரை மயக்க முயன்று தோற்ற ஒரு தேவன் . |
| மாரனாலயம் | மன்மதன் இருக்கை ; பெண்குறி . |
| மாராட்டம் | துன்பம் ; ஆள்மாறாட்டம் ; மகாராட்டிரதேசம் ; ஊர் . |
| மாராப்பு | பெண்கள் தம் மார்பின் குறுக்கேயிடும் சீலைப்பகுதி ; முதுகுடன் இணைத்து மூட்டை கட்டுங் கச்சை . |
| மாராயஞ்சொல்லுதல் | நற்செய்தி கூறுதல் . |
| மாராயம் | வேந்தனால் பெறும் சிறப்பு ; மகிழ்ச்சி ; நற்செய்தி ; பாராட்டுச்சொல் ; பெண் பூப்படைந்தமையைச் சுற்றத்தாருக்கு அறிவிக்கை . |
| மாராயவஞ்சி | அரசனாற் சிறப்பெய்திய வெற்றி வீரனின் பெற்றிமை கூறும் புறத்துறை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 869 | 870 | 871 | 872 | 873 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாயோனாள் முதல் - மாராயவஞ்சி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நெஞ்சு, காண்க, மார்பில், முலை, மார்பின், உண்டாகும், காமன், மன்மதன், நற்செய்தி, தான், கருப்பூரவகை, வலிவகை, சாவு, மார்புநோவு, மார்புச்சளி, மார்க்கவம், நீட்டலளவை, அளவுள்ள, நான்குமுழ, மார்பு, ஒன்று, புண், மார்கழி, மார்பெலும்பு, குறுக்கேயிடும், மாதம்

