தமிழ் - தமிழ் அகரமுதலி - உலோகமணல் முதல் - உவமை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உலோபன் | கடும்பற்றுள்ளன் , இவறலன் , பேராசையுள்ளவன் , பிசுனன் , ஒருவருக்கும் ஒன்றுங் கொடாதவன் |
| உலோபி | கடும்பற்றுள்ளன் , இவறலன் , பேராசையுள்ளவன் , பிசுனன் , ஒருவருக்கும் ஒன்றுங் கொடாதவன் |
| உலோமசம் | சடாமாஞ்சில் |
| உலோமம் | புறமயிர் ; வால் ; அலைகை |
| உலோலம் | அசைவு ; அலைகை ; ஆசைப்பெருக்கம் , விருப்பம் |
| உலோலிதம் | அசைவு |
| உலோலிதமுகம் | ஆழ்ந்த சிந்தையால் ஒரு தோள் மேல் சாய்ந்து நிற்குமுகம் |
| உலோவுதல் | கொடாது மறுத்தல் , உலோபத்தனம் |
| உவ் | உவை , அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப்பெயர் |
| உவ்வி | தலை ; வரிவகை |
| உவ்வு | தவம் |
| உவ | (வி) விரும்பு ; மகிழ் , இன்பமாயிரு |
| உவக்காண் | உங்கே , உவ்விடம் ; உங்கே பார் |
| உவகுருவாணன் | இல்லறம் அடைதற்குரிய நிலையிலுள்ள பிரமசாரி |
| உவகுலம் | திப்பிலி ; திரிபலை |
| உவகை | மகிழ்ச்சி ; களிப்பு ; அன்பு ; காமம் ; இன்பச்சுவை |
| உவகைக்கலுழ்ச்சி | வாளேறுபட்டுப் புண்மிகுந்த கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் சொரியும் புறத்துறை |
| உவகைச்சொல் | முகமன் , உபசாரமொழி |
| உவகைப்பறை | மங்கலப்பறை , மகிழ்ச்சியைக் குறிக்கும் பறை . |
| உவச்சக்காணி | கோயிலில் கொட்டூழியத்திற்காக உவச்சனுக்குத் தரும் மானியம் |
| உவச்சன் | பூசாரிச் சாதியான் ; சோனகன் |
| உவட்சி | துவளுகை |
| உவட்டி | அருவருப்பு ; குமட்டுகை ; நீர்ப்பெருக்கு ; கெடு |
| உவட்டு | அருவருப்பு ; குமட்டுகை ; நீர்ப்பெருக்கு ; கெடு |
| உவட்டுதல் | அருவருத்தல் , வெறுப்புறுதல் ; தெவிட்டுதல் ; குமட்டுதல் ; புரளுதல் ; மிகுதல் |
| உவட்டெடுத்தல் | பெருக்கெடுத்தல் |
| உவண் | உவ்விடம் ; மேலிடம் |
| உவணகேதனன் | கருடக்கொடியையுடைய திருமால் |
| உவணம் | உயர்ச்சி ; உயர்வு ; கருடன் ; கழுகு ; பருந்து |
| உவணமுயர்த்தோன் | காண்க : உவணகேதனன் |
| உவணவூர்தி | கருடனை ஊர்தியாகக் கொண்ட திருமால் |
| உவணன் | கருடன் |
| உவணி | வாள் |
| உவணை | தேவருலகம் , துறக்கம் ; உவ்விடம் |
| உவத்தல் | மகிழ்தல் ; விரும்புதல் ; பிரியமாதல் ; அன்புசெய்தல் |
| உவதி | இளம்பெண் ; யுவதி , பதினாறாட்டைப் பருவத்தாள் |
| உவதை | மலையின்வீழ் பேரருவி |
| உவப்பு | மகிழ்ச்சி ; களிப்பு ; பொலிவு ; விருப்பம் ; உயரம் ; விளையாட்டு ; மேடு |
| உவமம் | உவமை , ஒரு பொருளோடு பிறிதொரு பொருளை ஒப்பிட்டுக் காணல் ; ஒப்புமை அளவை |
| உவமவாசகம் | உவமவுருபு |
| உவமவுருபு | உவமானத்தைச் சார்ந்து ஒப்புமை விளக்கவரும் இடைச்சொல் ; அன்ன , ஒப்ப , ஏய்ப்ப என்றாற்போல வருபவை |
| உவமன் | ஊமன் ; உவமை |
| உவமாநிலம் | சுவர் |
| உவமானம் | உபமானம் , ஒப்பு , சமானம் ; ஒரு பொருளுக்கு ஒப்பாக உரைக்கத்தக்க உயர் பொருள் |
| உவமித்தல் | உவமைப்படுத்தல் , ஒப்புமை காட்டிக் கூறுதல் |
| உவமேயம் | உபமேயம் , உவமிக்கப்படும் பொருள் |
| உவமை | உவமம் ; ஒப்புமை ; உவமையணி ; வினை , பயன் , மெய் , உரு என்பவை காரணமாக ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்புமை புலப்படப் பேசுகை |
| உலோகமணல் | இரும்புமணல் , அயமணல் |
| உலோகரூடம் | உலகவளமை |
| உலோகவாதம் | உலகுரை , ஐதிகப் பிரமாணம் |
| உலோகவிருத்தம் | உலக வழக்கிற்கு மாறுபட்டது . |
| உலோகாயதம் | பொருள்முதல் வாதக்கொள்கை |
| உலோகாயதன் | காண்க : உலகாயதன் |
| உலோகிதம் | சிவந்தது ; சந்தனம் ; சூதாட்டவகை |
| உலோகிதன் | செவ்வாய் |
| உலோச்சு | தன் தலைமயிரைத் தன் கையாற்பறிக்கை |
| உலோசம் | ஒருவகைக் காதணி ; சுட்டியணி |
| உலோசனம் | கண் |
| உலோசி | பேய்ப்பசளைப் பூண்டு |
| உலோசிதம் | சந்தனமரம் |
| உலோட்டம் | இரும்புக்கிட்டம் ; மண்கட்டி ; ஓடு |
| உலோட்டி | தொந்தரவு ; சாராயச் சாரம் |
| உலோத்திரம் | வெள்ளிலோத்திர மரம் |
| உலோபம் | இவறல் , பேராசை , கடும்பற்றுள்ளம் ; அகப்பட்ட பொருளைக் கைவிடாமை ; தானும் நுகராமல் பிறரையும் நுகரச்செய்யாமல் தடுத்தலாகிய குணம் ; ஈயாமை ; குறைவு ; கெடுதல் விகாரம் |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 171 | 172 | 173 | 174 | 175 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகமணல் முதல் - உவமை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒப்புமை, உவ்விடம், உவமை, திருமால், உவணகேதனன், கெடு, கருடன், நீர்ப்பெருக்கு, உவமம், உவமவுருபு, பொருள், பொருளை, பொருளோடு, குமட்டுகை, காண்க, அருவருப்பு, ஒருவருக்கும், ஒன்றுங், பிசுனன், பேராசையுள்ளவன், இவறலன், கொடாதவன், அலைகை, மகிழ்ச்சி, களிப்பு, உங்கே, விருப்பம், அசைவு, கடும்பற்றுள்ளன்

