முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இலஞ்சியம் முதல் - இலலிதபஞ்சமி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இலஞ்சியம் முதல் - இலலிதபஞ்சமி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இலம் | இல்லம் ; இல்லறம் ; வறுமை . |
| இலம்பகம் | நூலின் உட்பிரிவு ; மாலை ; தலைக்கோலம் என்னும் நுதலனி . |
| இலம்படுதல் | வறுமையடைதல் . |
| இலம்படை | இடுக்கண் ; வறுமை . |
| இலம்பம் | தொங்கல் ; மாலை ; நிறுதிட்டம் ; வானநூலில் கூறும் ஒரு பாகை அளவு ; உயர்வு ; அகலம் ; கைக்கூலி . |
| இலம்பமானம் | கழுத்தில் தொங்கும் தாழ்வடம் . |
| இலம்பனம் | காண்க : இலம்பம் . |
| இலம்பாட்டோன் | வறியவன் . |
| இலம்பாடி | ஒரு சாதி ; வறியவன்(ள்) . |
| இலம்பாடு | வறுமை ; துன்பம் . |
| இலம்பிகை | அண்ணாக்கு , உள்நாக்கு . |
| இலம்பிலி | மரவகை . |
| இலம்பு | தொங்குகை . |
| இலம்பை | வறுமை ; இடுக்கண் ; அவலநிலை . |
| இலம்போதரன் | பெருவயிறன் ; விநாயகக் கடவுள் . |
| இலமலர் | இலவமலர் . |
| இலயகாலம் | அழியுங்காலம் , ஊழிக்காலம் . |
| இலயசக்தி | அருவ சிவனின் சத்தி . |
| இலயசிவன் | அறிவிலும் ஆற்றலிலும் கலந்திருக்கும் அருவ சிவன் . |
| இலயஞானம் | சுருதி ஒப்புமை காணும் அறிவு ; கீத ஞானம் , இலய ஞானம் , சுருதி ஞானம் , தாள ஞானம் என்னும் நால்வகைக் கேள்விகளுள் ஒன்று . |
| இலயத்தானம் | ஒடுங்குமிடம் . |
| இலயதத்துவம் | ஊழிக் காலத்துத் தன் தொழில்கள் எல்லாம் ஒடுங்கிக் காரண மாத்திரையாய் நிற்கும் இறைவன் நிலை . |
| இலயம் | அழிவு ; இரண்டறக் கலக்கை ; அறிவு மட்டுமே திருமேனியாக உள்ள கடவுள் நிலை ; ஒழிவு ; தாளவறுதி ; சுருதிலயம் ; கூத்து வேறுபாடு . |
| இலயமாதல் | ஒன்றாதல் ; அழிதல் . |
| இலயமுத்தி | பரம்பொருளொடு இரண்டறக் கலக்கையாகிய முத்தி . |
| இலயன் | காண்க : இலயம் ; சிவன் |
| இலயி | காண்க : இலயம் ; சிவன் |
| இலயித்தல் | ஒடுங்குதல் ; இரண்டு பொருள் வேற்றுமையறக் கலத்தல் , ஒன்றாதல் ; அழிதல் . |
| இலயை | தாளப் பிரமாணம் பத்தனுள் ஒன்று . |
| இலலாடம் | நெற்றி . |
| இலலாடலிபி | தலையெழுத்து . |
| இலலாடிகை | சந்தன முதலியவற்றால் நெற்றியில் இடும் பொட்டு ; நெற்றியில் அணியும் சுட்டி . |
| இலலாமம் | அடையாளம் ; அரசச்சின்னம் ; அழகு ; அணிகலன் ; இரேகை ; குதிரை ; கொடி ; கொம்பு ; தன் சாதியில் உயர்ந்தது ; நெற்றியணி ; நெற்றிக்குறி ; பிடர்மயிர் ; பெருமை ; வால் . |
| இலலிதபஞ்சமி | ஒரு பண்வகை . |
| இலஞ்சியம் | கீழ்காய்நெல்லிப் பூண்டு . |
| இலஞ்சிலி | ஏலம் . |
| இலட்சணம் | காண்க : இலக்கணம் . |
| இலட்சம் | அடையாளம் ; இலக்கம் , நூறாயிரம் |
| இலட்சயம் | எண்ணத்தக்கது . |
| இலட்சாதிகாரி | பெருஞ்செல்வன் . |
| இலட்சாதிபதி | பெருஞ்செல்வன் . |
| இலட்சாதிலட்சம் | பெருந்தொகை . |
| இலட்சிதம் | இலக்கணம் அமைக்கப்பட்டது ; காணப்பட்டது ; குறியினாலே விளக்கப்பட்டது . |
| இலட்சியம் | குறி ; குறிக்கோள் , நோக்கம் ; மதிப்பு . |
| இலட்சியார்த்தம் | காண்க : இலக்கியார்த்தம் . |
| இலட்சுமணம் | மரவகை ; தாளிப்பூண்டு . |
| இலட்சுமி | காண்க : இலக்குமி . |
| இலட்சுமி வண்டு | கரப்பான்பூச்சி . |
| இலட்சோபலட்சம் | காண்க : இலட்சாதிலட்சம் . |
| இலட்டு | உருண்டை வடிவமான தித்திப்புப் பணிகார வகை ; கொழுக்கட்டை ; அப்பவருக்கம் ; தோசை . |
| இலட்டுகம் | உருண்டை வடிவமான தித்திப்புப் பணிகார வகை ; கொழுக்கட்டை ; அப்பவருக்கம் ; தோசை . |
| இலட்டுவம் | உருண்டை வடிவமான தித்திப்புப் பணிகார வகை ; கொழுக்கட்டை ; அப்பவருக்கம் ; தோசை . |
| இலட்டை | அப்பம் . |
| இலண்டம் | இலத்தி ; குதிரை , யானை முதலியவற்றின் மலம் . |
| இலணை | அரசமரம் . |
| இலத்தி | காண்க : இலண்டம் . |
| இலத்தை | காண்க : இலண்டம் . |
| இலதை | படர்கொடி ; வள்ளிக்கொடி ; வால்மிளகுகொடி ; இலந்தை ; முள்மரவகை ; மரக்கொம்பு ; நூற்கும் நூல் ; இணையாவினைக்கை வகை ; ஒருவகை ஒலி . |
| இலதைக்கை | பிண்டிக்கை முப்பத்து மூன்றனுள் ஒன்று . |
| இலந்தை | முள்மரவகை ; ஒரு பழமரவகை ; நீர்நிலை . |
| இலந்தைத்தம்பலம் | இலந்தைப்பட்டையில் பூச்சிகளாலான புடைப்பு . |
| இலபனம் | வாய் . |
| இலபித்தல் | சித்தித்தல் , வாய்த்தல் , கைகூடுதல் . |
| இலபிதம் | நேர்வது ; உண்பது ; பேச்சு ; பேசப்பட்டது ; பேறு ; விதி . |
| இலபிப்பு | சித்திப்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 130 | 131 | 132 | 133 | 134 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலஞ்சியம் முதல் - இலலிதபஞ்சமி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வறுமை, ஞானம், தித்திப்புப், வடிவமான, ஒன்று, இலயம், உருண்டை, பணிகார, சிவன், இலண்டம், அப்பவருக்கம், தோசை, கொழுக்கட்டை, இலட்சாதிலட்சம், பெருஞ்செல்வன், இலக்கணம், முள்மரவகை, இலத்தி, குதிரை, இலந்தை, இலட்சுமி, ஒன்றாதல், வறியவன், மரவகை, இலம்பம், இடுக்கண், மாலை, என்னும், கடவுள், அருவ, அழிதல், நெற்றியில், இரண்டறக், நிலை, சுருதி, அறிவு, அடையாளம்

