முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இரண்டறக்கலத்தல் முதல் - இரத்தகமலம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இரண்டறக்கலத்தல் முதல் - இரத்தகமலம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இரணவஞ்சம் | போகபூமியுள் ஒன்று . |
| இரணவாதம் | நோய்வகை . |
| இரணவீரன் | போர்வீரன் ; அங்காளம்மை கோயிலின் பரிவார தெய்வம் . |
| இரணவைத்தியம் | அறுவை மருத்துவம் |
| இரணவைத்தியன் | அறுவை மருத்துவன் . |
| இரணிய கர்ப்பதானம் | பொற்பசுவின் வயிற்றினுள் புகுந்து வெளிவந்து அப் பசுவையே கொடையாக அளித்தல் . |
| இரணியகர்ப்பம் | ஒரு வேள்வி ; பொன்னால் செய்த பசு வயிற்றினூடாகப் புகுந்து வெளிவரும் சடங்கு . |
| இரணியகர்ப்பமதம் | பிரமாவே முதற்கடவுள் என்னும் சமயம் . |
| இரணியகர்ப்பர் | பிராணனே ஆத்துமா என்னும் சார்வாகருள் ஒருசாரார் . |
| இரணியகர்ப்பன் | பொன்முட்டையிலிருந்து பிறந்தவன் , பிரமன் . |
| இரணியகன் | பொன்னுடையவன் . |
| இரணியசிராத்தம் | பொன் கொடுத்துச் செய்யும் சிராத்தம் . |
| இரணியதானம் | பொன்னைக் கொடையாகக் கொடுக்கை . |
| இரணியநேரம் | அந்திநேரம் . |
| இரணியம் | பொன் ; பணம் . |
| இரணியமரம் | மரவகை . |
| இரணியவேளை | காண்க : இரணியநேரம் . |
| இரத்தக்கட்டி | புண்கட்டிவகை . |
| இரத்தக்கட்டு | உதிரம் சுரக்கை . |
| இரத்தக் கண்ணன் | கோபக் கண்ணுடையவன் . |
| இரத்தக்கலப்பு | நெருங்கிய உறவு . |
| இரத்தக்கவிச்சு | உதிர நாற்றம் . |
| இரத்தக்கழிச்சல் | பேதிவகை . |
| இரத்தக்கனப்பு | இரத்தக் கொழுப்பு . |
| இரத்தக்காணிக்கை | போரில் இறந்த வீரரின் மைந்தர்க்குக் கொடுக்கும் மானியம் . |
| இரத்தக்கிராணி | காண்க : இரத்தக்கழிச்சல் . |
| இரத்தக்கொதி | துக்கம் முதலியவற்றால் உண்டாகும் இரத்தக் கொதிப்பு ; காமக் கிளர்ச்சி . |
| இரத்தக்கொழுப்பு | இரத்த நிறைவு ; மதம் ; செருக்கு . |
| இரத்தக்கோமாரி | மாட்டுக்கு வரும் இரத்தக்கழிச்சல் நோய் . |
| இரத்தகம் | குசும்பாப்பூ ; சிவப்புச் சீலை . |
| இரத்தகமலம் | செந்தாமரை . |
| இரண்டறக்கலத்தல் | இருபொருன் பேதமின்றி ஒன்றாதல் ; ஆன்மா இறைவனுடன் ஐக்கியமாதல் ; முத்தியடைதல் . |
| இரண்டாகுதல் | இரு துண்டாதல் . |
| இரண்டாங்கட்டு | வீட்டின் இரண்டாம் பகுதி . |
| இரண்டாங்காலம் | கோயிலில் அந்திக்காப்புக்கும் அர்த்தசாமத்திற்கும் நடுவில் நடக்கும் பூசை . |
| இரண்டாட்டுதல் | இருநெறிப்படுதல் . |
| இரண்டாந்தரம் | முக்கியம் அல்லாதது ; நடுத்தரம் ; இடைவேளை உணவு . |
| இரண்டாநிலம் | மேன்மாடம் . |
| இரண்டாம் பாட்டன் | பாட்டனின் தந்தை . |
| இரண்டாம்போகம் | இரண்டாம் முறைப் பயிர் விளைவு . |
| இரண்டிகை | காண்க : இண்டை . |
| இரண்டு | ' இரண்டு ' என்னும் எண் ; சில ; உகர எழுத்து ; மலசலம் . |
| இரண்டுக்குப் போதல் | மலங்கழித்தல் . |
| இரண்டுக்குற்றது | இதுவோ , அதுவோ என்னும் நிலை . |
| இரண்டுங்கெட்டநேரம் | அந்திப்பொழுது . |
| இரண்டுடை | இருவேறு வகையான ஆடை ; மாற்று உடை ; ' கருவேல் வெள்வேல் ' என்னும் உடைமரங்கள் . |
| இரண்டுபடுதல் | வேறுபடுதல் ; ஒற்றுமையின்மை ; ஐயுறுதல் . |
| இரண்டுவவு | மதி மறைவும் மதி நிறைவும் . |
| இரண்டெட்டில் | விரைவில் . |
| இரண்டை | கைம்பெண் . |
| இரண்டொன்று | சில . |
| இரணகள்ளி | கள்ளிவகை . |
| இரணகளம் | போர்க்களம் ; பெருங்குழப்பம் . |
| இரணகாளம் | போரை நிறுத்த ஊதும் எக்காளம் . |
| இரணகெம்பீரம் | போரில் ஆரவாரித்தல் . |
| இரணங்கொடுத்தல் | அடித்தல் . |
| இரணங்கொல்லி | ஆடுதின்னாப்பாளை ; தும்பை . |
| இரணசங்கம் | போர் வென்று ஊதும் சங்கு ; வெற்றுச் சங்கு . |
| இரணசன்னி | புண்களால் உண்டாகும் சன்னி . |
| இரணசிகிச்சை | காண்க : இரணவைத்தியம் . |
| இரணசுக்கிரன் | கண்ணோய்வகை . |
| இரணசூரன் | போர்வீரன் . |
| இரணத்தொடை | காண்க : முரண்தொடை . |
| இரணதூரியம் | காண்க : இரணபேரி . |
| இரணபத்திரகாளி | துர்க்கை , போரில் வெற்றி தரும் கொற்றவை . |
| இரணபாதகம் | கொலை ; நம்பிக்கைத் துரோகம் . |
| இரணபாதகன் | கொலைத்தொழிற் கொடியோன் . |
| இரணபேரி | போர்ப்பறை . |
| இரணபேரிகை | போர்ப்பறை . |
| இரணம் | கடன் ; போர் ; புண் ; பொன் ; மாணிக்கம் ; சுக்கிலம் ; பலகறை . |
| இரணரங்கம் | போர்க்களம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 116 | 117 | 118 | 119 | 120 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டறக்கலத்தல் முதல் - இரத்தகமலம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, என்னும், இரத்தக், போரில், இரண்டாம், இரத்தக்கழிச்சல், பொன், போர், ஊதும், சங்கு, இரணபேரி, போர்ப்பறை, போர்க்களம், இரணவைத்தியம், போர்வீரன், புகுந்து, அறுவை, உண்டாகும், இரணியநேரம், இரண்டு

