தமிழ் - தமிழ் அகரமுதலி - கோட்டரவு முதல் - கோடாஞ்சி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கோடதகம் | சுக்கு . |
| கோடபதி | கோடவதி ; உதயணனுடைய யாழ் . |
| கோடம் | பேரொலி ; வெண்கலம் ; எல்லை ; குதிரை ; கோட்டை ; குடில் ; மாமரம் ; வளைவு ; செங்கருங்காலி ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று ; ஒருகால் முடம் . |
| கோடரம் | மரக்கொம்பு ; மரம் ; சோலை ; தேரின் மொட்டு ; எட்டிமரம் ; குரங்கு ; மரப்பொந்து ; குதிரை . |
| கோடரவம் | துன்பம் , வருத்தம் . |
| கோடரி | கோடாலி , மரம்வெட்டுங் கருவி . |
| கோடரிக்காம்பு | கோடாலியின் பிடி ; தன்குலத்தை அழிப்பவன் . |
| கோடல் | கொள்ளுகை ; பாடம் கேட்கை ; மனத்துக்கொள்ளுகை ; வளைவு ; முறித்தல் ; வெண்காந்தள் . |
| கோடாவதி | வீணை . |
| கோடவி | துர்க்கை . |
| கோடா | சாராய வண்டல் ; கேலி . |
| கோடாகோடி | காண்க : கோடானுகோடி . |
| கோடாங்கி | வரிக்கூத்துவகை ; மாதராடை ; உடுக்கை . |
| கோடாசலம் | பேதியைக் கட்டும் மருந்துவகை . |
| கோடாசுழி | கோடகசாலைப்பூண்டு . |
| கோடாஞ்சி | பெரிய மரவகை . |
| கோட்டரவு | மனவருத்தம் ; வாட்டம் ; துன்பம் . |
| கோட்டலை | துன்பம் ; விகடக்கூத்து ; மூடநடத்தை ; சரசம் . |
| கோட்டான் | கூகை ; கொக்குவகை . |
| கோட்டி | துன்பம் ; பைத்தியம் ; பசுடி ; நிந்தை ; சபை ; குழு ; கூட்டம் ; பேச்சு ; அழகு ; ஒருவரோடு கூடியிருக்கை ; கோபுரவாயில் ; மனைவாயில் ; கிட்டிப்புள் ; விகடக்கூத்து . |
| கோட்டிக்காரன் | பைத்தியக்காரன் . |
| கோட்டிகொள்ளுதல் | அவையிற் பேசுதல் ; துன்புறுத்தல் ; இகழ்தல் . |
| கோட்டித்தல் | ஆரவாரித்தல் . |
| கோட்டிலக்கம் | வகுத்த மிச்சம் ; ஒருவகைச் சதுரக்கணக்கு . |
| கோட்டினம் | எருமைக்கூட்டம் . |
| கோட்டு | நெற்கூடு ; சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையும் பிடித்து வெல்லுதல் . |
| கோட்டுதல் | வளைத்தல் ; ஓவியம் வரைதல் ; முறித்தல் ; கட்டுதல் . |
| கோட்டுநூறு | கிளிஞ்சிற் சுண்ணாம்பு . |
| கோட்டுப்பூ | மரக்கொம்புகளில் தோன்றும் பூ . |
| கோட்டுமண்கொள்ளுதல் | மண்ணைக் கொம்பாற் குத்திக் கிளறுதல் . |
| கோட்டுமலை | கொம்புள்ள மலையாகிய யானை . |
| கோட்டுமா | யானை ; காட்டுப்பன்றி ; எருமைக் கடா . |
| கோட்டுமீன் | சுறாமீன் . |
| கோட்டுவாத்தியம் | வீணைவகை . |
| கோட்டுவாய் | கோடைவாய் ; கொட்டாவி . |
| கோட்டுவான் | கோட்டான் ; ஒரு நீர்ப்பறவை வகை . |
| கோட்டூர்தி | யானைத்தந்தத்தாற் செய்த பல்லக்கு . |
| கோட்டெங்கு | குலைகளையுடைய தெங்கு . |
| கோட்டை | மதிலரண் ; இஞ்சி ; காடு ; பூட்டின் ஓர் உறுப்பு ; வீட்டின் உள்ளிடம் ; இருபத்தொரு மரக்கால் கொண்ட ஓர் அளவை ; நெல்லை உள்ளே பெய்து கட்டிய நெற்கோட்டை ; ஒரு நிலவளவு ; வைக்கோற்போர் ; இலை , புளி முதலியவற்றின் கட்டு ; ஏராளம் ; பரிவேடம் . |
| கோட்டைகட்டுதல் | மதிலரண் எழுப்புதல் ; பெரும்பொருள் திரட்டுதல் ; மனோராச்சியம் செய்தல் ; பொய்க்கதை கட்டுதல் ; பரிவேடம் கொள்ளுதல் ; நெல்விதையைக் கோட்டையாகக் கட்டுதல் . |
| கோட்டைப்போர் | வைக்கோற்போர் . |
| கோட்டைபிடித்தல் | பகைவரது நாட்டைப் பிடித்தல் ; அரிய செயலைச் செய்துமுடித்தல் . |
| கோட்டைமேடு | அகழிககுப் புறம்பேயுள்ள மண்மேடு . |
| கோட்டைவெளி | கோட்டைக்கு வெளியிலுள்ள இடம் . |
| கோட்படுதல் | கொள்ளப்படுதல் , பிடிக்கப்படுதல் ; அறியப்படுதல் ; வலிமை கொள்ளுதல் . |
| கோட்படுபதம் | மாட்டுக்குளம்பு . |
| கோட்பறை | செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை . |
| கோட்பாடு | கொள்கை ; நடத்தை . |
| கோட்பு | கொள்ளுகை ; வலிமை . |
| கோட்புகுதல் | மரம் முதலியன பயன்கொள்ளும் பருவத்தனவாசல் . |
| கோடகசாலை | ஒரு பூண்டுவகை . |
| கோடகம் | முடியுறுப்புள் ஒன்று , சிகரமாகச் செய்த முடிவகை ; பல தெருக்கள் கூடுமிடம் ; குதிரை ; அசுவதிநாள் ; புதுமை ; குண்டிகை . |
| கோடங்கி | உடுக்கை ; உடுக்கை அடித்து குறிசொல்வோன் . |
| கோடங்கிழங்கு | சிற்றரத்தைச் செடி . |
| கோடணை | ஒலி ; முழக்கம் ; யாழ் வாசித்தல் ; வாச்சியப் பொது ; அலங்காரம் ; கொடுமை . |
| கோடணைபோக்குதல் | பெருமுழக்கம் உண்டாகச் செய்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 395 | 396 | 397 | 398 | 399 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோட்டரவு முதல் - கோடாஞ்சி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், துன்பம், கட்டுதல், குதிரை, உடுக்கை, செய்த, யானை, மதிலரண், பரிவேடம், வலிமை, கொள்ளுதல், செய்தல், வைக்கோற்போர், விகடக்கூத்து, ஒன்று, வளைவு, கோட்டை, மரம், கொள்ளுகை, யாழ், முறித்தல், கோட்டான்

