தமிழ் - தமிழ் அகரமுதலி - மாணவி முதல் - மாதுகரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மாணவி | காண்க : மாணாக்கி . |
| மாணாக்கன் | பள்ளியில் படிக்கும் சிறுவன் . |
| மாணாக்கி | பள்ளியில் படிக்குஞ் சிறுமி . |
| மாணார் | மாட்சிமையற்ற பகைவர் . |
| மாணி | பிரமசாரி ; குறள்வடிவம் ; அழகு ; ஆண்குறி . |
| மாணிக்கத்தாள் | விலைமகள் . |
| மாணிக்கப்பட்டை | கோயிலின் திருமதில் முதலியவற்றில் அடிக்கும் சிவப்புப்பட்டை . |
| மாணிக்கப்பீடம் | மணிவைத்து இழைத்த மோதிரம் . |
| மாணிக்கம் | ஒன்பான் மணியுள் ஒன்றான சிவப்பு மணி . |
| மாணிக்கமாலை | வெள்ளை சிவப்பு வளையங்கள் மாறிமாறிவரத் தொடுத்த பூமாலைவகை . |
| மாணை | ஒரு கொடிவகை . |
| மாத்தகை | பெருந்தகுதியுள்ளவன் . |
| மாத்தான் | பெரியோன் . |
| மாத்திக்கு | வீட்டுநெறி . |
| மாத்திரத்தில் | உடனே . |
| மாத்திரம் | தனிமை ; மட்டும் ; அளவு ; தும்பி . |
| மாத்திரை | கணப்பொழுது ; கண்ணிமைத்தல் அல்லது கைந்நொடித்தல் அளவான காலம் ; செய்யுளில் வரும் எழுத்தொலியின் அளவு ; குற்றெழுத்து ; குருவிற்பாதி ; காலவிரைவு ; மிகச் சுருக்கமான இடம் ; குளிகை ; துறவியின் தண்டகமண்டலங்கள் ; பேறு . |
| மாத்திரைக்கோல் | சித்தர் முதலியோர் கையில் கொள்ளும் மந்திரக்கோல் ; மந்திரவாதியின் கைக்கோல் ; அளவுகோல் . |
| மாத்து | பெருமை ; செருக்கு ; சதுரங்க ஆட்டத்தில் அரசனை அசையவொண்ணாது பேதாக்காய் தடுத்துநிற்கை . |
| மாத்துவம் | பெருமை ; காண்க : துவைதம் . |
| மாதங்கம் | யானை ; அரசமரம் ; இளமை ; கடல் ; உத்தி ; தலையணிவகை . |
| மாதங்கன் | கீழ்மகன் ; வேடன் ; அரசமாதுக்கும் வேடனுக்கும் பிறந்தோன் ; புலையன் . |
| மாதங்கி | காளி ; பார்வதி ; யாழ்த்தெய்வம் ; ஆடல்பாடலில் வல்லவள் . |
| மாதண்டம் | இராசவீதி . |
| மாதத்தீட்டு | காண்க : மாதவிடாய் . |
| மாததூரம் | காண்க : மாதவிடாய் . |
| மாதப்பிறப்பு | சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் போகும் காலம் ; மாதத்தின் முதல் நாள் . |
| மாதம் | ஏறக்குறைய முப்பது நாட்கொண்ட காலம் . |
| மாதர் | பெண் ; அழகு ; பொன் ; காதல் ; ஓர் இடைச்சொல் . |
| மாதராள் | பெண் . |
| மாதரி | காளி ; கண்ணகியைப் போற்றிய ஓர் இடைச்சி . |
| மாதலம் | கீழேழுலகத்துள் ஒன்று . |
| மாதலி | இந்திரனின் சாரதி . |
| மாதவம் | பெருந்தவம் ; இளவேனில் ; வைகாசி மாதம் ; இனிமை ; மது . |
| மாதவர் | சிறந்த தவத்தினையுடையவர் , முனிவர் . |
| மாதவர்பள்ளி | முனிவர் ஆசிரமம் . |
| மாதவழிச்செலவு | மாதச்செலவு . |
| மாதவறுதி | மாதமுடிவு . |
| மாதவன் | திருமால் ; வசந்தன் . |
| மாதவி | துளசி ; துர்க்கை ; கிருட்டினனின் தங்கையான சுபத்திரை ; கூட்டிக்கொடுப்பவள் ; காண்க : கள்ளி ; சீனி ; கோவலனின் ஆசைநாயகி ; கண்ணன் மனைவி ; குருக்கத்திக்கொடி ; பனைவெல்லம் . |
| மாதவிகொழுநன் | அருச்சுனன் . |
| மாதவிடாய் | மகளிரின் மாதத்தீட்டு . |
| மாதவிப்பந்தல் | குருக்கத்திக் கொடிகளாலான பந்தல் . |
| மாதளை | காண்க : மாதுளை . |
| மாதா | தாய் ; பார்வதி ; அறிபவன் ; கலைமகள் . |
| மாதாந்தம் | மாதந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுகை ; காண்க : மாசாந்தம் . |
| மாதாந்தரம் | மாதந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுகை ; காண்க : மாசாந்தம் . |
| மாதாமகன் | தாயைப் பெற்ற பாட்டன் . |
| மாதாமகி | தாயைப் பெற்ற பாட்டி . |
| மாதானுபங்கி | திருவள்ளுவர் . |
| மாதி | வட்டமாயோடல் ; கோளின் சுற்று ; மாமரம் . |
| மாதிகம் | குதிரைபோகும் வழி . |
| மாதிமை | தகுதி ; காதல் . |
| மாதிரம் | வானம் ; திசை ; மலை ; யானை ; நிலம் ; மண்டிலம் . |
| மாதிரி | காண்க : அதிவிடை ; தினுசு , முறை ; தன்மை . |
| மாதிரிகை | தினுசு ; முறை ; தன்மை ; மூலப்படி . |
| மாதிரு | மாதா ; வானம் ; திருமகள் ; பசு ; பூமி ; பார்ப்பனி ; இரேவதி . |
| மாதிருகை | நெடுங்கணக்கு ; கைத்தாய் ; தாய் ; தேவி . |
| மாது | பெண் ; அழகு ; காதல் ; பெருமை ; குற்றம் ; ஓர் அசைச்சொல் . |
| மாதுகரம் | வண்டுகள் பல மலர்களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பல வீடுதோறும் சென்று பிச்சையெடுத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 866 | 867 | 868 | 869 | 870 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாணவி முதல் - மாதுகரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மாதவிடாய், பெருமை, காதல், சென்று, காலம், பெண், அழகு, மாசாந்தம், வழிபடுகை, மாணாக்கி, கோயிலுக்குச், தாயைப், பெற்ற, தன்மை, முறை, தினுசு, வானம், மாதந்தோறும், தாய், மாதத்தீட்டு, பார்வதி, காளி, யானை, சிவப்பு, மாதம், மாதா, முனிவர், பள்ளியில், அளவு

