முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கொழுதுதல் முதல் - கொள்ளிவாய்ப்பேய் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கொழுதுதல் முதல் - கொள்ளிவாய்ப்பேய் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கொள்ள | இன்னும் ; நிரம்ப ; காரணப்பொருளிலேனும் காலப்பொருளிலேனும் செயவெனெச்சத்துடன் கூடவருந் துணைவினை . |
| கொள்ளப்படுதல் | மனத்துக் கொள்ளுதல் ; நன்கு மதிக்கப்படுதல் ; ஏற்கப்படுதல் . |
| கொள்ளம் | குழைசேறு . |
| கொள்ளாகொள்கை | மிகுதி . |
| கொள்ளாமை | மிகை ; பகை . |
| கொள்ளார் | மனம் பொறாதவர் ; பகைவர் . |
| கொள்ளி | கொள்ளிக்கட்டை ; நெருப்பு ; பொறாமையும் முன்கோபமும் உள்ளவன் ; மகன் ; எருமைநாக்குப்பூண்டு . |
| கொள்ளிக்கட்டை | எரியும் கட்டை . |
| கொள்ளிக்கண் | தீய கண் . |
| கொள்ளிக்கண்ணன் | கண்ணூறுகாரன் ; கொடியவன் . |
| கொள்ளிக்கரப்பான் | குழந்தைக்கு வரும் கரப்பான் நோய்வகை . |
| கொள்ளிக்கால் | ஒரு கால் வெள்ளையான குதிரை ; குற்றம் ; நற்பேறில்லாத கால் . |
| கொள்ளிசெருகுதல் | தீவைத்தல் ; கேடுசெய்தல் . |
| கொள்ளித்தேள் | கடுமையாகக் கொட்டுந் தேள்வகை . |
| கொள்ளிபெறுதல் | இறந்த கோயில் அடியாரை எரித்தற்காகக் கோயிலினின்று நெருப்புப் பெறுதல் . |
| கொள்ளிமண்டிலம் | கொள்ளியைச் சழற்றுவதால் ஏற்படும் வட்டம் . |
| கொள்ளிமாலை | பிணத்திற்கு அணியும் மாலை . |
| கொள்ளியம் | உமரிச்செடி ; புன்கமரம் . |
| கொள்ளியெறும்பு | கடியால் மிக்க நோவை உண்டாக்கும் சிற்றெறும்புவகை . |
| கொள்ளிவட்டம் | கொள்ளி சுழற்றுவதனால் தோன்றும் வட்டம் . |
| கொள்ளிவாய்ப்பிசாசம் | வாயில் நெருப்புடையதாகக் கருதப்படும் பேய்வகை . |
| கொள்ளிவாய்ப்பேய் | வாயில் நெருப்புடையதாகக் கருதப்படும் பேய்வகை . |
| கொழுதுதல் | கோதுதல் , குடைதல் ; பறித்தல் ; கிழித்தல் . |
| கொழுந்தன் | கணவனுடன் பிறந்தான் ; அளியன் ; மைத்துனன் ; கணவன் . |
| கொழுந்தன்பு | இளகிய அன்பு . |
| கொழுந்தி | மனைவியின் தங்கை ; தம்பியின் மனைவி . |
| கொழுந்து | இளந்தளிர் ; இளமையானது ; மென்மை ; மருக்கொழுந்து ; வெற்றிலைக் கொடி ; சுடர் ; படையின் முன்னணி ; சாமரை முதலியவற்றின் நுனி . |
| கொழுந்துக்கால் | வெற்றிலைக்கொடிக்கு நடும் கொழுகொம்பு . |
| கொழுந்துதல் | சுடர்விட்டு எரிதல் ; காய்ச்சப்படுதல் ; வெயிலிற் கருகுதல் . |
| கொழுந்துவிடுதல் | சுடர்விடுதல் ; தளிர்விடுதல் . |
| கொழுந்தோடுதல் | தளிர்விடுதல் . |
| கொழுநன் | கணவன் ; இறைவன் . |
| கொழுநனை | மலரும் பருவத்து அரும்பு . |
| கொழுநீர் | பெருகிய நீர் ; மிகப் புளித்த கள் ; வியர்வை . |
| கொழுப்பிறக்குதல் | செருக்கடக்குதல் . |
| கொழுப்பு | செழிப்பு ; நிணம் ; செழுமை ; குழம்பாயிருக்கை ; செருக்கு ; நிலத்தின் மதர்ப்பு , நிலவளம் . |
| கொழுப்புக்கல் | சிவப்புக்கல்வகை . |
| கொழுப்புக்குடல் | ஆட்டின் சிறுகுடல் . |
| கொழும்புகை | நறும்புகை . |
| கொழுமிச்சை | கிச்சிலி ; நாரத்தை . |
| கொழுமீதி | அரசாங்கத் தீர்வைபோக நிலக்கிழார் அடையும் நிலவருமானம் . |
| கொழுமுதல் | மரத்தின் பருத்த அடிப்பகுதி . |
| கொழுமுறி | இளந்தளிர் . |
| கொழுமை | செழுமை ; இளமை ; அழகு ; நிறம் ; குளிர்ச்சி . |
| கொழுலாபம் | வேளாண்மையிற் கிடைக்கும் ஊதியம் . |
| கொழுவுகதவு | கீற்கதவு . |
| கொழுவுகோல் | காண்க : கொழுகொம்பு . |
| கொள் | காணம் ; குடைவேல் ; சிறு நிறையளவு . |
| கொள்கலம் | பண்டமிடுங் கலம் ; அணி ; ஆடை ; சாந்து , சந்துமாலை முதலியன பெய்கலம் ; பனையோலை , மூங்கில் இவற்றால் ஆகிய கூடை . |
| கொள்கிரயம் | கொள்முதல் ; விலைக்குக் கொண்ட பொருள் . |
| கொள்கை | கருத்து ; கோட்பாடு ; பெறுகை ; நோன்பு ; ஒழுக்கம் ; நிகழ்ச்சி ; இயல்பு ; செருக்கு ; நட்பு ; பாண்டவகை . |
| கொள்கையிடம் | தவச்சாலை . |
| கொள்கொம்பு | காண்க : கொழுகொம்பு . |
| கொள்முதல் | வாங்கின விலை . |
| கொள்வளவு | கொள்ளுகை , பெண் கொள்ளுகை . |
| கொள்வனை | கொள்ளுகை , பெண் கொள்ளுகை . |
| கொள்வனைகொடுப்பனை | கொடுக்கல் வாங்கல் ; திருமணத் தொடர்பாகப் பெண் கொடுத்தலும் எடுத்தலும் . |
| கொள்விலை | காண்க : கொள்முதல் . |
| கொள்விலைக்காணி | விலைக்கு வாங்கின நிலம் . |
| கொள்வினை | பெண்கொள்ளுகை . |
| கொள்வோன் | வாங்குவோன் ; கற்போன் ; நான்காம் வேற்றுமை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 391 | 392 | 393 | 394 | 395 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொழுதுதல் முதல் - கொள்ளிவாய்ப்பேய் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கொள்ளுகை, காண்க, கொழுகொம்பு, கொள்முதல், பெண், தளிர்விடுதல், செழுமை, செருக்கு, வாங்கின, இளந்தளிர், வட்டம், கால், கொள்ளிக்கட்டை, வாயில், நெருப்புடையதாகக், கணவன், பேய்வகை, கருதப்படும், கொள்ளி

