தமிழ் - தமிழ் அகரமுதலி - மறுதாரம் முதல் - மறைவு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மறுதாரம் | இரண்டாந்தாரம் . |
| மறுதொழில் | பாவம் . |
| மறுநாள் | அடுத்த தினம் . |
| மறுநோய் | மறுக்களித்த நோய் ; பழம்பிறப்புணர்வு . |
| மறுப்ப | ஓர் உவம வாய்பாடு . |
| மறுப்படுதல் | வசைப்பாடல் ; சிதைவுறுதல் ; புள்ளியுடைத்தாதல் ; துன்பப்படுதல் . |
| மறுப்பு | மறுத்தல் ; எதிர்த்தல் ; கண்டனம் ; மறு உழவு ; முன்னுழுத சாலுக்குக் குறுக்காக உழுகை . |
| மறுபடி | விடை ; காண்க : மறுபடியும் . |
| மறுபடியும் | மீளவும் . |
| மறுபாடு | பின்பக்கம் . |
| மறுபாடுருவ | நன்றாக . |
| மறுபாடுருவுதல் | ஊடுருவிப்போதல் . |
| மறுபாவி | பகைவன் . |
| மறுபிறப்பு | முற்பிறப்பு ; இனி உண்டாகப் போகும் பிறப்பு ; புதுப்பிறப்பு . |
| மறுபிறவி | முற்பிறப்பு ; இனி உண்டாகப் போகும் பிறப்பு ; புதுப்பிறப்பு . |
| மறுபுலம் | பாலைநிலம் . |
| மறுபேச்சு | மாற்றிக் கூறும் சொல் ; தடுத்துரைக்கை ; காண்க : மறுசொல் . |
| மறுபோகம் | ஆண்டின் இரண்டாம் முறை விளைச்சல் . |
| மறுமணம் | கணவன் அல்லது மனைவி இறந்த பின் மீண்டும் செய்துகொள்ளுங் கலியாணம் . |
| மறுமனசுபடுதல் | முன்னிருந்த எண்ணம் மாறுதல் . |
| மறுமாடி | வீட்டின் உத்தரமட்டத்துக்கு மேலுள்ள அடைப்புச்சுவர் ; மாடிக்குமேல்மாடி ; மலைப்பிளவு ; வரம்பு . |
| மறுமாற்றம் | காண்க : மறுசொல் ; கறிப்பொருள் . |
| மறுமுகம் | வேறு பக்கம் ; அயலான் முகம் . |
| மறுமுள் | பாலுண்ணி ; அம்மை முத்தின் மேலுண்டாம் மறுமுத்து ; ஆறிவரும் புண்ணில் தோன்றும் சிரங்கு . |
| மறுமுறை | மறுதடவை ; மறுபிறப்பு . |
| மறுமை | மறுபிறவி ; மறுவுலகம் . |
| மறுமொழி | பதில்விடை ; அனுப்புஞ் செய்தி . |
| மறுவருதல் | மனஞ்சுழலுதல் . |
| மறுவல் | கத்தூரிவிலங்கு ; கத்தூரி ; மீட்டும் . |
| மறுவலிடுதல் | திரும்புதல் ; சிறிது எஞ்சிநிற்றல் . |
| மறுவலும் | மீண்டும் . |
| மறுவி | காண்க : மறுவல் . |
| மறை | மறைக்கை ; இரகசியம் ; மந்திராலோசனை ; வேதம் ; உபநிடதம் ; ஆகமம் ; மந்திரம் ; உபதேசப் பொருள் ; சிவப்புப் புள்ளிகளையுடைய மாடு முதலியன ; களவுப் புணர்ச்சி ; பெண்குறி ; உருக்கரந்த வேடம் ; திருகுவகை ; விளக்கின் திரியை ஏற்றவும் இறக்கவும் உதவும் திருகுள்ள காய் ; புகலிடம் ; சிறைக்கூடம் ; மறைவிடம் ; வஞ்சனை ; இரண்டாம் உழவு ; கேடகம் ; எதிர்மறை ; விலக்குகை ; புள்ளி ; சங்கின் முறுக்கு . |
| மறைக்கிழவன் | காண்க : மறைக்கோ . |
| மறைக்கொடியோன் | துரோணாச்சாரியன் ; பார்ப்பனன் ; பிரமன் . |
| மறைக்கோ | பிரமன் . |
| மறைச்சி | புள்ளியுள்ள பெண்விலங்கு ; பார்ப்பனத்தி . |
| மறைச்சிரம் | உபநிடதம் . |
| மறைசை | மறைக்காடு ; வேதாரணியம் . |
| மறைசொல் | காண்க : மறைமொழி . |
| மறைத்தல் | மறையச்செய்தல் ; மூடுதல் ; தீது வாராமற் காத்தல் . |
| மறைத்தலைவி | திருமகள் . |
| மறைத்துமொழிகிளவி | இடக்கரடக்கல் . |
| மறைதல் | ஒளிந்துகொள்ளுதல் ; தோன்றாமற்போதல் . |
| மறைப்பு | நிரைச்சல் ; ஒளிப்பு . |
| மறைப்புச்சுவர் | வீட்டுக்குள் கட்டப்படும் கனமில்லாத சுவர் . |
| மறைபதி | கள்ளக்கணவன் . |
| மறைபுகல் | அடைக்கலம் புகுதல் . |
| மறைபொருள் | உட்கருத்து ; ஒளிக்கத்தக்கது ; இரகசியம் . |
| மறைமுடுக்கி | வில்முடுக்கி . |
| மறைமுடிவு | வேதாந்தம் ; கடவுள் . |
| மறைமுதல் | கடவுள் ; சிவபிரான் ; பிரணவம் . |
| மறைமுதல்வன் | கடவுள் ; வேதம்வல்ல அந்தணன் . |
| மறைமுதலி | காண்க : மறைமுதல் . |
| மறைமூலம் | உச்சிமையம் ; பிரமரந்திரம் . |
| மறைமொழி | மந்திரம் ; வேதம் ; இடக்கரடக்கல் . |
| மறையான் | பிரமன் ; காண்க : மறைபதி . |
| மறையிலார் | இழிந்தோர் . |
| மறையிறை | காண்க : மறுசொல் . |
| மறையீறு | உபநிடதம் . |
| மறையோன் | பிரமன் ; வியாழன் ; அந்தணன் . |
| மறைவாணர் | பார்ப்பனர் . |
| மறைவிடம் | வெளியிலிருந்து காணவியலாத இடம் ; கழிவிடம் . |
| மறைவிடை | மறுத்துக்கூறும் விடை . |
| மறைவு | மறைகை ; ஒளிப்பிடம் ; இரகசியம் ; நிரைச்சல் ; கோள்கள் ஒன்றாலொன்று மறைகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 859 | 860 | 861 | 862 | 863 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மறுதாரம் முதல் - மறைவு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பிரமன், கடவுள், மறுசொல், இரகசியம், உபநிடதம், மறைக்கோ, மந்திரம், மறைவிடம், இடக்கரடக்கல், அந்தணன், மறைகை, மறைமுதல், மறைபதி, வேதம், நிரைச்சல், மறைமொழி, மறுவல், மறுபிறப்பு, முற்பிறப்பு, மறுபடியும், விடை, உழவு, உண்டாகப், போகும், இரண்டாம், மீண்டும், மறுபிறவி, புதுப்பிறப்பு, பிறப்பு, சொல்

