தமிழ் - தமிழ் அகரமுதலி - இலலிதம் முதல் - இலாலி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இலவுகிகம் | உலகியல் ; மரபு ; உலகப்போக்கை உணர்ந்து நடத்தல் . |
| இலளித பஞ்சகம் | ஓர் இசை விகற்பம் . |
| இலளிதம் | இச்சை ; பொருளின் தெளிவு ; அழகியது ; ஒரு பண் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; விரும்பப்பட்டது . |
| இலளிதை | பார்வதி ; ஒருவகை முத்தாரம் ; கத்தூரி ; முப்பத்திரண்டு பண்களுள் ஒன்று . |
| இலாக்கா | ஆட்சிப்பிரிவு ; ஆட்சித்துறை . |
| இலாக்கிரி | செம்மெழுகு . |
| இலாக்கை | செம்பஞ்சு ; அரக்கு . |
| இலாகவம் | திறமை ; உடல்நலம் ; கவனமின்மை ; எளிமை ; நிந்தனை ; சுருக்கம் ; விரைவு . |
| இலாகன் | மீன்வகை . |
| இலாகிரி | மதர்ப்பு ; மதுக்களிப்பு . |
| இலாகு | தாங்கல் . |
| இலாகுளம் | சைவப் பிரிவுகளுள் ஒன்று ; பாசுபத சமயப் பிரிவுகளுள் ஒன்று . |
| இலாகை | விதம் . |
| இலாங்கலம் | பூவகை ; பூனை ; கலப்பை ; கொடுங்கை . |
| இலாங்கலி | கலப்பை ; தென்னை ; செங்காந்தள் ; செங்கரந்தைப் பூண்டு ; வெண்தோன்றிப் பூண்டு ; பாம்பு ; பலராமன் . |
| இலாங்கூலம் | விலங்கின் வால் ; ஆண்குறி . |
| இலாங்கூலி | குரங்கு . |
| இலாச்சம் | தானிய அளவைவகை ; ஒரு நில அளவை . |
| இலாச்சி | செருகுபெட்டியின் அறை . |
| இலாசடி | வருத்தம் ; தொல்லை . |
| இலாசடை | வருத்தம் ; தொல்லை . |
| இலாசம் | நனைத்த தவசம் ; பொரி . |
| இலாசவோமம் | திருமணத்தில் பொரியால் செய்யப்படும் ஓமம் . |
| இலாசிகை | கூத்தாடுபவள் . |
| இலாசியம் | கூத்து . |
| இலாஞ்சலி | அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் . |
| இலாஞ்சனை | அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் . |
| இலாஞ்சனம் | அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் . |
| இலாஞ்சி | ஏலம் . |
| இலாஞ்சினைப்பேறு | பழைய வரிவகை . |
| இலாட்சை | செவ்வரக்கு . |
| இலாடசங்கிலி | கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னல் சங்கிலி . |
| இலாடசிங்கி | கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னல் சங்கிலி . |
| இலாடசிந்தூரம் | குதிரைக் காலிரும்பை நீற்றிச் செய்த பொடி . |
| இலாடம் | பரத கண்டத்தில் ஒரு நாடு ; வங்காள தேசப்பகுதி ; நெற்றி ; புளியமரம் ; காளை குதிரைகளின் கால் இலாடம் ; ஒரு மொழி ; சேலை ; மூல நட்சத்திரத்திற்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை ஒட்டிக் கணிக்கும் நாள் . |
| இலாடவி | அகில்மரம் . |
| இலாடன் | இலாட நாட்டான் ; பைராகி . |
| இலாடன் பருத்தி | பருத்திச் செடிவகை . |
| இலாபகரம் | ஊதியம் தருவது . |
| இலாபத்தானம் | இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் . |
| இலாபநட்டம் | பேறும் இழப்பும் . |
| இலாபம் | ஊதியம் ; பயன் ; ஆதாயம் ; தானிய அளவையில் முதல் எண்ணுக்கு வழங்கும் சொல் . |
| இலாபாந்தராயம் | குறித்த பேற்றை இடைநின்று விலக்கும் கருமத்தடை . |
| இலாமச்சம் | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாமச்சை | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாமிச்சு | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாமிச்சை | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாயம் | ஏலவரிசி ; குதிரைப் பந்தி , குதிரைச்சாலை . |
| இலாலனம் | நயஞ்செய்கை ; அன்பு பாராட்டுதல் ; சீராட்டுதல் ; செல்லம் காட்டுதல் . |
| இலாலனை | நயஞ்செய்கை ; அன்பு பாராட்டுதல் ; சீராட்டுதல் ; செல்லம் காட்டுதல் . |
| இலாலி | இச்சக வார்த்தை ; ஏமாற்றுவோன் ; காமி : தீமைக்கு உட்படுத்துவோன் ; ஒரு வாழ்த்து ; மங்கலப் பாடல் . |
| இலலிதம் | அழகு ; அபிநயம் ; உபசாரம் ; ஒரு பண் விகற்பம் ; காமக்குறி ; பரிகாசம் ; மகளிர் விளையாட்டு ; இனிமை . |
| இலலிதை | முப்பத்திரண்டு பண்களுள் ஒன்று ; பார்வதி ; பெண் ; மான்மதம் . |
| இலவங்கச் சுருட்பாக்கு | பாக்குவகை . |
| இலவங்கச் சூர்ப்பாக்கு | பாக்குவகை . |
| இலவங்கப் பட்டை | கருவாப்பட்டை ; தாளிசபத்திரி . |
| இலவங்கப்பூ | கிராம்பு ; காதணிவகை . |
| இலவங்கபத்திரி | ஒரு மருந்திலை . |
| இலவங்கம் | கிராம்பு ; கருவாமரம் . |
| இலவசம் | விலையில்லாதது . |
| இலவயம் | விலையில்லாதது . |
| இலவணம் | உப்பு . |
| இலவண வித்தை | மாயவித்தைகளுள் ஒன்று . |
| இலவந்தி | இயந்திர வாவி ; வாவியைச் சூழ்ந்த வசந்தச் சோலை . |
| இலவந்திகை | இயந்திர வாவி ; வாவியைச் சூழ்ந்த வசந்தச் சோலை . |
| இலவந்தீவு | ஏழு தீவுகளுள் ஐந்தாவது . |
| இலவம் | இலவு ; இலவந்தீவு ; அற்பம் ; காலவகை ; ஒரு கால அளவு ; இலவங்கம் ; கிராம்பு ; சாதிக்காய் ; பசு , ஆடு முதலியவற்றின் மயிர் ; பூசை . |
| இலவம்பஞ்சு | இலவமரத்துப் பஞ்சு . |
| இலவலேசம் | மிகச் சிறியது . |
| இலவித்திரம் | அரிவாள் . |
| இலவு | இலவமரம் ; தேற்றாமரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 131 | 132 | 133 | 134 | 135 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலலிதம் முதல் - இலாலி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, ஒருவகை, மணமுள்ள, வேர், கட்டின, அச்சுக், உருத்தோன்ற, படம், கிராம்பு, அடையாளம், கூச்சம், மதிப்பு, முத்திரை, செல்லம், காட்டுதல், இலவங்கச், சீராட்டுதல், பாராட்டுதல், இலவு, இலவந்தீவு, பாக்குவகை, சோலை, இயந்திர, விலையில்லாதது, அன்பு, வாவி, வாவியைச், வசந்தச், சூழ்ந்த, இலவங்கம், சங்கிலி, கலப்பை, பூண்டு, தானிய, பிரிவுகளுள், பண்களுள், விகற்பம், பார்வதி, முப்பத்திரண்டு, வருத்தம், தொல்லை, இலாடம், இலாடன், ஊதியம், சொல், பின்னல், கழற்றுதற்கரிய, ஒருவகைப், நயஞ்செய்கை

