தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆதுரம் முதல் - ஆபூபிகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆவத்து | விபத்து , கேடு . |
| ஆபத்துசம்பத்து | தாழ்வு வாழ்வு . |
| ஆபதம் | காண்க : ஆபத்து . |
| ஆபதமறுத்தல் | கேடு நீக்குதல் . |
| ஆபதுத்தாரணம் | கேட்டை நீக்கிக் காத்தல் . |
| ஆபதுத்தாரணன் | துன்பத்தினின்றும் காப்போன் . |
| ஆபந்தம் | அலங்காரம் ; கட்டு ; நுகக்கயிறு . |
| ஆபம் | நீர் ; தீவினை . |
| ஆபயன் | பால் . |
| ஆபரணச்செப்பு | அணிகலப் பேழை . |
| ஆபரணம் | அணிகலம் ; அலங்காரம் . |
| ஆபற்காலம் | ஆபத்துச் சமயம் . |
| ஆபற்சன்னியாசம் | காண்க : ஆபத்சன்னியாசம் . |
| ஆபனம் | காண்க : மிளகு . |
| ஆபாசம் | போலி ; எதுரொளி ; தூய்மையின்மை ; முறைத்தவறு ; அவதூறு . |
| ஆபாசித்தல் | உண்மையான பொருளைப்போலத் தோன்றுதல் , எதிரொளித்தல் . |
| ஆபாடம் | பாயிரம் . |
| ஆபாத் | போர்வீரருக்குரிய தளவாடங்கள் சேகரிக்கக்கூடிய ஊர் . |
| ஆபாத்செய்தல் | குடியேற்றி வளஞ்செய்தல் . |
| ஆபாதகேசம் | உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை . |
| ஆபாதசூடம் | அடிமுதல் முடிவரை . |
| ஆபாதம் | நிகழ்காலம் ; விழுகை ; காண்க : ஆபாதகேசம் . |
| ஆபாதமத்தம் | காண்க : ஆபாதகேசம் . |
| ஆபாதமத்தகம் | காண்க : ஆபாதகேசம் . |
| ஆபாதன் | தீயவன் . |
| ஆபாலகோபம் | எல்லோரும் ; குழந்தைகள் பசுக்கள் உட்பட அனைவரும் . |
| ஆபாலகோபாலம் | எல்லோரும் ; குழந்தைகள் பசுக்கள் உட்பட அனைவரும் . |
| ஆபாலவிருத்தர் | சிறுவர் முதல் முதியோர்வரை உள்ளவர் . |
| ஆபாலி | பேன் . |
| ஆபானம் | மதுக்கடை . |
| ஆபிசாரம் | காண்க : அபிசாரம் ; பகைவன் இறக்குமாறு செய்யும் ஒரு கொடுந்தொழில் . |
| ஆபிமுக்கியம் | அனுகூலமாயிருக்கை . |
| ஆபீரம் | ஆயர்வீதி . |
| ஆபீரவல்லி | இடைச்சேரி . |
| ஆபீரன் | இடையன் . |
| ஆபீலம் | துன்பம் ; அச்சம் . |
| ஆபீனம் | பசுவின் மடி . |
| ஆபூபிகம் | அப்பவரிசை . |
| ஆதுரம் | பரபரப்பு ; அவா ; நோய் . |
| ஆதுரன் | நோயுற்றோன் ; ஆசையுற்றோன் . |
| ஆதுலசாலை | ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை . |
| ஆதுலர்சாலை | ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை |
| ஆதுலன் | ஆற்றலற்றவன் ; வறியோன் . |
| ஆதுவம் | கள் . |
| ஆதுனிகன் | இக்காலத்தவன் . |
| ஆதேசம் | கட்டளை ; திரிந்த எழுத்து ; காண்க : ஆதேயம் . |
| ஆதேயம் | தாங்கப்படுவது . |
| ஆதொண்டை | காற்றோட்டிக் கொடி ; காற்றோட்டிச் செடி . |
| ஆதோரணன் | யானைப்பாகன் . |
| ஆந்தரங்கம் | காண்க : அந்தரங்கம் . |
| ஆந்தரம் | உள்ளேயிருப்பது ; மறைபொருள் . |
| ஆந்தராளிகன் | நடுநிலையாளன் . |
| ஆந்திரம் | குடல் ; தெலுங்கு நாடு ; தெலுங்கு மொழி . |
| ஆந்தை | பறவைவகை ; பேராமுட்டி ; ஓர் இயற்பெயர் . |
| ஆந்தைக்காதல் | ஆந்தை கூவுதல் ; ஆந்தை நூல் . |
| ஆந்தோளம் | இசையில் இடம்பெறும் கமகம் பத்தனுள் ஒன்று . |
| ஆந்தோளி | சிவிகை . |
| ஆந்தோளிகம் | சிவிகை . |
| ஆநிலை | பசுக்கொட்டில் . |
| ஆநின்று | நிகழ்கால இடைநிலை . |
| ஆப்தசேவை | குருவுக்குச் செய்யும் தொண்டு . |
| ஆப்தம் | நட்பு . |
| ஆப்தவாக்கியம் | பெரியோர்களின் வாக்கியங்கள் . |
| ஆப்தன் | நம்பத்தக்கோன் ; உற்ற நண்பன் . |
| ஆப்திகம் | தலைத்திவசம் . |
| ஆப்பம் | அப்பம் ; ஒருவகைத் தின்பண்டம் ; கும்பராசி . |
| ஆப்பி | பசுவின் சாணி . |
| ஆப்பிடுதல் | அகப்படுதல் . |
| ஆப்பியந்தரம் | உள்ளானது . |
| ஆப்பியாயனம் | மனநிறைவு . |
| ஆப்பு | முளை ; காண்க : எட்டி ; நோய் ; உணவு ; கட்டு ; உடல் . |
| ஆப்புத்தள்ளி | அச்சுக்கூடக் கருவிகளிலொன்று . |
| ஆப்புலுதம் | குதிரையின் நடைவகை . |
| ஆப்புளண்டம் | காண்க : கரிசலாங்கண்ணி . |
| ஆபகம் | ஆறு ; கங்கை . |
| ஆபகை | ஆறு ; கங்கை . |
| ஆபணியம் | அங்காடிச் சரக்கு ; அங்காடி வீதி . |
| ஆபத்சகாயன் | துன்பத்தில் உதவுவோன் . |
| ஆபத்சன்னியாசம் | இறக்குங்கால் பெறும் துறவு . |
| ஆபத்தனம் | எய்ப்பினில் வைப்பு , முடைப்பட்ட காலத்து உதவும் பொருள் . |
| ஆவத்தனம் | எய்ப்பினில் வைப்பு , முடைப்பட்ட காலத்து உதவும் பொருள் . |
| ஆபத்து | விபத்து , கேடு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆதுரம் முதல் - ஆபூபிகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஆபாதகேசம், கேடு, ஆந்தை, ஆதேயம், தெலுங்கு, அளிக்கும், உறைவிடமும், சிவிகை, சாலை, வைப்பு, உதவும், பொருள், காலத்து, முடைப்பட்ட, எய்ப்பினில், உண்டியும், கங்கை, ஆற்றலற்றோருக்கும், எல்லோரும், குழந்தைகள், ஆபத்சன்னியாசம், கட்டு, ஆபத்து, அலங்காரம், பசுக்கள், உட்பட, நோய், விபத்து, பசுவின், செய்யும், அனைவரும், ஏழையருக்கும்

