தமிழ் - தமிழ் அகரமுதலி - கோடாய் முதல் - கோணவாய் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கோடு | வளைவு ; நடுநிலை நீங்குகை ; யானையின் தந்தம் ; விலங்குகளின் கொம்பு ; ஊதுகொம்பு ; நீர்வீசுங் கொம்பு ; மரக்கொம்பு ; யாழ்த்தண்டு ; 'கெ' , 'கே' முதலிவற்றின் தலைப்பிலுள்ள கொம்புக் குறியீடு ; பிறைமதி ; சங்கு ; குலை ; மயிர்முடி ; மலையுச்சி ; மலை ; மேட்டு நிலம் ; வரி ; ஆட்டம் முதலியவற்றிற்கு வகுத்த இடம் ; நீர்க்கரை ; குளம் ; காலவட்டம் ; வரம்பு ; ஆடைக்கரை ; முனை ; பக்கம் ; அரணிருக்கை ; கொடுமை ; நீதிமன்றம் . |
| கோடுகீறுதல் | குறிப்பிட்டுக் காண்பித்தல் . |
| கோடுதல் | வளைதல் ; நெறிதவறுதல் ; நடுவுநிலைமை தவறுதல் ; வெறுப்புறுதல் . |
| கோடை | மேல்காற்று ; வேனிற்காலம் ; வெயில் ; கோடைப்பயிர் ; கோடைக்கானல் ; குதிரை ; வெண்காந்தள் ; செங்காந்தள் . |
| கோடைக்கிழங்கு | சிற்றரத்தை . |
| கோடைக்கொட்டை | நிலக்கடலை . |
| கோடைச்சவுக்கு | ஆற்றுச்சவுக்கு . |
| கோடைப்பூசணி | கோடைக்காலத்தில் காய்க்கும் பூசணிவகை . |
| கோடைப்போகம் | கோடைக்காலத்துப் பயிர் . |
| கோடையிடி | கோடைப்பருவத்து மழையிடி . |
| கோண் | வளைவு ; மாறுபாடு ; கொடுங்கோன்மை ; கோடம் ; நுண்ணிய பகுதி ; பாத்திரத்தின் மூக்கு . |
| கோண்டம் | குறிஞ்சாக்கொடி ; நெருஞ்சில் . |
| கோண்டன் | கீழ்மகன் ; பெருங்கொப்பூழன் . |
| கோண்டை | இலந்தைப்பழம் ; கமுகு . |
| கோண்மா | புலி , சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள் . |
| கோண்மீன் | கிரகம் . |
| கோண்விழுதல் | கோணலாதல் . |
| கோணக்களிகிண்டுதல் | குழப்பம் உண்டாக்குதல் . |
| கோணக்கொம்பு | வாங்கல் என்னும் ஊதுகருவி ; வளைவான கொம்பு . |
| கோணங்கி | கோமாளி ; உடுக்கையடித்துக் குறி சொல்வோன் . |
| கோணங்கிக்கூத்து | கோமாளிக்கூத்து ; ஒழுங்கற்ற நடையுடைகள் . |
| கோணங்கித்தாசரி | உடலைக் கோணலாக வளைத்து நடிக்கும் ஒர் இனத்தவன் . |
| கோணம் | வளைவு ; வளைந்த வாள் ; யானைத் தோட்டி ; சிறு தெரு ; குதிரை ; மூக்கு ; மூலை ; ஒதுக்குப்புறமான இடம் ; வயற்காடு , |
| கோணல் | வளைவு ; கூன் ; மாறுபாடு ; மனவுளைச்சல் . |
| கோணல்மாணல் | தாறுமாறு . |
| கோணல்மூஞ்சி | வெறுப்பு , சிரிப்பு முதலியவற்றை காட்டும் முகம் . |
| கோணவட்டம் | காண்க : கோணாவட்டம் . |
| கோணவாய் | கோணலாயுள்ள வாய் . |
| கோடாய் | செவிலித்தாய் . |
| கோடாரி | காண்க : கோடரி . |
| கோடாலம் | பிறைபோல் வளைந்த மாலைவகை . |
| கோடாலி | காண்க : கோடரி . |
| கோடாலிக்காம்பு | காண்க : கோடரிக்காம்பு . |
| கோடானுகோடி | பலகோடி ; அளவில்லாமை . |
| கோடி | நூறு நூறாயிரம் , நூறு லட்சம் ; சீலை ; புதுச்சீலை ; புதுமை ; வளைவு ; முடிமாலை ; தொகுதி ; அறுபத்துநான்க அக்குரோணி கொண்ட படை ; இருபது ; வரிசை ; நுனி ; கடலுட் செல்லும் தரைமுனை ; மூலை ; வீட்டின் புறக்கோடி ; விளிம்பு ; படையின் பிற்கூழை ; தேவைக்கு அதிகமான தண்ணீர் ; குறிப்பு: வயிரக் குணங்களுள் ஒன்று ; எல்லை . |
| கோடிக்கரை | தனுக்கோடி முதலிய தீர்த்த கட்டம் . |
| கோடிக்கரையான்தோணி | கள்ளத்தோணி . |
| கோடிக்கல் | கட்டடத்தின் மூலைக்கல் . |
| கோடிக்காரன் | மிக்க செல்வமுடையவன் ; கொடுக்கல்வாங்கல் செய்யும் மார்வாரி ; சீபாதம் தாங்கி . |
| கோடிக்குத்தல் | தெருப்பாய்ச்சல் . |
| கோடிகம் | பூந்தட்டு ; குண்டிகை ; அணிகலச் செப்பு ; ஆடை . |
| கோடிகர் | ஆடை நெய்வோர் . |
| கோடிகாண்பித்தல் | குறிப்புக் காட்டுதல் . |
| கோடித்தரை | விளைநிலமாகப் புதிதாகத் திருத்தப்பட்ட நிலம் . |
| கோடித்தல் | அலங்கரித்தல் ; ஒலித்தல் ; அமைத்தல் ; மனோரதஞ் செய்தல் ; வேண்டுதல் . |
| கோடிதீர்த்தம் | தனக்கோடி முதலிய கோடிக்கரை . |
| கோடிப்பருவம் | இளையப் பருவம் . |
| கோடிப்பாம்பு | பழக்கப்படாத பாம்பு . |
| கோடிப்பாலை | பாலைவகை ; ஒரு பண்வகை . |
| கோடிபோடுதல் | கணவன் இறந்தவுடன் கைம்பெண்ணுக்கு உற்றார் புதுப்புடவை இடுதல் . |
| கோடிமுரிதல் | வயிரக் குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று . |
| கோடியர் | கூத்தர் ; பல்லக்குத் தூக்குவோர் . |
| கோடியலூர்தி | யானைத் தந்தத்தாற் செய்யப்பட்ட வாகனம் . |
| கோடியில்லாமை | காண்க : கோடிமுரிதல் . |
| கோடியோடுதல் | ஏரி நீர்நிரம்பி வழிதல் . |
| கோடிரம் | கீரி ; இந்திரகோபம் . |
| கோடீசுவரன் | பெருஞ்செல்வன் . |
| கோடீரம் | முடி ; சடை ; இந்திரன் வில் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 396 | 397 | 398 | 399 | 400 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோடாய் முதல் - கோணவாய் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வளைவு, கொம்பு, முதலிய, கோடரி, நூறு, ஒன்று, கோடிமுரிதல், கோடிக்கரை, வயிரக், வளைந்த, இடம், நிலம், குதிரை, மாறுபாடு, யானைத், மூக்கு, மூலை

