முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இலாவண்ணியார்ச்சிதம் முதல் - இலுப்பையெண்ணெய் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இலாவண்ணியார்ச்சிதம் முதல் - இலுப்பையெண்ணெய் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இல¦லை | விளையாட்டு ; தெய்வம் முதலியவற்றின் விளையாடல் ; சுரத விளையாட்டு ; பரிகாசம் ; சரசம் ; மகளிர் மோக விளையாட்டு ; புணர்ச்சி . |
| இல¦னம் | அழிவு ; அடக்கம் . |
| இலுதை | அணில் . |
| இலுப்பை | காண்க : இருப்பை . |
| இலுப்பைக்கட்டி | இலுப்பைப் பிண்ணாக்கு . |
| இலுப்பைக்கடுகு | இலுப்பெண்ணெயின் அடியில் படியும் வண்டல் ; இலுப்பெண்ணெய்க் கசடு ; இலுப்பைப் பருப்பு . |
| இலுப்பை நெய் | காண்க : இலுப்பையெண்ணெய் . |
| இலுப்பைப் பால் | காண்க : இலுப்பையெண்ணெய் . |
| இலுப்பைப்பூச்சம்பா | நெல்வகை . |
| இலுப்பையெண்ணெய் | இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கும் எண்ணெய் . |
| இலாவணம் | போர்வீரர்களின் பட்டி ; பெயர்ப் பதிவு ; மரபின்படி வரும் உத்தியோகத்துக்குக் கொடுக்கும் ஆணை ; வீடுதோறும் இனவாரி வழங்கும் அரிசி ; உப்பு ; உரையாடல் . |
| இலாவணமெழுதுதல் | படைக்கு ஆள் சேர்த்தல் . |
| இலாவணியம் | அழகு ; உப்புந்தன்மை . |
| இலாவிருதம் | நவகண்டத்துள் ஒன்று . |
| இலாளன் | இல்லாதவன் . |
| இலாளனை | காண்க : இலாலனை . |
| இலாளிதம் | அழகு . |
| இலி | இல்லாதவன்(ள்) ; இல்லாதது . |
| இலிகம் | எழுதுகை . |
| இலிகனம் | எழுதுகை . |
| இலிகி | எழுத்து ; எழுதுகை . |
| இலிகிதம் | எழுதப்பட்டது ; கடிதம் ; எழுதப்பட்ட புத்தகம் ; அறுபத்து நான்கு கலையுள் ஒன்றான எழுதுவதில் திறமை . |
| இலிகிதன் | எழுத்தாளன் . |
| இலிகுசம் | எலுமிச்சை மரம் . |
| இலிங்கக்கட்டு | சாதிலிங்கக் கட்டு , இஃது ஒரு வைப்பு மருந்துச் சரக்கு . |
| இலிங்கக்கல் | வளைவுக் கட்டடத்தின் நடுக்கல் . |
| இலிங்ககவசம் | ஆண்குறியின் மேல்தோல் ; சிவலிங்கத்திற்குச் சாத்தப்படும் மேலாடை . |
| இலிங்கங்கட்டி | இலிங்கத்தைக் கழுத்தில் கட்டியிருப்பவன் , வீரசைவன் . |
| இலிங்கசரீரம் | நுண்ணுடல் ; ஆன்மாவோடு கருப்பத்திலே கூடப்பதிந்தும் பருவுடலை விட்டுப் போகும்பொழுது கூடப்போயும் வீடு வரை பின்தொடர்வதான உடல் . |
| இலிங்கசுத்தி | ஐந்துவகைத் தூய்மையுள் ஒன்று . |
| இலிங்கசூலை | ஆண்குறியைப் பற்றிவரும் ஒரு நோய் . |
| இலிங்கத்தாரணம் | இலிங்கம் அணிகை . |
| இலிங்கத்தாரணத்தலம் | இலிங்கம் தரிக்கும் தலம் . |
| இலிங்கதாரி | காண்க : இலிங்கங்கட்டி . |
| இலிங்கப்புடோல் | ஐவிரலிக் கொடி ; கோவைக் கொடி . |
| இலிங்கப்புற்று | ஒரு மேகநோய் . |
| இலிங்கப்பொருத்தம் | மணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று . |
| இலிங்கபற்பம் | நீற்று மருந்துவகை . |
| இலிங்கம் | அடையாளம் ; ஆண்குறி ; ஏது ; வடமொழிப் பெயர்ச்சொற்குரிய பால் ; சிவலிங்கம் ; சாதிலிங்கம் ; இலிங்க புராணம் ; பிரகிருதி ; உபநிடதம் முப்பத்திரண்டனுள் ஒன்று ; கருவிழியின் நடுவிலிருக்கிற பாவை ; கறை ; நோய்க்குறி . |
| இலிங்கமுத்திரை | பூசை செய்யும்போது காட்டும் முத்திரைவகை . |
| இலிங்கமெழுகு | ஒருவகை மருந்து . |
| இலிங்கரோகம் | ஆண்குறியில் வரும் ஒருவகைப் புண் . |
| இலிங்கவட்டம் | கிணறு இடியாமல் வைக்கும் மரச்சுவர் . |
| இலிங்கவிரணம் | ஆண்குறி நோய்வகை . |
| இலிங்கவிருத்தி | வெளிவேடம் போட்டுப் பிழைப்பவன் . |
| இலிங்காங்கம் | ஆண் உறுப்பு . |
| இலிங்காயதர் | காண்க : இலிங்கங்கட்டி . |
| இலிங்கி | அடையாளத்தை உடையது ; சிவலிங்க பூசை செய்வோன் ; இருடி ; துறவி ; கபட சன்னியாசி ; யானை . |
| இலிங்கியர் | அனுமானத்தை முக்கியமாகக் கொண்டு வாதிக்கும் தருக்க நூலாளர் . |
| இலிங்கு | மாவிலங்கைமரம் . |
| இலிங்கோத்தாரம் | பூசித்தலின்பொருட்டுக் குருமுகமாகச் சிவலிங்கம் பெறுதல் . |
| இலிங்கோற்பவர் | சிவமூர்த்தங்களுள் ஒன்று . |
| இலிந்தகம் | கருங்குவளை . |
| இலிபி | இலக்கம் ; எழுத்து ; விதி ; மெழுகுதல் . |
| இலிபித்தல் | எழுதுதல் ; அனுகூலமாதல் ; நியமித்தலை விதித்தல் . |
| இலிர்த்தல் | சிலிர்த்தல் ; தளிர்த்தல் ; பொடித்தல் . |
| இலிற்றுதல் | சுரத்தல் ; துளித்தல் ; சொரிதல் . |
| இல¦க்கை | காண்க : ஈர் ; ஒரு நீட்டலளவை . |
| இல¦லாவதி | அழகிய பெண் ; இல¦லை உடையவள் ; காமச்சேட்டை உடைய பெண் ; துர்க்கை . |
| இலாவண்ணியார்ச்சிதம் | சீதனவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 132 | 133 | 134 | 135 | 136 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலாவண்ணியார்ச்சிதம் முதல் - இலுப்பையெண்ணெய் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, இலிங்கங்கட்டி, எழுதுகை, இலிங்கம், இலுப்பையெண்ணெய், விளையாட்டு, இலுப்பைப், கொடி, பூசை, பெண், சிவலிங்கம், ஆண்குறி, இல்லாதவன், வரும், பால், அழகு, இல¦லை, இலுப்பை, எழுத்து

