தமிழ் - தமிழ் அகரமுதலி - கொற்றன் முதல் - கோகனகன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கொறித்துப்பார்த்தல் | நெல் குற்றுவதற்குப் பதமாக உள்ளதா என்று அறிய வாயிலிட்டுப் பதம் பார்த்தல் ; செருக்கால் வெறித்துப் பார்த்தல் . |
| கொறிதலை | நிலவேம்பு . |
| கொறு | கன்றின் வாய்ப்பூட்டு . |
| கொறுக்கச்சி | நாணல்வகை . |
| கொறுக்காய் | காண்க : கொடுக்காய்ப்புளி ; ஈழப்புளி . |
| கொறுக்காய்ப்புளி | காண்க : கொடுக்காய்ப்புளி ; ஈழப்புளி . |
| கொறுக்கு | ஆண்குறி நோய்வகை . |
| கொறுக்கை | நாணல் ; கடல் ; ஆண்குறி நோய்வகை . |
| கொறுக்கோல் | காண்க : கொறு . |
| கொறுகொறுத்தல் | சினங்கொள்ளல் ; குறட்டை விடுதல் . |
| கொறுகொறுவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; சினக் குறிப்பு . |
| கொறுடு | கன்னம் . |
| கொன் | பயனின்மை ; அச்சம் ; காலம் ; விடியற்காலம் ; பெருமை ; வலிமை . |
| கொன்றை | மரவகை ; சரக்கொன்றை ; செங்கொன்றை ; மஞ்சட்கொன்றை . |
| கொன்றைசூடி | கொன்றைமாலை சூடிய சிவன் . |
| கொன்றைப்பழக்குழல் | கொன்றைப்பழத்தைத் துளைத்துச் செய்யப்பட்ட ஊதுகுழல் . |
| கொன்றைவேந்தன் | சிவபெருமான் ; ஔவையார் இயற்றிய ஒரு நீதிநூல் . |
| கொன்றைவேய்ந்தன் | சிவபெருமான் ; ஔவையார் இயற்றிய ஒரு நீதிநூல் . |
| கொன்னாளன் | பயனற்றவன் ; பாவி . |
| கொன்னித்தல் | பேச நாத் திரும்பாதிருத்தல் . |
| கொன்னுதல் | திக்கிப் பேசுதல் , குழறுதல் . |
| கொன்னேச்சன் | மாட்டிற் பற்றும் ஈவகை . |
| கொன்னை | திருத்தமற்ற பேச்சு ; திக்கிப் பேசுகை , குழறுகை ; தொன்னை ; இகழ்ச்சி . |
| கொனை | நுனி . |
| கோ | ஒர் உயிர்மெய்யெழுத்து (க்+ஓ) ; இறைவன் ; பேரரசன் ; அரசன் ; தந்தை ; தலைமை ; மலை ; குயவன் ; பசு ; எருது ; தேவலோகம் ; வானம் ; பூமி ; திசை ; கதிர் ; சூரியன் ; சந்திரன் ; வச்சிரப்படை ; அம்பு ; கண் ; சொல் ; மேன்மை ; நீர் ; இரசம் ; இலந்தைமரம் ; இரங்கற்குறிப்பு . |
| கோக்கதவு | பெரிய கதவு |
| கோக்கலம் | வெண்கலப் பாத்திரம் . |
| கோக்காமரம் | கடலிற் செலுத்தும் கட்டுமர வகைகளில் ஒன்று ; தூக்குமரம் . |
| கோக்காலி | பாத்திரங்கள் வைப்பதற்குச் சுவரை ஒட்டி அமைக்கப்படும் சடடம் ; நெட்டையானவள் ; போரிலிருந்து வைக்கோலைத் கோத்தெடுக்கும் கருவி . |
| கோக்குஞ்சம் | அம்பறாத் தூணி . |
| கோகடம் | முயல்வகை . |
| கோகண்டம் | நெருஞ்சிற்பூண்டு . |
| கோகத்தி | பசுக்கொலையாகிய பாவம் . |
| கோகம் | சக்கரவாகப்புள் ; செந்நாய் ; தவளை ; உலர்ந்த பூ . |
| கோகயம் | தாமரை . |
| கோகரணம் | பசுப்போல் காதசைக்கும் வித்தை ; மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம் . |
| கோகருணி | பெருங்குரும்பை . |
| கோகலி | கடப்பமரம் . |
| கோகழி | திருவாவடுதுறை என்னும் சிவதலம் . |
| கோகன்னம் | மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம் ; யோகாசனவகை . |
| கோகனகத்தி | திருமகள் ; கலைமகள் . |
| கோகனகம் | செந்தாமரை . |
| கோகனகத்தோன் | தாமரையில் பிறந்தவனாகிய பிரமன் . |
| கோகனகன் | தாமரையில் பிறந்தவனாகிய பிரமன் . |
| கொற்றன் | காண்க : கொத்தன் . |
| கொற்றாள் | கல் மண்களில் வேலைசெய்பவர் . |
| கொற்றான் | இலையற்ற கொடிவகை . |
| கொற்றி | துர்க்கை ; ஒரு வரிக்கூத்துவகை ; பசுவின் இளங்கன்று . |
| கொற்றியார் | துளசிமாலை முதலிய சின்னங்களை அணிந்து திருமால் அடியராய்த் திரியும் பெண் துறவியர் ; கலம்பக உறுப்புகளுள் ஒன்று ; பிள்ளைப்பேற்றிற்குரிய தேவதை . |
| கொற்று | கொற்றுத்தொழில் ; கொற்றர் ; ஒரு கொத்தன் செய்யும் வேலையளவு ; உணவு ; தானியமாகப் பெறும் கூலி . |
| கொற்றுதல் | கொற்றல் . |
| கொற்றுறை | கொல்லன்பட்டரை . |
| கொற்றை | இழிவானது , கேவலமானது . |
| கொற்கொறனல் | தொண்டையின் கரகரப்புக் குறிப்பு . |
| கொறடா | குதிரைச் சவுக்கு ; ஏவுநர் . |
| கொறி | ஆடு ; மேடராசி ; பல் , அலகு முதலியவற்றால் தானியத்தைப் பிரித்துத் தின்னுதல் ; சிறிதுசிறிதாகப் பொறுக்கி உண்ணுதல் ; விட்டு விட்டு ஒலித்தல் ; அலப்புதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 393 | 394 | 395 | 396 | 397 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொற்றன் முதல் - கோகனகன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சிவதலம், உள்ள, மலைநாட்டில், ஒன்று, திக்கிப், பிறந்தவனாகிய, விட்டு, கொத்தன், பிரமன், நீதிநூல், தாமரையில், இயற்றிய, ஈழப்புளி, கொடுக்காய்ப்புளி, கொறு, பார்த்தல், ஆண்குறி, நோய்வகை, ஔவையார், சிவபெருமான், குறிப்பு, சொல்

