முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முட்டிக்காலன் முதல் - முடவன்முழுக்கு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முட்டிக்காலன் முதல் - முடவன்முழுக்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முட்டிக்காலன் | முட்டுக்கால் தட்டும்படி நடப்பவன் . |
| முட்டிக்கொள்ளுதல் | சினம் , துயரம் , முதலியவற்றால் தலையை மோதிக்கொள்ளுதல் ; பெருமுயற்சி எடுத்தல் . |
| முட்டிகன் | தட்டான் . |
| முட்டிகை | தட்டார் சிறுசுத்தி . |
| முட்டிடை | நெருக்கடி ; நெருக்கம் . |
| முட்டிமுரண்டுதல் | பெருமுயற்சி எடுத்தல் . |
| முட்டியடித்தல் | திண்டாடுதல் . |
| முட்டியுத்தம் | கைக்குத்துச்சண்டை . |
| முட்டு | விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை ; தடை ; தட்டுப்பாடு ; சங்கடம் ; குறைவு ; உட்சென்று கடத்தலருமை ; கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுகள் ; மாதவிடாய் ; கருவி : சில்லறைப் பொருள்கள் ; பற்றுக்கோடு ; முழங்கால் , முழங்கை , விரல்கள் இவற்றின் பொருத்து ; மேடு ; குவியல் . |
| முட்டுக்கட்டியாடுதல் | பொய்க்கால்களில் நின்று நடத்தல் . |
| முட்டுக்கட்டுதல் | கட்டை முதலியன ஆதரவாகக் கொடுத்தல் ; வழியை அடைத்தல் ; வயல் முதலியவற்றுக்கு எல்லை கட்டுதல் ; முழந்தாளைக் கைகளால் கட்டுதல் . |
| முட்டுக்கட்டை | தாங்குகம்பம் ; தடைசெய்பவர் ; தடைசெய்வது . |
| முட்டுக்கால் | தாங்குகால் ; காண்க : முட்டிக்கால் . |
| முட்டுக்கொடுத்தல் | ஆதாரக்கால் நிறுத்துதல் ; இடையூறு செய்தல் . |
| முட்டுக்கோல் | கிட்டி . |
| முட்டுச்சட்டம் | உதைமானச் சட்டம் . |
| முட்டுச்சுவர் | உதைமானச் சுவர் . |
| முட்டுதல் | மோதுதல் ; தடுத்தல் ; எதிர்த்தல் ; எதிர்ப்படுதல் ; பிடித்தல் ; தேடுதல் ; குன்றுதல் ; நிறைதல் ; முடிதல் ; தடைப்படுதல் ; பொருதல் ; வழுவுதல் . |
| முட்டுப்படுதல் | துன்புறுதல் ; தடைப்படுதல் . |
| முட்டுப்பாடு | இடையூறு ; நெருக்கிடை ; சங்கடம் ; தட்டுப்பாடு ; ஆயுதவகை ; தீமை . |
| முட்டுவீக்கம் | முட்டுக்காலில் வீங்குகை . |
| முட்டுற்றவன் | அறிவில்லாதவன் ; குறைவுள்ளவன் . |
| முட்டை | அண்டம் ; அண்டகோளம் ; உடம்பு ; சாணங்கொண்டு தட்டிய வறட்டி ; தவிடு ; சிறுகரண்டி . |
| முட்டைக்கண் | உருண்டை விழி . |
| முட்டைக்கோசு | ஒரு செடிவகை . |
| முட்டைவடிவு | நீண்ட உருண்டை வடிவம் . |
| முட்டொறடு | இறைச்சி தொங்கவிடும் முள் . |
| முட்பன்றி | காண்க : முள்ளம்பன்றி . |
| முட்புறக்கனி | பலாப்பழம் . |
| முடக்கடி | தடை ; தொல்லை . |
| முடக்கம் | தடை ; அடக்கம் ; கைகால் முடங்குதல் ; வளைவு ; பணமுடை . |
| முடக்கற்றான் | காண்க : முடக்கொற்றான் . |
| முடக்கறை | காண்க : ஏவறை . |
| முடக்கன் | தாழைமரம் . |
| முடக்கு | வளைவு ; நாக்கு ; தெருவின் கோணம் ; விரலணியுள் ஒன்று ; காண்க : ஏவறை ; தடை ; தாமதம் ; சினம் ; வேலையின்மை ; நோய்வகை . |
| முடக்குச்சரக்கு | விலைபடாது முடங்கிக்கிடக்குஞ் சரக்கு . |
| முடக்குமோதிரம் | நெளிமோதிரம் . |
| முடக்குவாதம் | கைகால் உறுப்புகளை முடங்கச்செய்யும் நோய்வகை . |
| முடக்கொற்றான் | ஒரு கொடிவகை . |
| முடங்கர் | ஈன்றணிமையில் உண்டாகும் மெலிவு . |
| முடங்கல் | மடங்குகை ; தடைப்படுகை ; பணம் முதலியன தேங்கிக்கிடக்கை ; காண்க : முடக்குவாதம் ; முள்ளி ; மூங்கில் ; சுருளோலைக் கடிதம் ; சிறுமை ; தாழைமரம் . |
| முடங்கி | நோயால் படுக்கையாய்க் கிடப்பவன் ; நிலத்தின் மூலைநீட்டம் . |
| முடங்கிறை | கூடல்வாய் . |
| முடங்கு | முடக்குவாதம் ; தெருச்சந்து ; தெருவளைவு ; நிலத்தின் மூலைநீட்டம் . |
| முடங்குதல் | சுருங்குதல் ; கைகால் வழங்காமற்போதல் ; தடைப்படுதல் ; வளைதல் ; படுத்துக்கொள்ளுதல் ; கெடுதல் ; தங்குதல் . |
| முடங்குளை | பிடரிமயிர் ; பிடரிமயிருடைய சிங்கம் . |
| முடத்தி | முடப்பெண் ; வளைவுள்ளது . |
| முடத்தெங்கு | கோணலாக வளர்ந்த தென்னை . |
| முடந்தை | முடம் ; வளைந்தது ; சூதகக்கட்டு நோய்வகை . |
| முடம் | கைகால் செயலற்றுப்போகும் நிலை ; வளைவு ; வளைந்தது ; ஆடல் , பாடல் முதலியவற்றின் குற்றம் . |
| முடமயிர் | ஒரு புருவமயிர் நோய்வகை ; தொண்டையில் மயிர் முளைப்பதால் உண்டாவதாகக் கருதப்படும் நோய்வகை . |
| முடமுடெனல் | ஒலிக்குறிப்புவகை . |
| முடலை | பெருமை ; வலி ; புலால்நாற்றம் ; உருண்டை ; முறுக்கு ; முருடு ; கழலை ; மனவன்மை ; திரட்சி ; பெருங்குறடு . |
| முடவன் | நொண்டி ; அருணன் ; சனி . |
| முடவன்முழுக்கு | காவிரியில் ஐப்பசிக் கடைமுகத்து நீராடற் பலனை அளிக்கும் கார்த்திகை முதல்நாள் முழுக்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 885 | 886 | 887 | 888 | 889 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முட்டிக்காலன் முதல் - முடவன்முழுக்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நோய்வகை, கைகால், உருண்டை, வளைவு, முடக்குவாதம், தடைப்படுதல், முதலியன, முதலியவற்றால், தாழைமரம், ஏவறை, சினம், நிலத்தின், வளைந்தது, முடம், மூலைநீட்டம், முடக்கொற்றான், பெருமுயற்சி, இடையூறு, தட்டுப்பாடு, கட்டுதல், உதைமானச், முட்டுக்கால், முடங்குதல், எடுத்தல், சங்கடம்

