தமிழ் - தமிழ் அகரமுதலி - உரோமாஞ்சம் முதல் - உலகபாலர் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உலகநாதன் | உலகத் தலைவன் ; அரசன் ; கடவுள் ; பிரமன் . |
| உலகநீதி | உலகநடை ; நன்னெறி ; இயல்பான நீதி , நாட்டியற்கை நீதி ; ஓர் அறநூல் . |
| உலகநூல் | உலக வாழ்க்கைக்கு உகந்த வழிகாட்டி நூல் ; அறிவு நூல் . |
| உலகநோன்பிகள் | துறவாது விரதம் காப்போர் ; சமண பௌத்தருள் இல்லறத்தார் . |
| உலகநோன்பு | துறவாது விரதங்காத்தல் . |
| உலகப்பற்று | உலகப் பொருள்களில் கொண்டுள்ள ஆசை ; உலகியல் நிகழ்ச்சுகளில் வைக்கும் பேரீடுபாடு . |
| உலகப்பிரசித்தி | உலகமெங்கும் பரந்த புகழ் . |
| உலகப்புரட்டன் | மிகு புரளிக்காரன் ; பெருமோசக்காரன் . |
| உலகபத்ததி | உலக நடைமுறை ; உலகத்தார் ஒழுகும் வழி . |
| உலகபாலர் | உலோக பாலர் , திக்குப்பாலகராகிய தேவர் , எட்டுத்திக்கிலும் நின்று உலகைப் புரப்போர் ; இந்திரன் , அக்கினி , யமன் , நிருதி , வருணன் , வாயு , குபேரன் , ஈசானன் என்னும் எண்மர் ; அரசர் . |
| உரோமாஞ்சம் | மயிர்ச் சிலிர்ப்பு . |
| உரோமாஞ்சிதம் | மயிர்ச் சிலிர்ப்பு . |
| உரோருகம் | முலை . |
| உல் | தேங்காயுரிக்கும் கருவி ; கழு . |
| உல்கு | தீர்வை , ஆயம் , சுங்கவரி . |
| உல்குசெய்தல் | சுங்கம் கொள்ளுதல் , சுங்கம் வாங்குதல் . |
| உல்குபொருள் | சுங்கப்பொருள் , மரக்கலம் வண்டி முதலியவற்றில் வரும் பண்டங்களுக்கு வாங்கும் இறைப்பொருள் . |
| உல்லங்கணம் | கடக்கை , மீறுகை , அவமதிப்பு , நிந்தை . |
| உல்லடைப்பு | மரத்தால் ஆற்றிற்கிடும் அணை |
| உல்லம் | கடல்மீன்வகை . |
| உல்லரி | தளிர் . |
| உல்லாகன் | திறமையுள்ளவன் ; நோயுற்று நீங்கியவன் . |
| உல்லாசக்காரன் | மகிழ்ச்சிமேல் நாட்டமுடையோன் ; பகட்டுக்காரன் . |
| உல்லாசத்தலம் | மாளிகைகளில் மகிழ்வுடன் பொழுதுபோக்குவதற்குரிய இடம் . |
| உல்லாசப்படுத்துதல் | களிக்கச்செய்தல் ; உபசரித்தல் . |
| உல்லாசப்பயணம் | இன்பச்செலவு . |
| உல்லாசப்பேச்சு | விநோதப் பேச்சு , வேடிக்கைப் பேச்சு . |
| உல்லாசம் | உள்ளக்களிப்பு ; மனமகிழ்ச்சி ; சரசக்களிப்பு ; மேலாடை . |
| உல்லாசன் | காண்க : உல்லாசக்காரன் . |
| உல்லாடி | மெலிந்த ஆள் . |
| உல்லாபம் | நிரம்பா மென்மொழி ; நலிந்த மொழி ; மழலைச் சொல் ; மேற்கட்டி . |
| உல்லாபன் | நோய்நீங்கி நலம்பெற்று வருபவன் . |
| உல்லி | ஒல்லி ; மெலிந்த ஆள் ; மெல்லியது ; வெங்காயப்பூ ; மதில் . |
| உல்லியம் | கிணறு ; இறைகிணறு . |
| உல்லியர் | கூவநூலார் , கிணறு எடுப்பதற்கு உரிய இடம் கண்டு கூறுவார் . |
| உல்லு | காண்க : உல் . |
| உல்லுகம் | கொள்ளி . |
| உல்லேகம் | உச்சரிப்பு ; பலபடப் புனைவணி , புனைந்துரை . |
| உல்லேற்றுதல் | கழுவேற்றுதல் . |
| உல்லோசம் | மேற்கட்டி ; கூடாரம் . |
| உல்லோலம் | கடலலை ; பேரலை ; கூத்தின் உறுப்புச் செயல்களுள் ஒன்று . |
| உலக்கை | உரோங்கல் ; தவசம் முதலியன குற்றும் கருவி ; ஓர் ஆயுதம் ; திருவோணம் ; கடல் ; அழிவு ; வெருகன்கிழங்கு . |
| உலக்கைக்கழுந்து | உலக்கைப்பூண் . |
| உலக்கைக்கொழுந்து | உலக்கை நுனி ; உலக்கை நுனிபோலக் கூர்மையற்றது ; அறிவுக் குறையுள்ளோன் . |
| உலக்கைத்திங்கள் | உலக்கைப் பெயர்கொண்ட திருவோண மீனின் அடிப்படையில் அமைந்த ஆவணித் திங்கள் . |
| உலக்கைப்பாட்டு | வள்ளைப்பாட்டு , தவசம் குற்றும்போது மகளிர் தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு . |
| உலக்கைப்பாலை | பாலைமரவகை . |
| உலக்கைப்பிடங்கு | உலக்கைக் கணை , உலக்கைப் பூண் , தேய்ந்துபோன உலக்கை நுனி . |
| உலக்கையாணி | பூட்டின் நடுவாணி . |
| உலககர்த்தா | உலகைப் படைத்த கடவுள் . |
| உலகங்காத்தாள் | அவுரிச்செடி . |
| உலகசஞ்சாரம் | உலகத்தைச் சுற்றிவருதல் ; உலக வாழ்வு . |
| உலகசயன் | புத்தன் . |
| உலகஞானம் | உலகத்தைப்பற்றிய அறிவு , உலகத்தின் நடைமுறை அறிவு ; கருவி நூலறிவு |
| உலகத்தார் | உலகிலுள்ளோர் , உலக மக்கள் ; உயர்ந்தோர் ; உலகப்பற்றுடையார் . |
| உலகநடை | உலகத்தார் ஒழுகும் ஒழுக்கம் ; அறிவுடையவர் ஒழுக்கம் ; உலக இயற்கை ; உலக வழக்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 168 | 169 | 170 | 171 | 172 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உரோமாஞ்சம் முதல் - உலகபாலர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உலக்கை, உலகத்தார், அறிவு, கருவி, மேற்கட்டி, மெலிந்த, காண்க, பேச்சு, கிணறு, கடவுள், ஒழுக்கம், உலக்கைப், நுனி, தவசம், இடம், உல்லாசக்காரன், உலகநடை, நடைமுறை, துறவாது, நீதி, ஒழுகும், உலகைப், சுங்கம், சொல், சிலிர்ப்பு, மயிர்ச், நூல்

