தமிழ் - தமிழ் அகரமுதலி - இரஞ்சிதம் முதல் - இரண்டகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இரட்டை நாடி | மிகப் பருத்த உடம்பு . |
| இரட்டைப் படை | இரட்டிப்பு ; இரட்டைப்பட்ட எண் . |
| இரட்டைப் பாக்கு | இரு கண்ணுள்ள பாக்கு . |
| இரட்டைப் பிள்ளை | ஒரே கருப்பத்தினின்றும் தனித்தனியாக ஒரு சமயத்துப் பிறந்த இருவர் ; இரட்டையாகக் கிளைக்கும் தென்னை அல்லது கமுகு . |
| இரட்டைப் பூட்டு | இருமுறை பூட்டும் பூட்டு ; பாதுகாப்புக்காக இடும் இருவேறு பூட்டு . |
| இரட்டைப் பூரான் | சதங்கைப் பூரான் . |
| இரட்டை மணி | அணிவகை . |
| இரட்டைமணிமாலை | பிரபந்தவகை ; வெண்பா , கலித்துறை இரண்டும் மாறிமாறி இருபது பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறுநூல்வகை . |
| இரட்டையர் | இரட்டைப் பிள்ளைகள் ; நகுல சகதேவர் ; இரட்டைப் புலவர்களான இளஞ்சூரியர் முதுசூரியர் என்ற புலவர் . |
| இரட்டையாட்சி | இருதிறத்தார் பகுத்துக் கொண்டு செய்யும் அரசாட்சி . |
| இரட்டையேணி | கவை ஏணி ; ஒன்றன்மேல் ஒன்று வைத்துக் கட்டப்பட்ட ஏணி . |
| இரட்டைவரி | ஒரே நிலத்துக்காக அரசினருக்கும் ஊராட்சி நிறுவனங்களுக்கும் செலுத்தும் வரி . |
| இரட்டை விருத்தம் | பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் . |
| இரண்டகம் | இருமனம் , துரோகம் . |
| இரஞ்சிதம் | இன்பமானது ; சித்திரிக்கப்பட்டது . |
| இரட்சகம் | இரட்சிப்பு ; மீட்பு ; காத்தல் . |
| இரட்சகன் | காப்பாற்றுபவன் ; உய்விப்பவன் . |
| இரட்சணம் | காண்க : இரட்சகம் . |
| இரட்சணியசேனை | கிறித்தவ சபையில் ஒரு பிரிவு . |
| இரட்சணியம் | காப்பு ; மீட்பு . |
| இரட்சனை | காண்க : இரட்சகம் . |
| இரட்சாபந்தனம் | காப்புக்கட்டல் ; மந்திராட்சரயந்திரக் காப்பு . |
| இரட்சாபோகம் | பாதுகாவல் வரி . |
| இரட்சாமூர்த்தி | காப்புக் கடவுள் , திருமால் . |
| இரட்சித்தல் | காத்தல் ; மீட்குதல் . |
| இரட்சிப்பு | காப்பாற்றுகை ; உய்வு ; மீட்பு . |
| இரட்சை | காப்பு ; காப்பாக இடுவது ; திருநீறு . |
| இரட்டகத்துத்தி | கத்தூரிவெண்டை . |
| இரட்டர் | இராட்டிரகூட அரசர் . |
| இரட்டல் | இரண்டாதல் ; அசைத்தல் ; மாறி மாறி ஒலித்தல் ; யாழ் நரம்போசை . |
| இரட்டாங்காலி | இரட்டையாகக் கிளைக்கும் மரம் . |
| இரட்டி | இருமடங்கு ; இணைக்கை . |
| இரட்டித்தல் | இருமடங்காக்குதல் ; திரும்பச் செய்தல் ; ஒன்று இரண்டாதல் ; மீளவருதல் ; மாறுபடுதல் ; இகழ்தல் . |
| இரட்டித்துச் சொல்லுதல் | மீட்டுங் கூறுதல் ; இரு பொருள்படச் சொல்லுதல் . |
| இரட்டிப்பு | இருமடங்கு . |
| இரட்டு | இரட்டையாயிருக்கை ; ஒருவகை முருட்டுத்துணி ; ஒலி . |
| இரட்டுதல் | இரட்டித்தல் ; மாறியொலித்தல் ; ஒலித்தல் ; அசைதல் ; வீசுதல் ; கொட்டுதல் ; தெளித்தல் . |
| இரட்டுமி | பறைவகை . |
| இரட்டுறக்காண்டல் | ஐயக் காட்சி ; ஒன்றை இருவேறு பொருளாகப் பார்க்கும் பார்வை . |
| இரட்டுறமொழிதல் | ஓர் உத்தி ; இருபொருள் படச் சொல்லல் . |
| இரட்டுறல் | சிலேடை ; இருபொருள்படுகை . |
| இரட்டுறுதல் | இருபொருள்படுதல் ; ஐயுறுதல் ; மாறுபடுதல் . |
| இரட்டை | இணை ; கணவன் மனைவியர் ; இரட்டைப் பிள்ளைகள் ; இரண்டு ஒன்றானது ; இரட்டை எண் ; அரையாடை மேலாடைகள் ; துப்பட்டி ; மிதுனராசி ; ஆனி மாதம் ; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; முத்துவகை . |
| இரட்டைக்கத்தி | இரண்டு அலகுள்ள கத்தி . |
| இரட்டைக்கதவு | இரண்டு பிரிவாயுள்ள கதவு . |
| இரட்டைக்கிளவி | ஒலிக்குறிப்பில் வரும் இரட்டை மொழி ; இரட்டையாக நின்றே பொருள் உணர்த்துஞ் சொல் , விறுவிறுப்பு என்றாற்போல் வருவது . |
| இரட்டைக்குச்சி | சிலம்ப வித்தைவகை . |
| இரட்டைக் குண்டட்டிகை | கழுத்தணிவகை . |
| இரட்டைக் குறுக்கு | மாட்டுக் குற்றவகை . |
| இரட்டைக்கை | காண்க : இணைக்கை . |
| இரட்டைச்சிரட்டை | இரட்டைக் கொட்டாங்கச்சி . |
| இரட்டைச் சின்னம் | இரட்டையான ஊதுகுழல் வகை . |
| இரட்டைச் சுழி | இரு சுழி ; ஐகாரவொலியைக்குறிக்கும் ' ¬ ' என்னும் சுழி . |
| இரட்டைச்சொல் | இரட்டையாக வரும் குறிப்புச் சொல் . |
| இரட்டைத் தவிசு | இருவர் இருத்தற்குரிய இருக்கை . |
| இரட்டைத் தாளம் | தாளவகை . |
| இரட்டைத்தொடை | ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது . |
| இரட்டை நாகபந்தம் | சித்திரகவிவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 115 | 116 | 117 | 118 | 119 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரஞ்சிதம் முதல் - இரண்டகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இரட்டைப், இரட்டை, வரும், சொல், ஒன்று, காண்க, இரட்சகம், இரண்டு, சுழி, இரட்டைக், காப்பு, மீட்பு, பூட்டு, சொல்லுதல், மாறுபடுதல், இரட்டித்தல், இணைக்கை, இருவர், இரட்டையாக, இரட்டிப்பு, இரட்டைச், பாக்கு, இருமடங்கு, இரட்டைத், ஒலித்தல், இரட்சிப்பு, இருவேறு, விருத்தம், பூரான், காத்தல், கிளைக்கும், மாறி, இரண்டாதல், இரட்டையாகக், பிள்ளைகள்

