தமிழ் - தமிழ் அகரமுதலி - சிறாங்கை முதல் - சிறுநுண்மை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சிறாங்கை | காண்க : சிறங்கை . |
| சிறாம்பி | காவற்பரண் . |
| சிறாம்பித்தல் | ஒருசேரத் திரட்டுதல் . |
| சிறாம்பு | மரச்சிலும்பு . |
| சிறாம்புதல் | குறுகுதல் ; இளைத்தல் ; உராய்தல் ; பிறாண்டுதல் . |
| சிறாய் | மரத்துண்டு . |
| சிறாய்த்தல் | உராய்ந்து ஊறுபடுதல் . |
| சிறாய்த்துக்குச்சி | செடிவகை . |
| சிறார் | சிறுவர் . |
| சிறிட்டம் | விளாம்பட்டை . |
| சிறிது | இழிந்தது . |
| சிறிதுரைத்தல் | இகழ்ந்து பேசுதல் . |
| சிறிபலம் | வில்வமரம் . |
| சிறியசிந்தையர் | கீழோர் . |
| சிறியத்தினி | வேலிப்பருத்தி . |
| சிறிய தகப்பன் | தந்தைக்குப் பின்னோன் ; சிறிய தாயின் கணவன் . |
| சிறிய தாய் | தாயின் தங்கை ; சிற்றப்பன் மனைவி ; இளைய மாற்றாந் தாய் . |
| சிறியநோக்குதல் | கடைக்கண்ணால் பார்த்தல் . |
| சிறிய மனம் | கயமைக்குணம் . |
| சிறியன் | சிறுவன் ; இழிந்தவன் . |
| சிறியிலை | சிறிய இலை . |
| சிறிவில் | அகிலமரம் . |
| சிறுக்கன் | சிறுவன் . |
| சிறுக்கி | இளம்பெண் ; வேலைக்காரி . |
| சிறுக்குதல் | சிறுகச்செய்தல் ; சினத்தல் . |
| சிறுகல் | சிறுகுதல் , குறைதல் . |
| சிறுகாஞ்சொறி | ஒரு செடிவகை . |
| சிறுகாடு | தூறு அடர்ந்த காடு . |
| சிறுகாப்பியம் | பெருங்காப்பியத்திற்குள்ள உறுப்புகளில் சில குறைந்து நடைபெறும் நூல்வகை . |
| சிறுகாய் | சாதிக்காய் . |
| சிறுகாரிடம் | சாதிக்காய் . |
| சிறுகால் | தென்றல் ; காண்க : காவட்டம்புல் . |
| சிறுகாலை | உதயம் ; விடியற்காலை ; இளமைப்பருவம் . |
| சிறுகிராமம் | நூறு குடியுள்ள ஊர் . |
| சிறுகீரை | ஒரு கீரைவகை . |
| சிறுகு | குழப்பம் ; துன்பம் ; தடை . |
| சிறுகுடல் | இரைப்பை முதல் பெருங்குடல்வரையுள்ள உணவுக்குழாயின் பகுதி . |
| சிறுகுடி | குறிஞ்சிநிலத்தூர் ; சிற்றூர் ; ஏழைக்குடும்பம் ; சுருங்குதல் ; நிலைதாழ்தல் . |
| சிறுகுழி | 36 சதுர அடிகொண்ட ஓர் அளவை ; கீழ்வாயிலக்கப் பெருக்கம் . |
| சிறுகுறிஞ்சா | ஒரு மருந்துக் கொடிவகை . |
| சிறுகுறிஞ்சி | நேர்வாளமரம் ; புளியாரைப் பூண்டு . |
| சிறுச்சிறிது | கொஞ்சம்கொஞ்சமாக . |
| சிறுசடாமாஞ்சில் | ஒரு மருந்துவகை . |
| சிறுசவளம் | குந்தப்படை . |
| சிறுசெங்குரலி | கருந்தாமக்கொடி . |
| சிறுசெய் | பாத்தி . |
| சிறுசொல் | பழிச்சொல் ; இழிச்சொல் . |
| சிறுசோற்றுவிழவு | சோற்றைத் தயிர் முதலியவற்றோடு கலந்து உருண்டைகளாக்கி அவற்றை வருவோர்க்குக் கொடுத்து மகிழும் கொண்டாட்டம் . |
| சிறுசோறு | குழந்தைகள் விளையாட்டாகச் சமைக்கும் மணற்சோறு ; சித்திரான்னம் . |
| சிறுத்தல் | சிறிதாதல் ; சுறுங்குதல் ; கோபித்தல் ; தடுத்தல் . |
| சிறுத்தை | சிறு புலிவகை . |
| சிறுதகை | தலைவணக்கம் . |
| சிறுதகைமை | தலைவணக்கம் . |
| சிறுதடி | சிறுவயல் ; பாத்தி . |
| சிறுதரம் | சிறிய அளவு ; இளம்பருவம் ; சிறுதரத்துப் பிள்ளைகள் . |
| சிறுதனம் | சிறுபிள்ளைத் தன்மை ; சிறுசேமிப்பு ; சொந்த நிதிகள் . |
| சிறுதாயார் | காண்க : சிறிய தாய் . |
| சிறுதாரை | நீர்வீசுந் துருத்தி . |
| சிறுதாலி | சிறிய தாலிவகை ; கணவனது வாழ்நாள்வரை மகளிர் கழுத்தில் சரட்டுடன் எப்பொழுதுமுள்ள தாலி ; வைப்பாட்டிக்குக் கொடுக்குந் தாலி . |
| சிறுதானியம் | புன்செய்த் தானியம் . |
| சிறுதிகை | வடகிழக்கு , வடமேற்கு , தென்கிழக்கு , தென்மேற்கு எனப்படும் கோணத்திசைகள் . |
| சிறுதிசை | வடகிழக்கு , வடமேற்கு , தென்கிழக்கு , தென்மேற்கு எனப்படும் கோணத்திசைகள் . |
| சிறுதிட்டை | சிறுமேடு . |
| சிறுதுகில் | கந்தை . |
| சிறுதுடி | சிறிய உடுக்கைவகை . |
| சிறுதுத்தி | ஒரு பூண்டுவகை . |
| சிறுதேட்டு | காண்க : சில்வானம் . |
| சிறுதேர் | விளையாட்டு வண்டி ; காண்க : சிறுதேர்ப்பருவம் . |
| சிறுதேர்ப்பருவம் | தலைவன் சிறிய தேரைச் செலுத்தும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பகுதி . |
| சிறுதேவபாணி | இசைப்பாவகை . |
| சிறுதொழில் | இழிசெயல் . |
| சிறுநகை | புன்சிரிப்பு . |
| சிறுநணி | விரைவாக . |
| சிறுநனி | சிறிதுபொழுது ; விரைவாக . |
| சிறுநாக்கு | உண்ணாக்கு . |
| சிறுநீர் | மூத்திரம் . |
| சிறுநுண்மை | அம்பெய்தற்குரிய நால்வகை இலக்குகளுள் மிகவும் சிறியதான இலக்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 465 | 466 | 467 | 468 | 469 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறாங்கை முதல் - சிறுநுண்மை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிறிய, காண்க, தாய், தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு, கோணத்திசைகள், விரைவாக, சிறுதேர்ப்பருவம், வடகிழக்கு, எனப்படும், தலைவணக்கம், தாயின், செடிவகை, சிறுவன், சாதிக்காய், பாத்தி, பகுதி, தாலி

