தமிழ் - தமிழ் அகரமுதலி - சிலுகன் முதல் - சிவசக்தி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சிலுகன் | காண்க : சிலுக்கன் . |
| சிலுகி | கலகக்காரி . |
| சிலுகிடுதல் | நிலைகுலைதல் ; சண்டையிடுதல் ; கூச்சலிடுதல் . |
| சிலுகு | சண்டை ; துன்பம் ; குழப்பம் ; கூச்சல் ; குறும்பு ; தடை ; கிட்டாமை . |
| சிலுகுசிலுகெனல் | விரைவுக்குறிப்பு . |
| சிலுகுபாக்கி | கையிருப்பு . |
| சிலுகை | கஞ்சாக்குடுக்கை . |
| சிலுசிலுத்தல் | ஒலித்தல் ; படபடவென்று பேசுதல் ; கோபித்தல் ; குளிர்வருதல் ; குளிர்ந்திருத்தல் ; தூறுதல் . |
| சிலுசிலுப்பு | குளிர்ச்சி ; சிறுகோபம் ; குறும்பு . |
| சிலுசிலெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; குளிரால் நடுங்குதல் குறிப்பு . |
| சிலுத்தல் | பதமாதல் ; சோறு பதனிழிதல் , சோறளிதல் ; கோபித்தல் ; குலுங்கக் காய்த்தல் ; கொஞ்சமாய்ச் சொரிதல் . |
| சிலுநீர் | இலையில் தங்கி விழும் மழைத்துளி . |
| சிலுப்பட்டை | அலப்புகிறவன் ; குறும்பு செய்யுஞ்சிறுவன் . |
| சிலுப்பல் | காண்க : சிலும்பல் . |
| சிலுப்பு | நடுக்கம் ; கோபங்காட்டுகை ; அடங்காநடை . |
| சிலுப்புதல் | தயிர்கடைதல் ; கலக்குதல் ; அசைத்தல் ; சுழற்றுதல் ; மயிர்நெறிக்கச் செய்தல் . |
| சிலும்பல் | சிலிர்த்திருக்கை ; சீலை முதலியவற்றின் கரடு ; துணி முதலியவற்றின் பீறல் . |
| சிலும்பு | மரச்சிறாம்பு ; களிம்பு . |
| சிலும்புதல் | மயிர் முதலியன சிலிர்த்தல் ; கட்டை முதலியவற்றில் தும்பு முதலியன வெளிப்பட்டு நிற்றல் ; பெருகிவருதல் ; ஒலித்தல் ; கலங்குதல் ; அசைதல் . |
| சிலுவட்டை | கீழோர் , கயவர் . |
| சிலுவல் | கந்தை ; எளிமை ; அழகின்மை ; ஒழுங்கின்மை ; மரியாதையின்மை . |
| சிலுவலி | சீர்கெட்டவள் . |
| சிலுவாணம் | செலவுக்குக் கொடுத்ததில் மிகுத்து வைக்கும் பணம் . |
| சிலுவை | கழுமரம் ; கிறித்து அறையப்பட்ட மரம் ; கிறித்தவ சமய சின்னத்துள் ஒன்று . |
| சிலேட்டர் | செட்டிகள் , வணிகர் . |
| சிலேட்டி | செட்டி . |
| சிலேட்டுமம் | உடலிலுள்ள கபக்கூறு . |
| சிலேடித்தல் | இருபொருள்படப் பேசுதல் . |
| சிலேடை | பல பொருள் தரும் பாட்டு ; ஒரு வடிவாய் நின்ற சொற்றொடர் பல பொருளுடையதாக வரும் அணி ; இனிய சொற்றொடர் . |
| சிலேதம் | செம்முருங்கைமரம் . |
| சிலேபணம் | உடலிலுள்ள கபக்கூறு ; இறக்குந்தறுவாயில் தோன்றம் மூச்சு . |
| சிலேபி | ஓர் இனிப்புப் பண்டம் . |
| சிலேற்பனை | காண்க : சிலேபணம் . |
| சிலை | கல்லிற் செதுக்கிய உருவம் ; முழக்கம் ; வில் ; தனுராசி ; மார்கழி மாதம் ; மூல நாள் ; வானவில் ; ஒளி ; வால் ; மருந்து அரைக்கும் குழி அம்மி ; மலை ; அம்மி ; ஒரு மரம் ; சூதகபாடாணம் . |
| சிலைக்கல் | ஈரக்கல் . |
| சிலைத்தல் | ஒலித்தல் ; முழங்குதல் ; யாழொலித்தல் ; கொட்டுதல் ; சினங்கொள்ளுதல் ; பின்னிடுதல் . |
| சிலைநாகம் | சூடாலைக்கல் . |
| சிலைநார் | கல்நார் . |
| சிலைநிறக்கல் | மாமிசச்சிலை . |
| சிலைபாரித்தல் | வில் வளைத்தல் . |
| சிலைமா | மாக்கல் . |
| சிலையடித்தல் | கல்லில் உருவம் செதுக்குதல் . |
| சிலையாவி | காண்க : சிலைநார் . |
| சிலையிராசன் | இரத்தினங்களுள் அரசாகிய வயிரம் . |
| சிலையுடம்பு | புண்கட்டிகள் அடிக்கடி புறப்படுதற்குரிய உடற்கூறு . |
| சிலையோடுதல் | புரையோடுதல் ; எதிரொலித்தல் . |
| சிலைவயிரம் | வயிரக்கல் . |
| சிலைவிந்து | காண்க : சிலைநார் . |
| சிலோச்சயம் | மலை . |
| சிவ்வல் | கடற்பாசி . |
| சிவ்வெனல் | சிவத்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; இறுகற்குறிப்பு . |
| சிவக்குறி | சிவலிங்கம் . |
| சிவகணம் | சிவச்சேவைப் பரிவாரம் . |
| சிவகணமுதல் | சிவகணத்தின் தலைவராகிய நந்திதேவர் . |
| சிவகதி | வீடு , முத்தி . |
| சிவகதிக்கிறை | சிவகதிக்குத் தலைவனான அருகன் . |
| சிவகம் | சாதிக்காய் ; நாய்ச்சீரகம் . |
| சிவகரந்தை | ஒரு பூண்டுவகை . |
| சிவகாமி | சிதம்பரத்து அம்பிகை . |
| சிவங்கரன் | மங்களத்தைச் செய்பவனாகிய சிவபெருமான் . |
| சிவங்கரி | மங்களத்தைச் செய்பவளாகிய பார்வதி . |
| சிவச்சி | சாதிக்காய் . |
| சிவசக்தி | சிவனிற் பிரியாத சக்தி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 461 | 462 | 463 | 464 | 465 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிலுகன் முதல் - சிவசக்தி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒலித்தல், சிலைநார், குறும்பு, உருவம், சிலேபணம், வில், அம்மி, சாதிக்காய், சொற்றொடர், மங்களத்தைச், மரம், கோபித்தல், பேசுதல், விரைவுக்குறிப்பு, சிலும்பல், முதலியவற்றின், உடலிலுள்ள, முதலியன, கபக்கூறு

