தமிழ் - தமிழ் அகரமுதலி - இரச்சு முதல் - இரஞ்சனி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இரசோகுணம் | இராசதகுணம் , முக்குணத்துள் ஒன்று ; மத்திமமான அறிவு . |
| இரசோபலம் | இருள் ; முத்து . |
| இரசோனகம் | வெள்ளுள்ளி . |
| இரஞ்சகம் | துப்பாக்கியின் பற்றுவாய் மருந்து ; துப்பாக்கிக் காது ; மகிழ்ச்சி தருவது . |
| இரஞ்சகன் | இயக்குகிறவன் ; சாயமூட்டுகிறவன் ; விருப்பம்வரச் செய்கிறவன் . |
| இரஞ்சனம் | மகிழ்ச்சி தருவது ; செஞ்சாந்து . |
| இரஞ்சனி | மஞ்சிட்டை ; கவுள் ; அவுரி ; கம்பில்லம் . |
| இரசக்களிம்பு | புண் ஆற்றும் மருந்துவகை . |
| இரசக்கிணறு | காண்க : இரசக்குழி . |
| இரசக்குடுக்கை | பாதரசம் அடைக்கும் குப்பி . |
| இரசக்குழி | பாதரசம் எடுக்கும் சுரங்கம் . |
| இரசகந்தாயம் | வரி ; நிலக்கொழுமை . |
| இரசகம் | பீர்க்கு . |
| இரசகருப்பூரம் | ஒருவகை மருந்துச் சரக்கு . |
| இரசகன் | வண்ணான் . |
| இரசகி | வண்ணாத்தி . |
| இரசகுண்டு | அலங்காரமாகத் தொங்கவிடும் இரசம் பூசிய கண்ணாடி உருண்டை . |
| இரசகுளிகை | இரசத்தினால் செய்த மாத்திரை ; சித்தர் குளிகை . |
| இரசச்சுண்ணம் | பூச்சுமருந்துவகை . |
| இரசசுத்தி | ஈயம் . |
| இரசதகிரி | வெள்ளிமலையாகத் தோற்றம் பெறும் கைலாயமலை . |
| இரசதசபை | வெள்ளியம்பலம் , மதுரையிலுள்ள நடராச சபை . |
| இரசதம் | வெள்ளி ; இராசதம் ; அரைப்பட்டிகை ; பாதரசம் ; நட்சத்திரம் ; யானைத் தந்தம் ; வெள்ளை ; முத்துமாலை ; வெண்மலை ; பொன் ; அரத்தம் . |
| இரசதமணல் | வெள்ளி கலந்த மணல் . |
| இரசதாது | பாதரசம் . |
| இரசதாரை | அன்னரசம் செல்லும் குழாய் . |
| இரசதாளி | ரஸ்தாளி , ஒருவகை வாழை . |
| இரசநாதன் | காண்க : இரசதாது . |
| இரசப்பிடிப்பு | முடக்குவாதம் . |
| இரசப்புகை | பாதரசத்தின் ஆவி . |
| இரசபலம் | இனிய நீரைக்கொண்ட காய்களையுடையது ; தென்னை . |
| இரசபுட்பம் | காண்க : இரசகருப்பூரம் . |
| இரசம் | சுவை ; செய்யுட்சுவை ; சாறு ; பாதரசம் ; மிளகு நீர் ; இன்பம் ; வாயூறு நீர் ; வாழைவகை ; மாமரம் . |
| இரசமணி | நோய் முதலியவை நீங்கக் காப்பாக அணியப்படும் பாதரசங் கட்டிய மணி . |
| இரசமுறித்தல் | பாதரசம் செய்தல் ; உடம்பிலிருந்து பாதரச நஞ்சை நீக்குதல் . |
| இரசலிங்கம் | சாதிலிங்கம் ; சிவலிங்கவகை . |
| இரசவாதம் | தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக்கும் வித்தை . |
| இரசவாதி | உலோகங்களைப் பேதிப்போன் , ஓர் உலோகத்தைப் பிறிதொன்றாக மாற்றுபவன் . |
| இரசவாழை | பேயன்வாழை . |
| இரசவைப்பு | இரசத்தால் ஆகிய மருந்து முதலியன . |
| இரசனம் | பொன் ; வெள்ளி ; நஞ்சு ; பிசின் ; பழம் ; கழாயம் ; இலைச் சாறு ; ஒலி ; உணவு ; நேயம் ; பல் . |
| இரசனா | அரத்தைவகை . |
| இரசனி | இரவு ; மஞ்சள் ; அவுரி ; செம்பஞ்சு . |
| இரசனிமுகம் | மாலை நேரத்தில் நேரும் பிரதோஷ காலம் ; சூரியன் மறைவிற்கு முன்னும் பின்னும் உள்ள மூன்றே முக்கால் நாழிகை . |
| இரசனை | சுவை ; மலர் முதலியவற்றைத் தொடுக்கை ; படையின் அணிவகை ; பதினாறு கோவையுள்ள அரைப்பட்டிகையான காஞ்சி . |
| இரசாதலம் | கீழேழ் உலகத்துள் ஒன்று . |
| இரசாதிபதி | இரசப் பொருள்களுக்கு அதிகாரியான கோள் . |
| இரசாபாசம் | சுவைக்கேடு ; சீர்கேடு . |
| இரசாயனநூல் | வேதியியல் நூல் , இயைபியல் நூல் . |
| இரசாயனம் | இரசவாதம் ; வேதியியல் , இயைபியல் ; காயசித்தி மருந்து ; நஞ்சு . |
| இரசாலம் | மாமரம் ; கரும்பு ; பலா ; கோதுமை ; குந்துருப் பிசின் ; போளம் . |
| இரசாலை | அறுகு ; சம்பாரத் தயிர் ; நா ; வெள்ளீறில் என்னும் மரவகை . |
| இரசிகம் | குதிரை ; கயமைத் தன்மை ; யானை . |
| இரசிகன் | சுவைஞன் ; காமுகன் . |
| இரசிகை | காமுகி ; நா ; மாதர் இடையணி . |
| இரசித்தல் | சுவைத்தல் ; இனித்தல் ; விரும்புதல் . |
| இரசிதநாள் | வெள்ளிக்கிழமை . |
| இரசிதம் | வெள்ளி ; பொன்னின் பூச்சு ; ஒலி ; முழக்கம் . |
| இரசுவம் | குறுகிய அளவு ; குற்றெழுத்து . |
| இரசேந்திரியம் | சுவையுணர் உறுப்பு , நாக்கு . |
| இரசை | பங்கம்பாளை ; பூமி ; ஆனைவணங்கி ; தினை ; நா . |
| இரச்சு | கயிறு . |
| இரச்சுப்பொருத்தம் | பத்துவகைக் கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று . |
| இரச்சுலம் | கவண் . |
| இரச்சுவம் | குற்றெழுத்து . |
| இரச்சை | மலை மரவகை ; காப்புநாண் . |
| இரசக்கட்டு | இறுகச் செய்த பாதரசம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 114 | 115 | 116 | 117 | 118 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரச்சு முதல் - இரஞ்சனி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பாதரசம், வெள்ளி, மருந்து, காண்க, ஒன்று, நீர், இரசவாதம், மாமரம், நஞ்சு, வேதியியல், மரவகை, குற்றெழுத்து, இயைபியல், நூல், சாறு, பிசின், பொன், இரசக்குழி, அவுரி, தருவது, மகிழ்ச்சி, இரசகருப்பூரம், ஒருவகை, இரசதாது, செய்த, இரசம், சுவை

