முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சிவனார்வேம்பு முதல் - சிற்றிரை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சிவனார்வேம்பு முதல் - சிற்றிரை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சிவனார்வேம்பு | ஒரு செடிவகை . |
| சிவனி | கழுதை . |
| சிவா | கடுக்காய் ; கீழாநெல்லி ; ஆடுதின்னாப் பாளை ; வன்னிமரம் . |
| சிவாசாரியர் | ஆதிசைவர்களுடைய பட்டப்பெயர் . |
| சிவாட்சம் | உருத்திராக்கமணி . |
| சிவாதரம் | மரக்கொம்பு . |
| சிவாயநம | சைவர்களால் போற்றப்படும் ஐந்தெழுத்து மந்திரம் . |
| சிவார்ச்சனம் | சிவபூசை . |
| சிவார்ச்சனை | சிவபூசை . |
| சிவாருகம் | ஆலமரம் . |
| சிவாலயம் | சிவன்கோயில் . |
| சிவானுபூதி | சிவனோடு இரண்டறக் கலக்கும் அனுபவம் . |
| சிவிகரம் | சாதிக்காய் . |
| சிவிகை | பல்லக்கு ; எருதுபூட்டிய வண்டிவகை . |
| சிவிகையார் | பல்லக்குச் சுமக்கும் சாதியார் . |
| சிவிங்கி | ஒரு விலங்குவகை ; ஒரு பறவைவகை ; சிறுத்தை . |
| சிவிட்கு | கோபம் . |
| சிவிட்கெனல் | பொறுமையின்மைக் குறிப்பு ; விரைவுக்குறிப்பு . |
| சிவிடு | சிறிது ; முந்நூற்றறுபது நெல் பிடிக்கும் அளவு . |
| சிவிரம் | படையெடுத்த அரசன் தங்குமிடம் , பாசறை . |
| சிவிறி | விசிறி ; நீர்வீசும் கருவி . |
| சிவிறுதல் | பரத்தல் ; காண்க : விசிறுதல் . |
| சிவுகம் | மோவாய் . |
| சிவேதை | செடிவகை ; நாணல் . |
| சிவேரெனல் | செந்நிறக்குறிப்பு . |
| சிவை | பார்வதி ; காளி ; நரி ; வேர் ; உலைமூக்கு ; நெல்லிக்காய் . |
| சிவைக்கியம் | சிவனும் உயிரும் ஒன்றாய் இருத்தல் . |
| சிவோகம்பாவனை | சிவனே நான் என்று பாவித்தல் . |
| சிழகுதல் | விம்முதல் . |
| சிள்வண்டு | சுவர்க்கோழி . |
| சிள்வீடு | சுவர்க்கோழி . |
| சிள்ளீடு | சுவர்க்கோழி . |
| சிள்ளுப்புள்ளெனல் | சினக்குறிப்பு . |
| சிள்ளெனல் | விரைவுக்குறிப்பு ; ஆரவாரக் குறிப்பு . |
| சிளுசிளுத்தல் | இரைச்சற்குறிப்பு ; பதனழிவு . |
| சிளுசிளெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சிளுபுளெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சிளைத்தல் | சோர்தல் . |
| சிற்குணம் | மெய்யறிவு , ஞானமாகிய குணம் . |
| சிற்குணன் | கடவுள் . |
| சிற்சத்தி | ஐவகை ஆற்றல்களுள் ஒன்று . |
| சிற்சபை | சிதம்பர நடனசபை . |
| சிற்சிலிர்ப்பான் | அம்மைநோய்வகை . |
| சிற்சுகம் | அறிவின்பம் , ஞானானந்தம் . |
| சிற்பசாத்திரம் | சிற்பவித்தை . |
| சிற்பசாலை | சிற்பவேலை செய்யுமிடம் . |
| சிற்பம் | கல்லில் செதுக்கிய உருவம் ; நுண்தொழில் ; சிற்பக்கலை ; சிந்திக்கை ; அற்பம் ; தொழில்திறமை . |
| சிற்பர் | சிற்பிகள் . |
| சிற்பரக்கூர்மை | கந்தகவுப்பு . |
| சிற்பரம் | கடவுள் . |
| சிற்பரவுப்பு | இந்துப்பு . |
| சிற்பரன் | அறிவுக்கு எட்டாத கடவுள் . |
| சிற்பரை | பார்வதி ; சலவைக்கட்டி ; பொன்னிமிளை . |
| சிற்பன் | படைப்புத்தொழிலில் வல்லவனாகிய பிரமன் ; சிற்பத் தொழிலோன் . |
| சிற்பாசாரி | சிற்பக்கலைஞன் ; நுட்பத்தொழில் செய்வோன் ; கம்மியன் . |
| சிற்பி | சிற்பக்கலைஞன் ; நுட்பத்தொழில் செய்வோன் ; கம்மியன் . |
| சிற்றகத்தி | ஒரு மரவகை . |
| சிற்றஞ்சிறுகால் | அதிகாலை , வைகறை . |
| சிற்றடி | சிறிய கால் . |
| சிற்றடிப்பாடு | மனித நடமாட்டம் அதிகம் இல்லாத ஒற்றையடிப்பாதை . |
| சிற்றடியார் | குற்றேவல் செய்வோர் . |
| சிற்றண்டம் | முட்டை . |
| சிற்றப்பன் | சிறிய தகப்பன் ; மாற்றாந் தகப்பன் . |
| சிற்றம்பலம் | சிதம்பரத்து நடனசபை . |
| சிற்றம்பலவன் | சிதம்பரத்தில் நடனமாடுஞ் சிவபெருமான் . |
| சிற்றரத்தை | ஒரு செடிவகை . |
| சிற்றவை | சிறிய தாய் . |
| சிற்றறிவன் | ஆன்மா . |
| சிற்றறிவு | சுருங்கிய அறிவு , புல்லறிவு . |
| சிற்றாடை | சிறுமியர் அணியும் உடை ; சிறிய ஆடை . |
| சிற்றாத்தாள் | சிறிய தாய் . |
| சிற்றாமணக்கு | ஓர் ஆமணக்குவகை . |
| சிற்றாமல்லி | காட்டுமல்லிகை . |
| சிற்றாமுட்டி | ஒரு செடிவகை . |
| சிற்றால் | கல்லத்திமரம் . |
| சிற்றாலவட்டம் | பீலிவட்ட விசிறி . |
| சிற்றாள் | ஏவலாள் ; பையன் ; கொத்தனுக்கு உதவிபுரியுங் கூலியாள் . |
| சிற்றாறு | சிறு ஆறு . |
| சிற்றி | சிறிய தாய் ; பசளைக்கீரை . |
| சிற்றிதழ் | அகவிதழ் ; அழகான பின்னல் . |
| சிற்றிரு | கிலுகிலுப்பைச்செடி . |
| சிற்றிரை | சிற்றுயிர்களின் உணவு ; எளிய உணவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 463 | 464 | 465 | 466 | 467 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவனார்வேம்பு முதல் - சிற்றிரை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிறிய, செடிவகை, தாய், சுவர்க்கோழி, கடவுள், குறிப்பு, கம்மியன், தகப்பன், சிவபூசை, உணவு, செய்வோன், நுட்பத்தொழில், ஒலிக்குறிப்பு, விசிறி, விரைவுக்குறிப்பு, நடனசபை, சிற்பக்கலைஞன், பார்வதி

