தமிழ் - தமிழ் அகரமுதலி - மலைவு முதல் - மழைத்துளி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மலைவு | உவமச்சொல் ; மயக்கம் ; மாறுபாடு ; திகைப்பு ; உரை செயல்களின் முன்னுக்குப் பின் முரண் ; இடம் , காலம் , கலை , உலகம் , நியாயம் , ஆகமம் என்பவற்றைப் பொருத்தமின்றிக் கூறுகையாகிய குற்றம் ; போர் . |
| மலைவேம்பு | வேப்பமரவகை ; பெருமரவகை . |
| மவ்வம் | அழகு . |
| மவ்வல் | காண்க : மௌவல் . |
| மவுட்டியம் | அறியாமை . |
| மவுணன் | கணவன் . |
| மவுலி | முடி ; சடை ; தலை . |
| மவுனம் | மோனம் , பேசாமை . |
| மவுனி | ஆமை ; மவுனஞானி . |
| மழ | காண்க : மழவு . |
| மழகொங்கம் | திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி . |
| மழநாடு | திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி . |
| மழபுலம் | திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி . |
| மழபுலவஞ்சி | பகைவர் நாட்டைப் பாழ்படுத்தும் புறத்துறை . |
| மழபுலவர் | பள்ளியிற் படிக்கும் சிறுவர் . |
| மழமழத்தல் | வழவழப்பாதல் . |
| மழமழப்பு | மெதுத்தன்மை ; உரை செயல்களில் உறுதியின்மை . |
| மழமழெனல் | மெத்தெனற்குறிப்பு . |
| மழலை | குழந்தைகளின் திருந்தாச் சொல் ; மென்மொழி ; இளமை ; மெல்லோசை . |
| மழலைத்தேன் | புதுத்தேன் . |
| மழலைப்பேச்சு | குதலைச்சொல் ; திருந்தாப்பேச்சு . |
| மழவன் | இளைஞன் ; வீரன் ; மழநாட்டான் . |
| மழவு | இளமை ; குழந்தை ; மயக்கம் . |
| மழறுதல் | மென்மையாதல் ; தெளிவில்லாதிருத்தல் . |
| மழித்தல் | மொட்டையடித்துக்கொள்ளுதல் . |
| மழித்தலை | மொட்டைத்தலை . |
| மழு | கோடரி ; காண்க : மழுவாள் ; பழுக்கக் காய்ச்சிய இரும்பு ; கடல் ; மழுங்கிய ; அதிகமான . |
| மழு | (வி) கப்பு ; மங்கு . |
| மழுக்கம் | கூரின்மை ; நிலைமைத்தாழ்வு ; ஒளிமழுங்குகை ; விவேகமின்மை ; மொட்டை . |
| மழுக்கல் | நெல்லை ஒருமுறை குற்றியெடுத்த தவிடு நீங்காத அரிசி . |
| மழுக்குதல் | மழுங்கச்செய்தல் ; ஒளிகுறையச்செய்தல் ; விவேகத்தைக் குறைத்தல் ; நெற்குற்றுதல் ; அடித்தல் ; மொக்குதல் . |
| மழுகுதல் | மழுங்குதல் ; ஒளிகுறைதல் . |
| மழுகூழை | வாலிழந்த விலங்கு ; மூடன் . |
| மழுங்கல் | மழுங்கினது ; நாணிலி ; மூடன் ; மட்டமான பொன் வகை . |
| மழுங்குணி | அறிவற்றவன் . |
| மழுங்குதல் | கூர்நீங்குதல் ; பொலிவழிதல் ; கெடுதல் ; ஒளிகுறைதல் ; அறிவுக்கூர்மை குறைதல் ; கவனிப்பின்றி மறைந்துபோதல் . |
| மழுப்பன் | செயலை மழுப்பிவிடுவோன் ; தாமதப்படுத்துவோன் ; குதர்க்கம் பேசுவோன் . |
| மழுப்புதல் | நெகிழவிடுதல் ; செயலைப் பயனற்றதாக நெகிழ்த்துதல் ; தாமதப்படுத்தல் ; ஏமாற்றுதல் . |
| மழுமட்டை | கூர்மழுங்கினது ; முழுமூடத்தனம் . |
| மழுமாறி | புரட்டன் . |
| மழுமாறுதல் | தந்திரம் பண்ணுதல் . |
| மழுமொட்டை | கூர்மழுங்கினது ; முழுமொட்டையான தலை . |
| மழுவலான் | காண்க : மழுவாளி . |
| மழுவன் | அஞ்சாதவன் ; நகர்காப்போன் ; பிடிவாதமுள்ளவன் . |
| மழுவாள் | பரசாயுதம் . |
| மழுவாளி | காண்க : மழுவோன் ; பரசுராமன் . |
| மழுவி | நாணமிழந்தவள் . |
| மழுவெடுத்தல் | கை , நா முதலியவற்றிலே மழுவையேந்திச் சூளுரைத்தல் . |
| மழுவேந்தி | காண்க : மழுவாளி ; பொய்யன் . |
| மழுவோன் | மழுவை ஆயுதமாகக் கொண்டவனான சிவபிரான் . |
| மழை | மேகத்தினின்று பொழியும் நீர் ; நீருண்ட மேகம் ; காண்க : மழைக்கால் ; நீர் ; கருமை ; குளிர்ச்சி ; மிகுதி . |
| மழைக்கண்ணி | ஒரு பறவை வகை . |
| மழைக்கரு | மேகம் நீர்கொள்ளுதல் ; புகை . |
| மழைக்கால் | பெய்யும் நிலையில் கருநிறத்தோடு மேகத்திலிருந்து இறங்கும் நீர்க்கால் . |
| மழைக்காலிருட்டு | மழைபெய்யுங் காலத்து இரவிலுண்டாகும் பேரிருள் . |
| மழைக்குணம் | காண்க : மழைத்தோற்றம் . |
| மழைக்குறி | காண்க : மழைத்தோற்றம் . |
| மழைக்கோள் | சுக்கிரன் . |
| மழைக்கோளாறு | காண்க : மழைத்தோற்றம் ; புயலெடுக்கை . |
| மழைகாலம் | மாரிக்காலம் . |
| மழைச்சிலை | வானவில் . |
| மழைத்தல் | மழை நிறைந்திருத்தல் ; கருநிறமாதல் ; குளிர்தல் ; மழைபெய்தல் . |
| மழைத்தாரை | விடாது பொழியும் மழைநீர் . |
| மழைத்துளி | மழைநீர்ச்சொட்டு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 856 | 857 | 858 | 859 | 860 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைவு முதல் - மழைத்துளி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வடபாகத்திலுள்ள, பகுதி, மேம்பால், மழுவாளி, காவிரியாற்றுக்கு, மழைத்தோற்றம், திருச்சிராப்பள்ளிக்கு, மழுவோன், பொழியும், மேகம், மழைக்கால், கூர்மழுங்கினது, நீர், மழுவாள், மழவு, மயக்கம், இளமை, சொல், ஒளிகுறைதல், மழுங்குதல், மூடன்

