தமிழ் - தமிழ் அகரமுதலி - மாலைமாற்று முதல் - மாற்றான் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மாலைமாற்று | எழுத்துகளை ஈறுமுதலாகப் படிக்குமிடத்தும் பாட்டு மாறாமலிருக்கும் மிறைக்கவிவகை ; திருமணத்தில் மாலை மாற்றுதல் . |
| மாலைமாற்றுதல் | திருமணத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மாறிமாறி மாலையிடுதல் . |
| மாலையணி | ஓர் அணிவகை . |
| மாலையணிதல் | மாலையால் அலங்கரித்தல் ; புணர்ச்சியின்பந் துய்த்தல் . |
| மாலையந்தி | காண்க : மாலைநேரம் . |
| மாலையிட்டவன் | கணவன் . |
| மாலையிடுதல் | காண்க : மாலைசூட்டுதல் . |
| மாலையீடு | காண்க : மாலைசூட்டு ; உடன்கட்டையேறிய பெண்ணின் பொருட்டு எழுப்பிய நினைவுக் கூட்டம் ; அரசர் முதலியவரின் நினைவுச்சின்னம் அமைந்த ஈமம் . |
| மாலையுவமை | பூமாலைபோல் உவமை பல ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் வரும் அணிவகை . |
| மாலைவாங்குதல் | மாலையை விலைக்கு வாங்குதல் ; பரிசங் கொடுத்தல் . |
| மாலைவெயில் | அந்திப்பொழுதின் மஞ்சள் வெயில் . |
| மாலைவெள்ளி | அந்தியில் தோன்றும் சுக்கிரன் . |
| மாலோகம் | மேலேழுலகத்துள் ஒன்று ; மிகுதி . |
| மாலோன் | காண்க : மாலவன் ; இந்திரன் . |
| மாவட்டணம் | நெடும்பரிசை . |
| மாவட்டம் | மாநிலத்தின் ஒரு பிரிவு . |
| மாவடம் | மாம்பலகை . |
| மாவடி | மாவடு ; மாவடுவின் பிளவு . |
| மாவடு | மாவின் பிஞ்சு . |
| மாவடை | நிலத்திலடங்கிய விலங்குகள் ; ஊரில் கால்நடை அடையும் இடம் . |
| மாவயிரக்கல் | நிலத்தில் அகப்படுங் கனிப்பொருள்வகை . |
| மாவரி | சல்லடை . |
| மாவலன் | குதிரையேற்றத்தில் வல்லவன் ; குதிரைப்பாகன் ; யானைப்பாகன் . |
| மாவலான் | குதிரையேற்றத்தில் வல்லவன் ; குதிரைப்பாகன் ; யானைப்பாகன் . |
| மாவலி | திருமாலால் ஒடுக்கப்பட்ட ஓர் அசுரன் ; தீப்பொறி சிதறும் கார்த்திகை வாணவகை . |
| மாவிட்டம் | கடல்நுரை . |
| மாவிடை | காண்க : மாவடை . |
| மாவித்தன் | காண்க : மாவுத்தன் . |
| மாவிரதம் | சைவ உட்சமயங்களுள் ஒன்று ; பாதகங்கள் யாவும் விலகக்கொள்ளும் உறுதிமொழி . |
| மாவிரதியர் | மாவிரத சமயத்தைச் சார்ந்த சைவத்துறவியர் . |
| மாவிருக்கம் | காண்க : சதுரக்கள்ளி . |
| மாவிலங்கம் | ஒரு மரவகை . |
| மாவிலங்கு | ஒரு மரவகை ; இலிங்கபாடாணம் . |
| மாவிலங்கை | இலிங்கபாடாணம் ; திண்டிவனத்திலிருந்த ஓய்மான் நல்லியக்கோடனது தலைநகர் . |
| மாவிலிங்கம் | ஒரு மரவகை ; இலிங்கபாடாணம் . |
| மாவிலைத்தோரணம் | மங்கலமாக வீடு முதலியவற்றின் முகப்பில் மாவிலையாற் கட்டுந்தோரணம் . |
| மாவிளக்கு | மாவினாற் செய்த நெய்விளக்கு . |
| மாவிளம் | வில்வமரம் . |
| மாவுத்தன் | யானைப்பாகன் . |
| மாவெனல் | அழைத்தற்குறிப்பு . |
| மாழ்கி | காண்க : தொட்டாற்சிணுங்கி . |
| மாழ்கு | மிருகசீரிடநாள் ; சுருள் . |
| மாழ்குதல் | மயங்குதல் ; கெடுதல் ; சோம்புதல் ; கலத்தல் . |
| மாழாத்தல் | மயங்குதல் ; ஒளிமழுங்குதல் . |
| மாழாம்பலம் | தூக்கம் . |
| மாழை | இளமை ; அழகு ; பேதைமை ; மாமரம் ; மாவடு ; மாதர் கூட்டம் ; ஓலை ; உலோகக்கட்டி ; பொன் ; திரட்சி . |
| மாள | ஒரு முன்னிலை அசை . |
| மாளம் | கத்தூரி . |
| மாளயம் | புரட்டாசி மாதத்தில் இறந்தவரை நினைத்து அன்னார்க்குச் செய்யும் சிராத்தம் ; சாந்திரமான மாதத்துத் தேய்பிறை . |
| மாளவகவுளம் | ஒரு பண்வகை . |
| மாளவி | ஒரு பண்வகை . |
| மாளிகை | அரண்மனை ; கோயில் ; மாடிவீட்டின் மேல்நிலம் ; மாடமுள்ள பெருவீடு ; வீடு . |
| மாளிகைச்சாந்து | உயர்ந்த கலவைச்சந்தனம் . |
| மாளுதல் | சாதல் ; அழிதல் ; கழிதல் ; இயலுதல் . |
| மாளை | புளியம்பட்டை . |
| மாற்சரியம் | பொறாமை . |
| மாற்ற | ஓர் உவமச்சொல் . |
| மாற்றம் | சொல் ; விடை ; வஞ்சினமொழி ; மாறுபட்ட நிலை ; பகை ; கழுவாய் ; வாதம் . |
| மாற்றல் | கொடாமை ; ஒன்று கொடுத்து ஒன்று வாங்கல் ; ஒன்றை வேறொன்றாக்கல் ; தீர்த்தல் ; இடம் மாறல் ; மாற்றுதல் . |
| மாற்றலர் | பகைவர் . |
| மாற்றவள் | காண்க : மாற்றான் . |
| மாற்றாட்டி | காண்க : மாற்றான் . |
| மாற்றாண்மை | பகைமை . |
| மாற்றாந்தாய் | தந்தையின் மறுதாரம் . |
| மாற்றாள் | சக்களத்தி . |
| மாற்றான் | பகைவன் ; ஒட்டுப்பலகை ; மாற்று மருந்து . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 871 | 872 | 873 | 874 | 875 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாலைமாற்று முதல் - மாற்றான் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, மாவடு, மரவகை, யானைப்பாகன், மாற்றான், இலிங்கபாடாணம், பண்வகை, மாவுத்தன், மயங்குதல், வீடு, குதிரைப்பாகன், இடம், மாலையிடுதல், மாற்றுதல், திருமணத்தில், அணிவகை, கூட்டம், குதிரையேற்றத்தில், சொல், மாவடை, வல்லவன்

