தமிழ் - தமிழ் அகரமுதலி - உலகம் முதல் - உலவைராசி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உலண்டு | பட்டுநூலை உண்டாக்குங் கோற்புழு ; கோற்புழு ; பட்டு |
| உலத்தல் | அழிதல் ; காயவைத்தல் ; கழிதல் ; நீங்குதல் ; குறைதல் ; சாதல் ; முடிவு பெறுதல் |
| உலப்பு | அழிவு ; முடிவு ; சாவு ; குறைவு ; அளவு ; உதவுகை |
| உலப்பேரி | திருத்தப்பட்ட நிலம் |
| உலபம் | நெருங்கிப் படர்ந்த கொடித் திரள் ; விழற்புல் |
| உலம் | திரண்ட கல் ; திரட்சி ; வலிமை ; துன்பம் ; பிணம் ; பட்டாடை ; வாசல் ; நீர் ; காற்று ; அகற்சி |
| உலம்பல் | ஒலித்தல் ; பேரொலி செய்தல் ; ஆரவாரம் ; அலப்புதல் |
| உலம்புதல் | ஒலித்தல் ; பேரொலி செய்தல் ; ஆரவாரம் ; அலப்புதல் |
| உலம்வருதல் | நெஞ்சு உழலுதல் |
| உலமரல் | அலமரல் , சுழற்சி ; துன்பம் ; வருத்தம் ; அச்சக்குறி காட்டுதல் |
| உலமருதல் | காண்க : உலம்வருதல் |
| உலர்ச்சி | காய்வு ; வாட்டம் |
| உலர்த்தி | காய்வு ; வாட்டம் |
| உலர்த்து சூலை | சூலைநோய்வகை |
| உலர்த்துதல் | காயச்செய்தல் ; வாட்டல் |
| உலர்தல் | காய்தல் ; வாடுதல் ; அழிதல் |
| உலர்ந்தம் | தண்டு |
| உலர்ப்பெலி | ஓர் எலிவகை |
| உலரி | ஒலரி , சிறுமீன்வகை . |
| உலவம் | அயலார் முன்பு மனக்கூச்சம் ; இவறல் |
| உலவாக்கிழி | எடுக்க எடுக்கக் குறைவுபடாத பொன்முடிப்பு |
| உலவுதல் | இயங்குதல் ; பரத்தல் ; சூழ்தல் ; பவனிவருதல் ; திரிதல் |
| உலாவுதல் | இயங்குதல் ; பரத்தல் ; சூழ்தல் ; பவனிவருதல் ; திரிதல் |
| உலவை | காற்று ; மரக்கொம்பு ; தழை ; விலங்கின் கொம்பு ; முல்லைநிலக் கான்யாறு ; விறகு ; வள்ளிக்கொடி ; உடைமரம் ; கிலுகிலுப்பை ; மரப்பொந்து ; மரச்செறிவு ; குடைவேல் ; ஓடை ; ஆசை |
| உலவையான் | காற்றுக் கடவுள் , வாயுதேவன் . |
| உலவைராசி | திப்பிலி |
| உலகம் | உலகு , உலகப்பொது , பூமி ; நிலப்பகுதி ; உலகுயிர்கள் ; திக்கு ; மக்கள்தொகுதி ; உலகிலுள்ள உயர்ந்தோர் ஒழுக்கம் ; உயர்ந்தோர் ; உயர்குணம் ; வானம் |
| உலகமரியாதை | உலக வழக்கம் |
| உலகமலையாமை | நூலுக்குரிய பத்து அழகினுள் ஒன்று , உயர்ந்தோர் வழக்கத்தோடு மாறுபடாமை |
| உலகமலைவு | நூற்குற்றங்களுள் ஒன்று , உலக ஒழுகலாற்றோடு இசையாமையாகிய குற்றம் ; உலகத்து ஒழுகலாற்றோடு மாறுபட்ட ஒழுக்கம் நிகழ்ந்ததாகக் கூறுதல் |
| உலகமளந்தான் | வாமனாவதாரத்தில் தன்காலால் உலகை அளந்த திருமால் |
| உலகமாதா | உலகத்தின் தாய் ; கலைமகள் ; அலைமகள் ; மலைமகள் ; செம்மணித்தக்காளி |
| உலகமீன்றாள் | பார்வதி |
| உலகமுண்டோன் | ஊழியிறுதியில் உலகை விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிய திருமால் |
| உலகர் | உலகத்தார் ; பாண்டியர் |
| உலகவழக்கம் | உலக நடைமுறை ; உலகத்தார் ஒழுக்கம் |
| உலகவழக்கு | உலகவழக்கம் ; உலகத்தார் வழங்குவது ; உலக வழக்குச் சொல் |
| உலகவறவி | எல்லா இனத்தாரும் வந்து தங்குவதற்குரிய அறச்சாலை |
| உலகவறிவு | உலகியல் வழக்கம் பற்றிய அறிவு , இலௌகிக அறிவு |
| உலகவாதம் | மரபுவழி வழக்கு |
| உலகவிடைகழி | ஊர்வாயில் ; நகரத்தின் பெருவாயில் |
| உலகவிருத்தம் | உலக வழக்கோடு மாறுபடுகை |
| உலகவேடணை | உலக ஆசை , ஏடணாத்திரயத்தொன்று |
| உலகளந்தான் | காண்க : உலகமளந்தான் |
| உலகாசாரம் | உலக வழக்கம் , உலகவொழுக்கம் |
| உலகாயதம் | உலோகாயத மதம் , கடவுளில்லை என்னும் சமயம் ; உலகவின்பமே மேலானது என்னும் காட்சி வாதம் |
| உலகாயதன் | உலோகயாத சமயத்தோன் |
| உலகிகம் | காண்க : உலகியல் |
| உலகிதன் | காண்க : உலகாயதன் . |
| உலகியல் | உலகநடை ; உலகவழக்கம் ; உலகியற்கை . |
| உலகியல்வழக்கு | உலக வழக்கம் . |
| உலகியற்கை | காண்க : உலகியல் . |
| உலகியற்சொல் | உலக வழக்குச்சொல் , செய்யுள் வழக்கில் இல்லாது உலக வழக்கிலே வழங்கும் சொல் |
| உலகு | உலகம் , பூமி ; நாடு ; உலகத்தார் (இடவாகு பெயர்) , உயர்ந்தோர் , சான்றோர் ; திசை ; மங்கலச் சொற்களுள் ஒன்று |
| உலகுடையபெருமாள் | அரசன் |
| உலகுரை | உலக வாதம் , உலக வழக்கம் , ஐதிகம் |
| உலகேடணை | உலகப் பொருள்களில் கொள்ளும் பற்று |
| உலகோர் | உலகர் ; பெரியோர் |
| உலங்கலம் | கற்பாண்டம் |
| உலங்காரணை | அவுரிச்செடி |
| உலங்கு | உலம் , திரண்ட கல் ; கொசு ; புழு |
| உலண்டம் | பட்டுநூலை உண்டாக்குங் கோற்புழு ; கோற்புழு ; பட்டு |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 169 | 170 | 171 | 172 | 173 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலகம் முதல் - உலவைராசி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வழக்கம், உலகத்தார், உலகியல், உயர்ந்தோர், கோற்புழு, ஒழுக்கம், சொல், உலகவழக்கம், ஒன்று, உலகம், பூமி, உலகு, ஒழுகலாற்றோடு, திருமால், வாதம், உலகாயதன், உலகியற்கை, என்னும், அறிவு, உலகை, திரிதல், உலகர், உலகமளந்தான், சூழ்தல், உலம், திரண்ட, துன்பம், காற்று, முடிவு, அழிதல், பட்டுநூலை, உண்டாக்குங், பட்டு, ஒலித்தல், பேரொலி, வாட்டம், இயங்குதல், பரத்தல், காய்வு, உலம்வருதல், செய்தல், ஆரவாரம், அலப்புதல், பவனிவருதல்

