தமிழ் - தமிழ் அகரமுதலி - மழைத்தூவல் முதல் - மறப்புலி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மழைத்தூவல் | சிறு திவலையாகத் தூற்றும் மழை . |
| மழைத்தூறல் | சிறு திவலையாகத் தூற்றும் மழை . |
| மழைத்தோற்றம் | மழை வருவதற்குக்குறியான மந்தாரம் . |
| மழைதாங்கி | கொங்காணி ; குடை . |
| மழைப்புகார் | காண்க : மழைத்தோற்றம் . |
| மழைபெய்தல் | மேகத்தினின்று நீர்விழுதல் . |
| மழைமுகில் | சூற்கொண்ட மேகம் . |
| மழையடை | விடாது பெய்யும் மழை . |
| மழையலர் | நீர் . |
| மழையான் | காண்க : மழைவண்ணன் . |
| மழையேறு | இடி . |
| மழையொறுத்தகாலம் | வறண்ட காலம் . |
| மழைவண்ணக்குறிஞ்சி | மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றி . |
| மழைவண்ணன் | திருமால் . |
| மழைவறங்கூர்தல் | மழை பெய்யாதொழிதல் . |
| மழைவீற்றிருத்தல் | பருவமழை பெய்கை . |
| மள்குதல் | குறைதல் . |
| மள்ளம் | வலிமை . |
| மள்ளல் | வலிமை . |
| மள்ளன் | உழவன் ; திண்ணியோன் ; வலிமையுடையவன் ; படைத்தலைவன் ; படைவீரன் ; இளைஞன் ; மருதநிலத்தோன் ; குறிஞ்சிநிலத்து வாழ்வோன் . |
| மள்ளு | கைம்மரம் . |
| மளமளத்தல் | மரக்கொம்பு முதலியன முறியும் போது ஒலியெழும்புதல் . |
| மளமளப்பு | முறிதற்குறிப்புள்ள ஒலி . |
| மளமளெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு . |
| மளாரெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| மளிகாரம் | வெண்காரம் . |
| மளிகை | பலசரக்குக்கடை . |
| மளிகைக்கடை | பலசரக்குக்கடை . |
| மளுக்கெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| மற்கடம் | குரங்கு . |
| மற்கரை | குகை ; மலடி . |
| மற்கு | கோபம் . |
| மற்குணம் | மூட்டுப்பூச்சி . |
| மற்கூத்து | திருமால் ஆடிய கூத்து . |
| மற்கோல் | பகை . |
| மற்சம் | மீன் ; மீனராசி ; ஆசனவகை . |
| மற்சரம் | பொறாமை ; போட்டி . |
| மற்சரித்தல் | போட்டியிடுதல் . |
| மற்சியம் | காண்க : சுவடு ; மற்சம் ; மாற்றறிய வைத்திருக்கும் மாதிரிப்பொன் ; சுவடு ; உடம்பிலுண்டாகும் புள்ளி . |
| மற்பயிலிடம் | மல்வித்தை கற்குங் கூடம் . |
| மற்ற | பிற . |
| மற்றது | ஏனையது . |
| மற்றநாள் | மறுநாள் ; நாளைநின்று மறுநாள் . |
| மற்றப்படி | வேறுவகையில் . |
| மற்றவர் | பிறர் ; ஏனையோர் . |
| மற்று | ஓர் அசைநிலை ; பிறிதின் பொருட்குறிப்பு ; வினைமாற்றுக்குறிப்பு ; மறுபடியும் ; பின் ; காண்க : மற்றப்படி . |
| மற்றும் | மேலும் ; மீண்டும் . |
| மற்றை | காண்க : மற்ற . |
| மற்றையது | குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று . |
| மற்றொழில் | மல்வித்தை . |
| மற்றொன்று | பிறிதொன்று . |
| மறக்கருணை | அழித்து நலமுண்டாக்கும் அருள் . |
| மறக்களம் | போர்க்களம் . |
| மறக்களவழி | போரிற் பகையழிக்கும் ஒருவனை உழும் வேளாளனாக மிகுத்துக்கூறும் புறத்துறை . |
| மறக்களவேள்வி | காண்க : களவேள்வி . |
| மறக்கற்பு | பத்தினி தன் சீற்றத்தாற் கடுஞ்செயல் தோற்றுவிக்குங் கற்பு . |
| மறக்காஞ்சி | போரில் விழுப்புண்பெற்ற வீரன் தன் வாழ்க்கை வேண்டாது அப்புண்ணைக் கிழித்துக்கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை . |
| மறக்குடி | வீரகுலம் ; மறவர்குலம் . |
| மறங்குதல் | கலங்குதல் . |
| மறச்செவி | பாவம் பயக்கும் மொழிகளைக் கேட்குங் காது . |
| மறத்தல் | அயர்த்தல் ; அசட்டைபண்ணல் ; ஒழிதல் ; நினைவின்றிப்போதல் ; பொச்சாப்பு . |
| மறத்தி | மறக்குடிப் பெண் ; பாலைநிலப் பெண் ; குறிஞ்சிநிலப் பெண் . |
| மறத்துறை | பாவநெறி ; வீரச்செயல்கள் . |
| மறதி | நினைவின்மை . |
| மறநிலைப்பொருள் | வெற்றி ; திறை , தண்டம் முதலியவற்றால் அரசன் தேடிய பொருள் . |
| மறநிலையறம் | அரசன் பகையறுத்து நாட்டினைக் காவல்புரியும் அறச்செயல் . |
| மறநிலையின்பம் | வீரச்செயல் , குறியெய்தல் , ஏறுதழுவல் , வலிதிற்கோடல் முதலியவற்றால் விரும்பிய கன்னியை அரசன் மணமுடித்து இன்புறல் . |
| மறப்பிலி | கடவுள் . |
| மறப்பு | நினைவின்மை ; மறுப்பு . |
| மறப்புகழ் | வீரச்செயலால் வருங் கீர்த்தி . |
| மறப்புலி | கொடியபுலி ; சிங்கம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 857 | 858 | 859 | 860 | 861 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மழைத்தூவல் முதல் - மறப்புலி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒலிக்குறிப்பு, பெண், அரசன், மறுநாள், மற்ற, மற்றப்படி, புறத்துறை, முதலியவற்றால், மல்வித்தை, நினைவின்மை, மற்சம், மழைத்தோற்றம், தூற்றும், திவலையாகத், மழைவண்ணன், திருமால், சிறு, பலசரக்குக்கடை, வலிமை, சுவடு

