தமிழ் - தமிழ் அகரமுதலி - முகிதல் முதல் - முச்செயல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முகிதல் | முடிதல் . |
| முகிரம் | அன்பு ; காமம் . |
| முகிரன் | காமன் ; மூடன் . |
| முகில் | மேகம் ; திரள் . |
| முகில்வண்ணன் | மேகநிறம் வாய்ந்த திருமால் . |
| முகில்வாகனன் | மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன் . |
| முகிலூர்தி | மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன் . |
| முகிவு | முடிவு . |
| முகிழ் | அரும்பு ; காண்க : முகிழ்ப்புறம் ; தேங்காய் முதலியவற்றின் மடல் ; ஐந்து விரலும் தம்மில் தலைகுனிந்து உயர்ந்து நிற்கும் இணையாவினைக்கைவகை ; தயிர் முதலியவற்றின் கட்டி . |
| முகிழ்காங்கூலம் | காங்கூலக் கைவகை . |
| முகிழ்த்தம் | காண்க : முகூர்த்தம் . |
| முகிழ்த்தல் | அரும்புதல் ; தோன்றுதல் ; குவிதல் ; தோற்றுவித்தல் ; ஈனுதல் . |
| முகிழ்தல் | குவிதல் . |
| முகிழ்நகை | புன்சிரிப்பு . |
| முகிழ்ப்புறம் | காய் , பூ முதலியவற்றின் காம்படி . |
| முகிழம் | மலரும்பருவத்து அரும்பு . |
| முகிழித்தல் | காண்க : முகிழ்தல் . |
| முகிழிதம் | அரும்பு , காய் , பூ முதலியவற்றின் காம்படி ; தேங்காய் முதலியவற்றின் மடல் ; தயிர் முதலியவற்றின் கட்டி ; இணையாவினைக்கைவகை . |
| முகிள் | அரும்பு . |
| முகிளம் | அரும்பு . |
| முகிளிதம் | அரும்பு ; சிறிது குவிகை . |
| முகிற்குன்றம் | மேகமூடிய மலை ; வக்கிராந்த பாடாணம் . |
| முகின்மேனி | காண்க : முகில்வண்ணன் . |
| முகினாயகன் | வருணன் . |
| முகினி | புளியமரம் . |
| முகு | விருப்பம் ; மனநிறைவு . |
| முகுடம் | முடி ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று . |
| முகுத்தம் | காண்க : முகூர்த்தம் . |
| முகுந்தம் | குபேரன் நவநிதிகளுள் ஒன்று . |
| முகுந்தன் | திருமால் . |
| முகுர்த்தம் | காண்க : முகூர்த்தம் . |
| முகுரம் | கண்ணாடி ; பெருமல்லிகை ; தளிர் . |
| முகுலி | தாழைமரம் . |
| முகுளம் | அரும்பு ; தாமரைத்தண்டு ஐந்து விரலும் தம்மில் தலைகுவிந்து உயர்ந்துநிற்கும் இணையாவினைக்கைவகை ; யோகாசனவகை ; ஆசனவகை ; மூளையின் பின்பகுதி . |
| முகுளாதனம் | இரண்டு கையும் முதுகிலே கூட்டிக் கும்பிட்டிருக்கும் ஆசனவகை . |
| முகுளித்தல் | காண்க : முகிழ்தல் . |
| முகூர்த்தக்கால் | கலியாணப் பந்தலுக்கு நல்வேளையில் முதலாக நாட்டும் பந்தற்கால் . |
| முகூர்த்தம் | நேரம் ; நல்வேளை ; ஒன்றரை மணி நேரங்கொண்ட காலவளவை ; இரண்டு நாழிகை கொண்ட நேரம் ; திருமணம் . |
| முகூர்த்தம்பார்த்தல் | திருமணம் முதலிய நற்செயல்களுக்கு நல்வேளை ஆராய்தல் ; காண்க : முகூர்த்தம்வைத்தல் . |
| முகூர்த்தம்வைத்தல் | திருமணம் உறுதிசெய்தல் ; நல்வேளை குறித்தல் . |
| முகூர்த்தவிதானி | முகூர்த்தம் விதிப்பவன் . |
| முகேரெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| முகை | அரும்பு ; மொட்டு ; குகை ; கூட்டம் ; மிடா . |
| முகைத்தல் | அரும்புதல் . |
| முகைதல் | அரும்புதல் . |
| முகைதிறத்தல் | அரும்பு மலர்தல் . |
| முங்குதல் | நீரில் மூழ்குதல் ; அமிழ்தல் ; நிறைதல் . |
| முச்சக்கரம் | மூவுலகங்களான துறக்க மத்திய பாதாள உலகங்கள் . |
| முச்சகம் | மூவுலகங்களான துறக்க மத்திய பாதாள உலகங்கள் . |
| முச்சங்கம் | பாண்டியமன்னர் ஆதரவில் புலவர்கள் கூடி ஆராய்ந்த தலை , இடை , கடைச் சங்கம் என்னும் மூவகைத் தமிழ்ச் சங்கங்கள் . |
| முச்சட்டை | அழகு ; ஒழுங்கு . |
| முச்சத்தி | பிரபுசத்தி , மந்திரசத்தி , உற்சாகசத்தி என்னும் அரசர்க்குரிய மூவகை ஆற்றல் . |
| முச்சதுரம் | முக்கோணம் , காண்க : சதுரக்கள்ளி . |
| முச்சந்தி | காலை , உச்சி , மாலை என்னும் முக்கால சந்தி ; மூன்று தெருக்கள் கூடுமிடம் . |
| முச்சலிக்கா | உடன்படிக்கைப் பத்திரம் ; பிணையப் பத்திரம் . |
| முச்சலிக்கை | உடன்படிக்கைப் பத்திரம் ; பிணையப் பத்திரம் . |
| முச்சலிகை | வாய்நீர் , சிறுநீர் , நாதநீர் என்னும் மூவகைநீர் . |
| முச்சாரிகை | குதிரை , தேர் , யானை என்னும் இவை மூன்றும் சேர்ந்துபோதல் . |
| முச்சி | தலையுச்சி ; கொண்டைமுடி ; சிறுசுளகு ; சூட்டு ; வேலையாள் ; தோல்வினைஞன் ; உறைகாரன் ; வன்னக்காரன் ; தச்சன் . |
| முச்சியர் | வன்னக்காரர் ; மரவினையாளர் . |
| முச்சிரம் | சூலம் ; பெருஞ்சீரகம் . |
| முச்சில் | சிறுமுறம் . |
| முச்சுடர் | சூரியன் , சந்திரன் , அக்கினி ஆகிய மூன்று சோதிகள் . |
| முச்சூடும் | முழுதும் . |
| முச்செயல் | காண்க : முத்தொழில் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 883 | 884 | 885 | 886 | 887 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகிதல் முதல் - முச்செயல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அரும்பு, முதலியவற்றின், முகூர்த்தம், என்னும், பத்திரம், அரும்புதல், முகிழ்தல், நல்வேளை, திருமணம், இணையாவினைக்கைவகை, முகூர்த்தம்வைத்தல், நேரம், இரண்டு, மத்திய, மூன்று, உடன்படிக்கைப், பிணையப், உலகங்கள், பாதாள, துறக்க, ஆசனவகை, மூவுலகங்களான, குவிதல், முகிழ்ப்புறம், தேங்காய், மடல், இந்திரன், ஊர்தியாகவுடைய, திருமால், மேகத்தை, ஐந்து, விரலும், காய், காம்படி, முகில்வண்ணன், கட்டி, தம்மில், தயிர், ஒன்று

