தமிழ் - தமிழ் அகரமுதலி - இல்லடை முதல் - இலக்கண வழு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இலக்கணச்சிதைவு | இலக்கண நூலிலே விதித்த விதிகளுக்கு விலக்காகச் சிதைந்து வழங்கும் சொல் ; தவறாய் வழங்கும் சொல் . |
| இலக்கணச்சுழி | குதிரைகளுக்கு உடையனவாகச் சொல்லப்படும் நல்ல சுழி . |
| இலக்கணச்சொல் | காண்க : இலக்கணமுடையது . |
| இலக்கண நூல் | ஒரு மொழியைப் பேசுதற்கும் எழுதுதற்கும் உரிய முறையைக் கற்பிக்கும் நூல் ; ஏதாயினும் ஒரு பொருளின் இயல்பை விளக்கும் நூல் . |
| இலக்கணப்போலி | இலக்கணம் உடையதுபோல் அடிப்பட்ட சான்றோராலே தொன்று தொட்டு வழங்கப்படும் சொல் . |
| இலக்கணம் | சிறப்பியல்பு ; இயல்பு ; அடையாளம் ; நல்வாழ்வை உரைக்கும் உடற்குறி ; அழகு ; ஒழுங்கு ; இலக்கியத்தினமைதி ; எழுத்திலக்கணம் , சொல்லிலக்கணம் ; பொருளிலக்கணம் , யாப்பிலக்கணம் , அணியிலக்கணம் என்னும் ஐவகை இலக்கணம் . |
| இலக்கணமுடையது | இலக்கண வழியால் வரும் சொல் . |
| இலக்கண வழக்கு | இலக்கண நடை . |
| இலக்கண வழு | இலக்கணப் பிழை . |
| இல்லடை | அடைக்கலம் ; அடைமானப்பொருள் ; ஒட்டடை ; பண்டசாலை ; இல்லுவமம் |
| இல்லடைக்கலம் | அடைக்கலப் பொருள் ; அடைமானப்பொருள் . |
| இல்லத்துப்பிள்ளை | ஈழவர் பட்டப்பெயர் . |
| இல்லது | பிரகிருதி ; இல்லாதது ; கிடைக்காதது ; இல்பொருள் ; மனையிலுள்ளது ; மனைவியினுடையது . |
| இல்லம் | வீடு ; மனைவி ; இல்வாழ்க்கை ; தேற்றாமரம் . |
| இல்லல் | நடக்கை ; கடத்தல் ; போகுதல் . |
| இல்லவள் | மனைவி ; வறியவள் . |
| இல்லவன் | கணவன் ; தலைவன் ; வறிஞன் . |
| இல்லவை | இல்லாதவை ; மனையில் உள்ளவை . |
| இல்லறம் | இல்வாழ்க்கை , இல்லத்தில் மனையாளோடு கூடிவாழும் ஒழுக்கம் ; இல்வாழ்வார் கடமை . |
| இல்லாக்குடி | வறுமைக் குடும்பம் . |
| இல்லாக்குற்றம் | வறுமை ; அபாண்டம் . |
| இல்லாண்முல்லை | பாசறைத் தலைவனை இல்லாள் நினையும் புறத்துறை ; தலைவி கணவனை வாழ்த்தி விருந்தோம்பும் இல்லின் மிகுதியைக் கூறும் புறத்துறை . |
| இல்லாண்மை | குடியினை ஆளும் தன்மை ; தன் குடியிலுள்ளாரை உயரச்செய்து தன்வழிப் படுத்தல் . |
| இல்லாத்தனம் | வறுமை . |
| இல்லாததும்பொல்லாததும் | பொய்யும் தீங்கு விளைப்பதும் . |
| இல்லாதபொய் | முழுப் பொய் |
| இல்லாதவன் | வறியவன் . |
| இல்லாமை | இன்மை , வறுமை . |
| இல்லாவாட்டி | வறியவள் . |
| இல்லாள் | மனைவி ; மருத முல்லை நிலங்களின் தலைவியர் ; வறுமையுடையவள் . |
| இல்லாளன் | இல்லறத்தான் ; கணவன் . |
| இல்லாளி | இல்லறத்தான் ; கணவன் . |
| இல்லி | சில்லி , பொள்ளல் , ஓட்டை ; தேற்றாமரத்தின் இலை ; வால்மிளகு ; ஒருவகைப் புழு . |
| இல்லிக் கண்ணன் | மிகச் சிறிய கண்ணுடையான் ; கூச்சுக் கண்ணுள்ளவன் . |
| இல்லிக்காது | சிறிய துளையையுடைய காது . |
| இல்லிக்குடம் | ஓட்டைக் குடம் . |
| இல்லிடம் | வீடு ; ஊர் . |
| இல்லிமூக்கு | சில்லிமூக்கு ; இரத்தம் வடியும் மூக்கு . |
| இல்லிறத்தல் | பிறன் மனையாளை விழைதல் . |
| இல்லுவமம் | உவம அணியுள் ஒன்று , உலகத்தில் இல்லாத ஒன்றனை உவமையாக எடுத்துச் சொல்லுதல் . |
| இல்லுவமை | உவம அணியுள் ஒன்று , உலகத்தில் இல்லாத ஒன்றனை உவமையாக எடுத்துச் சொல்லுதல் . |
| இல்லுறைகல் | அம்மிக்கல் . |
| இல்லுறைதெய்வம் | வீட்டில் வாழும் தெய்வம் . |
| இல்லெலி | வீட்டெலி . |
| இல்லெனல் | இல்லையென்று சொல்லி மறுத்தல் ; பொருள் இல்லை என்று சொல்லுதல் ; இறந்து போனான் என்று சொல்லுதல் ; சூனிய மாகுகை . |
| இல்லை | உண்டு என்பதன் எதிர்மறை ; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று ; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று . |
| இல்லைசெய்தல் | மறுத்தல் . |
| இல்லொடுவரவு | குடிப்பிறப்பு . |
| இல்லொழுக்கம் | காண்க : இல்லறம் . |
| இல்வழக்கு | பொய்வழக்கு ; இல்லதனை இல்லையென்கை . |
| இல்வாழ்க்கை | மனையாளோடு கூடிவாழ்கை ; இல்லறத்தில் வாழ்கை . |
| இல்வாழ்பேய் | பொருந்தா மனைவி . |
| இல்வாழ்வான் | இல்லறத்தோடு கூடி வாழ்பவன் . |
| இல்வாழ்வு | காண்க : இல்வாழ்க்கை . |
| இல | இலவு ; இலவமரம் ; 'ஏடீ' என்னும் பொருளில் வரும் விளிப்பெயர் . |
| இலக்கணக்கருமம் | சாமுத்திரிகம் ; அங்க இலக்கண நூல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 128 | 129 | 130 | 131 | 132 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இல்லடை முதல் - இலக்கண வழு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இலக்கண, சொல், இல்வாழ்க்கை, நூல், சொல்லுதல், வரும், மனைவி, கணவன், வறுமை, இலக்கணம், காண்க, உவமையாக, எடுத்துச், ஒன்றனை, உலகத்தில், இல்லாத, வழங்கும், இல்லை, குறிப்பு, வினைமுற்று, மூவிடத்திலும், ஐம்பால், ஒன்று, உணர்த்தி, மறுத்தல், சிறிய, என்னும், வறியவள், வீடு, பொருள், இல்லுவமம், இலக்கணமுடையது, இல்லறம், இல்லறத்தான், அடைமானப்பொருள், புறத்துறை, இல்லாள், மனையாளோடு, அணியுள்

