முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இயம்புதல் முதல் - இயற்படமொழிதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இயம்புதல் முதல் - இயற்படமொழிதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இயல்புவழக்கு | எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பில் அமைந்ததோ அப் பெயராலேயே அப் பொருளைக் கூறுகை . |
| இயல்பு விளி | பெயர் ஈறு திரியாது நிற்கும் விளிவேற்றுமை . |
| இயல்புளி | முறைப்படி . |
| இயல்பூதி | வில்வம் ; நாய்வேளை . |
| இயல்வாகை | பெருங்கொன்றை . |
| இயல்வாணர் | புலவர் . |
| இயல்வு | இயல்பு ; பெறுகைக்குத் தக்க வழி . |
| இயலசை | நேரசை ; நிரையசை . |
| இயலடி | இயற்சீரால் அமைந்து வரும் பாவடி . |
| இயலணி | இயற்கையழகு . |
| இயலறிவு | சொற்களின் பயிற்சி . |
| இயலாசிரியன் | நாட்டிய நூல் கற்பிப்போன் . |
| இயலாமை | கூடாமை . |
| இயலுதல் | கூடியதாதல் ; நேர்தல் ; பொருந்துதல் ; தங்குதல் ; செய்யப்படுதல் ; அசைதல் ; நடத்தல் ; உலாவுதல் ; உடன்படுதல் ; அணுகுதல் ; ஒத்தல் ; போட்டிபோடுதல் ; சித்திர முதலியன எழுதுதல் . |
| இயலொழுக்கம் | நல்லொழுக்கம் . |
| இயவம் | தவசவகை ; நெல் ; வாற்கோதுமை . |
| இயவன் | தோற்கருவியாளன் ; வாச்சியக்காரன் ; கீழ்மகன் . |
| இயவனன் | யவனன் ; கம்மாளன் ; ஓவியன் . |
| இயவானி | ஓமம் . |
| இயவு | வழி ; செலவு ; காடு ; ஊர் . |
| இயவுள் | தலைமை ; எப்பொருட்கும் இறைவன் ; தெய்வம் ; புகழாளன் ; வழி ; பிள்ளை . |
| இயவை | வழி ; காடு ; மலைநெல்வகை ; மூங்கிலரிசி ; துவரை . |
| இயற்காட்சி | நற்காட்சி ; சரியாக உணர்கை ; நல்ல நம்பிக்கை . |
| இயற்குணப் பெயர் | தொழிலை அன்றிப் பண்பே குறிக்கும் பெயர் . |
| இயற்கை | இயல்பான தன்மை ; வழக்கம் ; இலக்கணம் ; நிலைமை ; கொள்கை . |
| இயற்கை அறிவு | இயல்பாக அமைந்த அறிவு . |
| இயற்கைக்குணம் | ஒன்றன் உடனாய் அமைந்த தன்மை . |
| இயற்ககைப் புணர்ச்சி | தலைவனும் தலைவியும் தெய்வத்தால் கூடும் முதற் கூட்டம் . |
| இயற்கைப் பொருள் | தோன்றிய காலம் தொடங்கி ஒருநிலையவாகிய பொருள் . |
| இயற்கையளபெடை | இசை ,விளி , பண்டமாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை . |
| இயற்கையின்பம் | இயற்கைப் புணர்ச்சியால் நேரும் இன்பம் ; இயற்கை தரும் இன்பம் . |
| இயற்கையுணர்வினனாதல் | இறைவன் எண்குணங்களுள் ஒன்று . |
| இயற்சீர் | அகவல் உரிச்சீர் . |
| இயற்சீர் வெண்டளை | மாமுன் நிரையும் விளமுன் நேரும் வரும் தளை . |
| இயற்சொல் | எல்லார்க்கும் பொருள் விளங்கும் சொல் . |
| இயற்படமொழிதல் | இயல்பு பொருந்தச் சொல்லுதல் ; தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்து கூறும் அகத்துறை . |
| இயம்புதல் | ஒலித்தல் ; வாச்சியம் ஒலித்தல் ; சொல்லுதல் ; துதித்தல் ; கூப்பிடுதல் . |
| இயமகணம் | யமகிங்கரர் , யமனின் தூதர் . |
| இயமகம் | யமகம் ; ஓரெழுத்து முதல் பத்தெழுத்தீறாய் ஓரடிபோல நான்கடியும்வரப் பாடுவது . |
| இயமகிங்கரர் | காண்க : இயமகணம் . |
| இயமங்கியர் | பரசுராமர் . |
| இயமதூதி | பாம்பினது நச்சுப்பற்களுள் ஒன்றாகிய யமதூதன் . |
| இயமபடர் | யமதூதர் . |
| இயமம் | யோகத்திற்குரிய எட்டுறுப்புகளுள் ஒன்று ; கொலை , களவு முதலியவற்றை நீக்கிப் புலனடக்குதல் ; தடை . |
| இயமரம் | பறைவகை . |
| இயமன் | யமன் , கூற்றுவன் . |
| இயமனூர்தி | எருமைக்கடா . |
| இயமான் | காண்க : இயமானன் . |
| இயமானகணம் | இந்திரகணம் ; மூன்று நேரசையால் வரும் சீர் . |
| இயமானன் | வேள்வித் தலைவன் ; குடும்பத் தலைவன் ; இந்திரன் ; ஆன்மா ; உயிர் . |
| இயர் | வியங்கோள் விகுதி . |
| இயல் | தன்மை ; தகுதி ; சுகுமாரதை ; ஒழுக்கம் ; உழுவலன்பு ; செலவு ; ஒப்பு ; இயற்றமிழ் ; இலக்கணம் ; நூல் ; நூலின் பகுதி ; திவ்வியப் பிரபந்தத்தைக் குழுவாக நின்று ஓதுகை ; மாறுபாடு ; சாயல் ; பெருமை . |
| இயல்பளவை | சொல்லின் , பொருளைச் சந்தர்ப்பத்தினால் துணிந்து உணர்கை . |
| இயல்பாயிருத்தல் | இயற்கையாய் உள்ளபடி அமைந்திருத்தல் ; செல்வாக்கோடு இருத்தல் . |
| இயல்பு | தன்மை ; இலக்கணம் ; ஒழுக்கம் ; நற்குணம் ; நேர்மை ; முறை ; வரலாறு ; பிரமாணம் பத்தனுள் ஒன்று . |
| இயல்புகணம் | உயிர்க்கணம் மென்கணம் இடைக்கணங்கள் . |
| இயல்புநயம் | ஒற்றுமை முதலிய நயங்கள் நான்கனுள் ஒன்று . |
| இயல்புபுணர்ச்சி | மாறுபாடின்றிச் சொற்கள் ஒன்றோடொன்று இயைந்து நிற்றல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 112 | 113 | 114 | 115 | 116 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயம்புதல் முதல் - இயற்படமொழிதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, தன்மை, இயல்பு, தலைவன், இயற்கை, பொருள், இலக்கணம், பெயர், வரும், இன்பம், சொல்லுதல், இயற்சீர், ஒலித்தல், ஒழுக்கம், இயமானன், காண்க, இயமகணம், நேரும், அமைந்த, காடு, செலவு, நூல், விளி, இறைவன், உணர்கை, இயற்கைப், சொல், அறிவு, முதலிய

