தமிழ் - தமிழ் அகரமுதலி - கோணன் முதல் - கோதை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கோத்திரசம் | ஒரு குலத்தில் தோன்றியது . |
| கோத்திரசன் | ஒரு குலத்தில் பிறந்தவன் . |
| கோத்திரப்பெயர் | குடிப்பெயர் . |
| கோத்திரம் | குலம் ; பூமி ; வரகு ; நெட்டிப்புல் . |
| கோத்திரமின்மை | மறுபிறப்புக்குரிய கருமம் இல்லாமையாகிய அருகன் எண்குணத்துள் ஒன்று . |
| கோத்திரவம் | வரகு . |
| கோத்திரி | நற்குலத்தோன் ; மலை ; முந்திரிகை மரம் ; சிறுபந்தம் . |
| கோத்திரிகை | முந்திரிகைமரம் . |
| கோத்திரை | பூமி . |
| கோத்திழைத்தல் | பாய் ; கூடை ; முதலியவற்றைப் பழுதுபார்த்தல் . |
| கோத்து | பட்டாளந் தங்குமிடம் . |
| கோத்துக்கொடுத்தல் | பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல் ; இருவருக்குள் பகையுண்டாகும்படி ஒருவர் பேச்சை மற்றவர்க்கு மாற்றி உரைத்தல் . |
| கோத்தும்பி | அரசவண்டு ; கோத்தும்பி என்னும் தொடரை ஈற்றில் கொண்டுவரும் பாடல்களையுடைய திருவாசகப் பதிகம் . |
| கோத்துவாங்குதல் | ஆடைக்கரையை வேறு நூலில் தனியாக நெய்தல் ; கோணி முதலின தைத்தல் . |
| கோத்துவிடுதல் | துன்பத்துக்கு உள்ளாக்குதல் ; பகைமூட்டுதல் . |
| கோத்தை | பழுது . |
| கோதடி | கப்பற்கயிற்றை உரைசாமற் காக்குந் தடி . |
| கோதண்டபாணி | கோதண்டத்தைக் கையில் கொண்டவனான இராமன் . |
| கோதண்டம் | வில் ; இராமனது வில் ; புருவநடு ; பண்டைக்காலத்தில் பள்ளிச் சிறாரைத் தண்டிக்கும் தொங்குகயிறு . |
| கோதந்தி | கன்னம் ; தாடை . |
| கோதம் | பொல்லாங்கு ; சினம் ; கோத்திரம் , குலம் . |
| கோதமநதி | கோதாவரி . |
| கோதல் | கேடடைந்த பொருள் . |
| கோதனம் | பசுவின் கன்று ; பசுச்செல்வம் . |
| கோதா | உடும்பு ; மற்கட்டுங் களம் . |
| கோதாட்டம் | வருந்துகை ; வஞ்சிக்கை ; குறும்பு விளையாட்டு . |
| கோதட்டு | வருந்துகை ; வஞ்சிக்கை ; குறும்பு விளையாட்டு . |
| கோதாட்டுதல் | சீராட்டுதல் ; குற்றங்களைப் போக்குதல் . |
| கோதாணி | பெருங்குரும்பை . |
| கோதாரி | கக்கல்கழிச்சல்நோய் , வாந்திபேதி ; கொள்ளைநோய் . |
| கோதாவரி | கோதாவரி ஆறு . |
| கோதாவிரி | கோதாவரி ஆறு . |
| கோதாளை | கப்பற்குழாயின் வாய் . |
| கோதானம் | ஒன்பது கொடைவகையுள் ஒன்றாகிய பசுக்கொடை . |
| கோதி | கோதுமை . |
| கோதிகை | உடும்பு ; முதலை . |
| கோது | சக்கை ; பழம் முதலியவற்றின்தோல் ; பூ முதலியவற்றின் நரம்பு ; குற்றம் ; பயனின்மை ; நெறிதவறுகை ; உள்ளக்களிப்பு . |
| கோதுகம் | உள்ளக்களிப்பு . |
| கோதுகலம் | உள்ளக்களிப்பு . |
| கோதுகுலம் | உள்ளக்களிப்பு . |
| கோதுதல் | மூக்கால் இறகைக் குடைதல் ; மயிர்ச்சிக்கெடுத்தல் ; சிதறச் செய்தல் ; தோண்டுதல் ; துளைத்தல் . |
| கோதும்பை | ஒரு கூலவகை . |
| கோதும | ஒரு கூலவகை . |
| கோதுமை | ஒரு கூலவகை . |
| கோதூளி | மாலைநேரம் . |
| கோதை | பெண்கள் தலைமயிர் ; ஆண்டாள் ; பூமாலை ; முத்தாரம் ; ஒழுங்கு ; பெண் ; சேரன் ; காற்று ; பூதம் ; உடும்பு ; வில்லாளர் கையில் பூணும் தோலுறை ; மரக்காற் பறை ; கௌதமி . |
| கோணன் | கூனன் ; நீதிக்கேடன் . |
| கோணாமுகம் | சூழ அகழியிருக்கை . |
| கோணாய் | ஓநாய் ; ஆண்நரி . |
| கோணாவட்டம் | கோணத்துள் வட்டம் ; அரச விருதுகளுள் ஒன்று . |
| கோணி | சாக்குப்பை ; எட்டு மரக்கால்கொண்ட ஓர் அளவு ; பன்றி ; அத்திமரம் . |
| கோணிக்கயிறு | சாக்குத் தைக்கும் சணல்நூல் . |
| கோணிப்பை | சாக்கு . |
| கோணியல் | காண்க : கோணிப்பை . |
| கோணியலூசி | சாக்குத் தைக்கும் ஊசி . |
| கோணயூசி | சாக்குத் தைக்கும் ஊசி . |
| கோணுதல் | வளைதல் ; கோணலாயிருத்தல் ; நெறிபிறழ்தல் ; மாறுபடுதல் ; வெறுப்புக் கொள்ளுதல் . |
| கோணை | கோணல் ; வளைவு ; கொடுமை ; தொல்லை ; வலிமை ; அழிவின்மை ; பீடை . |
| கோணைமாதம் | பீடைமாதமாகிய மார்கழி . |
| கோணையன் | வக்கிரகுண முள்ளவன் . |
| கோத்தணிகை | காண்க : கொடிமுந்திரிகை . |
| கோத்தல் | மணி முதலியவற்றினோடு நூலைப் புகுத்தியிணைத்தல் ; ஒழுங்குபடுத்துதல் ; முறையாகக் கூறுதல் ; தொகுத்துரைத்தல் ; தொடுத்தல் ; திறமையாகக் கதை முதலியன புனைந்து கூறுதல் ; உடுத்துதல் ; கைபிணைத்தல் ; ஒன்றுசேர்த்தல் ; கலந்துகொள்ளுதல் ; எதிர்த்தல் . |
| கோத்தனி | காண்க : கோத்தணிகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 397 | 398 | 399 | 400 | 401 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோணன் முதல் - கோதை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கோதாவரி, உள்ளக்களிப்பு, கூலவகை, தைக்கும், காண்க, சாக்குத், உடும்பு, பூமி, வரகு, ஒன்று, குலம், கோணிப்பை, கூறுதல், கோத்தணிகை, கோத்திரம், கோதுமை, விளையாட்டு, வில், கையில், கோணி, கோத்துக்கொடுத்தல், குலத்தில், குறும்பு, வஞ்சிக்கை, வருந்துகை, கோத்தும்பி

