தமிழ் - தமிழ் அகரமுதலி - மாமி முதல் - மாயோனாடல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மாமி | அம்மான் மனைவி ; மனைவியின் அல்லது கணவனின் தாய் ; அத்தை . |
| மாமிசதாரி | புலாலுண்போன் . |
| மாமிசபட்சணி | புலாலுண்ணி . |
| மாமிசபேதி | தசையைக் கரைவிக்கும் ஒரு பூண்டுவகை . |
| மாமிசம் | தசை ; இறைச்சி . |
| மாமியார் | காண்க : மாமி . |
| மாமுகத்தன் | விநாயகர் . |
| மாமுகவன் | விநாயகர் . |
| மாமுனி | பெருந்துறவி ; அருகன் ; வசிட்டன் ; நாயுருவிச்செடி . |
| மாமூல் | பரம்பரை வழக்கம் . |
| மாமேரு | மேருமலை . |
| மாமை | நிறம் ; அழகு ; கருமை ; மேனி ; துன்பம் . |
| மாமோகம் | ஐம்புல நுகர்ச்சியிற் பற்று . |
| மாய்ச்சல் | காண்க : மாய்ப்பு . |
| மாய்ச்சி | பூட்டுவிலங்கு . |
| மாய்த்தல் | மறைத்தல் ; கொல்லுதல் ; அழித்தல் ; வருத்துதல் ; தீட்டுதல் . |
| மாய்தல் | மறைதல் ; அழிதல் ; சாதல் ; ஒளி மழுங்குதல் ; கவலை மிகுதியால் வருந்துதல ; அறப்பாடுபடுதல் ; மறத்தல் . |
| மாய்ப்பு | மாய்த்தல் ; சாவு ; மறைவு . |
| மாய்மாலம் | பாசாங்கு ; மோசடி . |
| மாய்வு | சாவு ; மறைவு . |
| மாயக்கள்ளி | மயக்கி ஏமாற்றுபவள் . |
| மாயக்காரன் | வஞ்சகன் ; மாயவித்தைக்காரன் . |
| மாயக்காரி | காண்க : மாயக்கள்ளி . |
| மாயக்குரம்பை | காண்க : மாயாதேகம் . |
| மாயக்கூத்தன் | திருமால் . |
| மாயசாலம் | வஞ்சனை . |
| மாயப்புணர்ச்சி | தலைவன் தலைவியரது களவுக்கூட்டம் . |
| மாயப்பெண் | மாறுவேடம் பூண்ட பெண் ; பெண் வேடம் பூண்ட ஆண் . |
| மாயப்பொடி | மாயத்தன்மை செய்யும் பொடி . |
| மாயப்போர் | அற்புதமான போர் ; வஞ்சகயுத்தம் . |
| மாயம் | மாயை ; வஞ்சனை ; பித்தளை ; பாசாங்கு ; அறியாமை ; கனவு ; பொய் ; நிலையின்மை ; வியப்பு ; அழகு ; தீமை ; கயமைத்தன்மை ; கறுப்பு ; உயரம் ; நீளம் ; தொகை . |
| மாயமந்திரம் | மாயம்பண்ணும் மந்திரம் . |
| மாயரூபம் | மெய்போலத் தோற்றும் பொய்யுருவம் . |
| மாயவண்ணன் | திருமால் . |
| மாயவள் | கரியநிறமுடையவள் ; துர்க்கை ; தெய்வப்பெண் ; காண்க : இடாகினி . |
| மாயவன் | திருமால் . |
| மாயவிஞ்சை | இந்திரசால வித்தை . |
| மாயவித்தை | இந்திரசால வித்தை . |
| மாயவேடம் | பொய்வேடம் . |
| மாயன் | கரியவன் ; திருமால் ; வஞ்சகன் . |
| மாயாகாரியம் | மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன ; தனுகரண புவன போகங்களாகிய மாயையின் விளைவுகள் . |
| மாயாசத்தி | மாயையாகிய சத்தி . |
| மாயாசூனியம் | மாயையால் மறைவின்மை . |
| மாயாதேகம் | நிலையற்ற வுடல் . |
| மாயாதேவி | மாயையாகிய தேவி ; கௌதமபுத்தரின் தாய் . |
| மாயாபஞ்சகம் | தமம் , மாயை , மோகம் , அவித்தை , அநிருதம் என்னும் ஐந்து விதமாயுள்ள மாயை . |
| மாயாபாசம் | மாயையாகிய பந்தம் . |
| மாயாபுரி | உடம்பு ; பித்தளை ; அரித்துவாரம் என்னும் புண்ணியத்தலம் . |
| மாயாவி | மாயை செய்வோன் ; அமானுடசத்தியால் வேண்டும் உருக்கொள்வோன் ; வஞ்சகன் . |
| மாயாவிநோதம் | இந்திரசால வித்தை . |
| மாயாவிமோசனம் | மாயையினின்று நீங்குகை . |
| மாயி | துர்க்கை ; ஆண்பெண்களைக் களவிற்புணர்ப்பிக்கும் ஆண்மகன் ; மாயாவாதி . |
| மாயிடம் | எருமை . |
| மாயிரம் | புறமாயுள்ளது . |
| மாயுநாடி | காண்க : பித்தநாடி . |
| மாயூரம் | மயில் ; மயிலாடுதுறை என்னும் சிவதலம் . |
| மாயேயம் | ஐந்து மலத்துள் ஒன்றும் அசுத்த மாயையின் காரியமுமான கலை , வித்தை , இராகம் , புருடன் , மாயை , காலம் , நியதி முதலிய ஏழு தத்துவங்கள் . |
| மாயை | மூலப்பிரகிருதி ; விந்து , மோகினி ; மாயேயம் என்னும் மூவகைப்பட்ட மலம் ; மாயா பஞ்சகத்துள் ஒன்றாகிய மாயை ; பொய்த் தோற்றம் ; மாயவித்தை ; வஞ்சகம் ; அமானுடசத்தி ; காளி ; பார்வதி ; காண்க : அசுத்தமாயை ; மாயாதேவி ; மாயாபுரி ; திரோதான சத்தி ; ஒரு நரகவகை . |
| மாயையுற்றாள் | காளி . |
| மாயோள் | கருநிறமுடையவள் ; மாமை நிறமுடையவள் ; பெண் ; வஞ்சகி . |
| மாயோன் | கருநிறமுடையோன் ; திருமால் . |
| மாயோன்பூடு | காண்க : மால்தொடை . |
| மாயோன்மருகன் | திருமாலின் மருகனான முருகக்கடவுள் . |
| மாயோனாடல் | அல்லியம் , மற்கூத்து , குடக்கூத்து எனத் திருமாலாடிய கூத்துவகைகள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 868 | 869 | 870 | 871 | 872 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாமி முதல் - மாயோனாடல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மாயை, திருமால், வித்தை, என்னும், வஞ்சகன், இந்திரசால, பெண், மாயையின், மாயையாகிய, துர்க்கை, மாயேயம், காளி, மாயாபுரி, ஐந்து, மாயவித்தை, சத்தி, மாயாதேவி, பித்தளை, பூண்ட, அழகு, மாய்ப்பு, மாமை, விநாயகர், தாய், மாய்த்தல், சாவு, மாயாதேகம், வஞ்சனை, மாயக்கள்ளி, பாசாங்கு, மறைவு, மாமி

