தமிழ் - தமிழ் அகரமுதலி - மாதுபங்கன் முதல் - மாமான் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மாதுபங்கன் | காண்க : மாதொருபாகன் . |
| மாதுமை | பெண்தன்மை ; அறிவின்மை . |
| மாதுரம் | மல்லிகைவகை . |
| மாதுரி | சாராயம் . |
| மாதுரியம் | இனிமை . |
| மாதுருகோத்திரம் | தாய்வழிச்சுற்றம் . |
| மாதுலங்கம் | காண்க : கொம்மட்டிமாதுளை ; மரவகை . |
| மாதுலன் | காண்க : மாமன் . |
| மாதுலி | மாமன் மனைவி ; காண்க : மாதலி . |
| மாதுலுங்கம் | காண்க : மாதுலங்கம் . |
| மாதுவம் | கள் ; பேரீந்து . |
| மாதுவான் | பெண்குதிரை ; நகச்சுற்று . |
| மாதுளங்கம் | காண்க : மாதுலங்கம் . |
| மாதுளம் | ஒரு மரவகை ; பேரெலுமிச்சை . |
| மாதுளை | ஒரு மரவகை ; பேரெலுமிச்சை . |
| மாதூகரம் | காண்க : மாதுகரம் . |
| மாதேவன் | சிவபிரான் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் . |
| மாதேவி | பார்வதி ; பட்டத்தரசி ; செங்கழுநீர்ப்பூ . |
| மாதொருபாகன் | சிவன் . |
| மாதோ | ஓர் அசைச்சொல் . |
| மாதோபவாசம் | ஒரு மாதகாலம் பட்டினியிருக்கை . |
| மாதோயம் | கடல் ; பெருநீர் . |
| மாந்தக்கொதி | குழந்தைநோய்வகை . |
| மாந்தசன்னி | மாந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் சன்னி . |
| மாந்தம் | குழந்தைநோய்வகை ; ஒரு புல்வகை ; மந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் கணைநோய் ; செரியாமை . |
| மாந்தர் | மனிதர் ; ஆடவர் ; ஊர்காவலர் . |
| மாந்தளிர் | துவர் பத்தனுள் ஒன்றாகிய மாமரத்துளிர் . |
| மாந்தளிர்க்கல் | ஒரு மாணிக்கவகை . |
| மாந்தளிர்ச்சிலை | காவிக்கல் . |
| மாந்தளிர்நாணான் | மன்மதன் . |
| மாந்தன் | ஆண்மகன் ; வாழைவகை . |
| மாந்தி | மாமரம் ; கலியாணச்சடங்கு ; காண்க : குளிகன் . |
| மாந்திரிகன் | மந்திரபலத்தால் சிறப்பாற்றலைச் செலுத்துபவன் . |
| மாந்திரீகம் | மந்திரபலத்தால் சிறப்பாற்றலைச் செலுத்தும் வித்தை . |
| மாந்துதல் | குடித்தல் ; உண்ணுதல் ; வருந்துதல் ; அவிந்தடங்கல் ; இறத்தல் ; நுகர்தல் ; ஊக்கமழிதல் . |
| மாந்தை | ஒரு நோய்வகை ; ஒரு நகரம் . |
| மாநாகம் | ஒரு பாம்புவகை . |
| மாநிருத்தாதனம் | ஒரு காலைத் தூக்கி நிற்கும் யோகநிலை . |
| மாநிலம் | ஒரு நாட்டின் பெரும்பிரிவு ; பூமி . |
| மாநிறம் | மாந்தளிர்போன்ற நிறம் . |
| மாப்பிள்ளை | மணவாளப்பிள்ளை ; மகளின் கணவன் ; மைத்துனன் ; மாமன்மகன் ; மாமி மகன் ; தங்கை கணவன் ; ஒரு பட்டப்பெயர் ; ஒரு முகம்மதிய வகுப்பார் . |
| மாப்பு | மன்னிப்பு ; மிகுதி ; மீன்றிரள் . |
| மாப்புவிடுதல் | மன்னித்தல் . |
| மாபலன் | காற்று . |
| மாபனம் | அளவு ; தராசு . |
| மாபாடியம் | பேருரை ; பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை . |
| மாபாதகம் | காண்க : மகாபாதகம் . |
| மாபாவி | பெரும்பாவி . |
| மாபுலி | சிங்கம் . |
| மாபுறயாகம் | வெளிப்பூசை . |
| மாபெலை | பார்வதி . |
| மாம்பழம் | மாங்கனி ; புடைவை உடுத்தும்போது செருகும் முடிப்பு . |
| மாம்பால் | மாங்காயின் காம்பிலுண்டாம் பால் ; ஒரு கூழ்வகை . |
| மாம்போழ் | மாவடுவின் பிளவு . |
| மாமகம் | காசாயவகை ; காண்க : மகாமகம் . |
| மாமகன் | அம்மான் ; இவறலன் ; திருமகளின் மகனான மன்மதன் . |
| மாமடி | கணவன் அல்லது மனைவியின் தந்தை ; தாயின் உடன்பிறந்தான் . |
| மாமடிகள் | கணவன் அல்லது மனைவியின் தந்தை ; தாயின் உடன்பிறந்தான் . |
| மாமணி | மாணிக்கம் . |
| மாமரம் | ஒரு மரவகை . |
| மாமல்லை | மாமல்லபுரம் என்னும் ஊர் . |
| மாமலர் | காண்க : சரக்கொன்றை . |
| மாமன் | தாயுடன் பிறந்தோன் ; கணவன் அல்லது மனைவியின் தந்தை ; மாமனார் ; அத்தை கணவன் ; சிற்சில வகுப்புப் பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் பெயர் . |
| மாமனார் | கணவன் அல்லது மனைவியின் தந்தை . |
| மாமா | காண்க : மாமன் . |
| மாமாங்கம் | கும்பகோணத்தில் பன்னீராண்டுகட்கு ஒரு முறை மாசிமகத்தன்று நிகழும் ஒரு திருமுழுக்கு விழா . |
| மாமாத்திரன் | மருத்துவன் . |
| மாமாத்து | மிகப்பெரியது ; பெருஞ்செருக்கு ; மாய்மாலம் . |
| மாமாயை | பார்வதி ; சுத்தமாயை . |
| மாமாலம் | பெருவஞ்சனை ; பாசாங்கு . |
| மாமான் | காண்க : மாமன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 867 | 868 | 869 | 870 | 871 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாதுபங்கன் முதல் - மாமான் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கணவன், மாமன், மனைவியின், மரவகை, அல்லது, தந்தை, பார்வதி, மாதுலங்கம், பேருரை, மாமனார், தாயின், உடன்பிறந்தான், மன்மதன், குழந்தைநோய்வகை, பேரெலுமிச்சை, மாதொருபாகன், குழந்தைகளுக்கு, வரும், மந்திரபலத்தால், மாமரம், சிறப்பாற்றலைச்

