தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆபூபிகன் முதல் - ஆமிலை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆமக்கழிச்சல் | சீதபேதி . |
| ஆமக்கள் | கணவன் . |
| ஆமக்கன் | கணவன் . |
| ஆமகணம் | குழந்தைகட்குச் சீதவழும்பு விழும் நோய் . |
| ஆமசன்னி | செரியாமையால் வரும் சன்னி . |
| ஆமசிராத்தம் | சமைக்காத உணவுப்பொருளைக் கொண்டு செய்யுஞ் சிராத்தம் . |
| ஆமசுரம் | செரியாமையால் குழந்தைகளுக்கு வரும் சுரம் . |
| ஆமசூலை | செரியாமையால் வரும் வயிற்று வலி . |
| ஆமடி | எட்டிமரவகை . |
| ஆமண்டம் | விளக்கெண்ணெய் விதைதரும் செடி . |
| ஆமணக்கு | விளக்கெண்ணெய் விதைதரும் செடி . |
| ஆமணக்குநெய் | கொட்டைமுத்தெண்ணெய் , விளக்கெண்ணெய் . |
| ஆமணக்குமுத்து | கொட்டைமுத்து . |
| ஆமணக்கெண்ணெய் | காண்க : ஆமணக்குநெய் . |
| ஆமணத்தி | கோரோசனை . |
| ஆமதி | நண்டு . |
| ஆமந்திரிகை | இடக்கை வாத்தியம் . |
| ஆமநாயம் | வழக்கம் ; ஆகமம் ; குலன் . |
| ஆமம் | பக்குவஞ் செய்யப்படாதது ; செரியாமை ; சீதபேதி , காளான் ; கடலை ; துவரை . |
| ஆமயம் | பசுவின் சாணி ; நோய் . |
| ஆமரகோளம் | கடுக்காய்ப்பூ . |
| ஆமரம் | எட்டிமரம் . |
| ஆமரி | சொல் . |
| ஆமரிகம் | காண்க : ஆமலகம் . |
| ஆமல் | காண்க : மூங்கில் ; விடமூங்கில் . |
| ஆமலகம் | நெல்லி . |
| ஆமலகமலம் | காண்க : கொட்டைப்பாசி . |
| ஆமலகி | நெல்லி . |
| ஆமவாதரோகம் | வாதநோய் வகை . |
| ஆமளம் | சிவத்துதிவகை . |
| ஆமா | காட்டுப் பசு ; பால்கொடுக்குந் தாய் ; ஆமாம் . |
| ஆமாகோளா | காண்க : ஆமரகோளம் . |
| ஆமாசயம் | இரைப்பை . |
| ஆமாத்தியன் | அமைச்சன் ; படைத்தலைவன் ; மருத்துவன் . |
| ஆமாத்திரர் | அமைச்சர் ; மருத்துவர் . |
| ஆமாம் | ஒரு சம்மதக் குறிச்சொல் . |
| ஆமாம்போடுதல் | எதற்கும் ஒத்துக் கூறுதல் . |
| ஆமாறு | வழி . |
| ஆமான் | காட்டுப்பசு . |
| ஆமான்புகல்வி | ஆமான் ஏறு . |
| ஆமானவன் | சிறந்தவன் . |
| ஆமிசம் | ஊன் ; கைக்கூலி ; புணர்ச்சி ; போகத்திற்குரிய பொருள் . |
| ஆமிடம் | உணவு ; கண்டுமுதல் ; விளைவுமதிப்பு . |
| ஆமிநாயம் | காண்க : ஆமநாயம் . |
| ஆமிரம் | மாமரம் ; புளிப்பு . |
| ஆமிரேசர் | மாமரத்தின்கீழ்க் கோயில் கொண்டுள்ளவர் , ஏகாம்பரநாதர் . |
| ஆமிலம் | புளிப்பு ; புளியமரம் . |
| ஆமிலிகை | புளிப்பு . |
| ஆமிலை | காண்க : புளியாரை . |
| ஆபூபிகன் | அப்பஞ்சுடுவோன் ; அப்பம் விற்போன் . |
| ஆபை | அழகு ; ஒளி ; தோற்றம் ; நிறம் . |
| ஆபோக்கிலிமம் | இலக்கினத்திற்கு மூன்று , ஆறு , ஒன்பது , பன்னிரண்டாம் இடங்கள் . |
| ஆபோகம் | கீதவுறுப்புள் ஒன்று ; எத்தனம் ; நிறைவு ; வருணன் குடை . |
| ஆபோசனம் | விழுங்குகை ; உண்ணுதலுக்கு முன்னும் பின்னும் மந்திரபூர்வமாக நீரை உட்கொள்ளுகை . |
| ஆம் | நீர் ; ஈரம் ; வீடு ; மாமரம் ; அழகு ; சம்மதங் காட்டும் சொல் ; கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல் ; இகழ்ச்சிக் குறிப்பு ; அனுமதி , தகுதி , ஊக்கம் குறிக்கும் சொல் ; ஆவது ; ஆகிய ; சாரியை ; அசைநிலை ; தன்மைப் பன்மை விகுதி ; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி . |
| ஆம்பரியம் | மின்சாரம் . |
| ஆம்பல் | அல்லி ; காண்க : ஆம்பற்குழல் ; பண்வகை ; மூங்கில் ; ஊதுகொம்பு ; யானை ; கள் ; ஒரு பேரெண் ; துன்பம் ; அடைவு ; சந்திரன் ; நெல்லிமரம் ; புளியாரைப்பூண்டு ; பேரொலி . |
| ஆம்பலரி | கதிரவன் ; முதலை . |
| ஆம்பலா | புளியாரைப்பூண்டு . |
| ஆம்பற்குழல் | குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்த ஓர் இசைக்கருவி . |
| ஆம்பாறுதல் | செழிப்புக் குறைதல் . |
| ஆம்பி | காளான் ; பன்றிப்பத்தர் ; ஒலி . |
| ஆம்பிகேயன் | முருகக்கடவுள் ; திரிதராட்டிரன் . |
| ஆம்பியம் | பாதரசம் . |
| ஆம்பிரம் | காண்க : தேமா ; புளிமா ; கள் ; புளிப்பு . |
| ஆம்பிலம் | புளிப்பு ; புளியமரம் ; கள் ; சூரை ; உப்பிலி . |
| ஆம்பு | காண்க : காஞ்சொறி . |
| ஆம்புகு | சூரை ; புளியமரம் . |
| ஆம்புடை | உபாயம் . |
| ஆம்புலம் | காண்க : சூரை . |
| ஆம்பூறு | சூரைச்செடி . |
| ஆம்மிரம் | ஒரு பலம் எடை . |
| ஆமக்கட்டி | சுரக்கட்டி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆபூபிகன் முதல் - ஆமிலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சொல், புளிப்பு, புளியமரம், விளக்கெண்ணெய், வரும், சூரை, செரியாமையால், அழகு, மாமரம், குறிக்கும், பன்மை, புளியாரைப்பூண்டு, ஆம்பற்குழல், விகுதி, ஆமான், தன்மைப், ஆமலகம், விதைதரும், செடி, நோய், கணவன், சீதபேதி, ஆமணக்குநெய், ஆமநாயம், நெல்லி, மூங்கில், ஆமரகோளம், காளான், ஆமாம்

