தமிழ் - தமிழ் அகரமுதலி - மயானம் முதல் - மயிற்கொடி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மயானம் | சுடுகாடு . |
| மயானவாசினி | சுடுகாட்டில் இருப்பவளாகிய துர்க்கை . |
| மயானவைராக்கியம் | மயானத்தைக் கண்டதும் உடல் அழியுந்தன்மை உடையதென்று தாற்காலிகமாகத் தோன்றும் பற்றின்மை ; இறக்கும்வரை ஒருவருக்கொருவர் உண்மையாய் நடந்து கொள்வதாக மணமக்கள் கூறும் உறுதிமொழி . |
| மயிடம் | எருமை ; இலவம்பிசின் . |
| மயிடற்செற்றாள் | துர்க்கை . |
| மயிந்துதல் | பதுங்குதல் . |
| மயிர் | உரோமம் ; சாமரை ; தூவி . |
| மயிர்க்கட்டு | தலைமயிர்முடிச்சு ; தலைப்பாகை . |
| மயிர்க்கத்தி | சவரக்கத்தி . |
| மயிர்க்கால் | மயிர்த்துளை . |
| மயிர்க்கிடுகு | மயிர்செறிந்த தோலால் மூடப்பட்ட கேடகம் . |
| மயிர்க்கிடை | மயிரின் அகலவளவு . |
| மயிர்க்குச்சு | மயிர்சிலிர்த்தல் ; துகிலிகை ; கொண்டையூசி ; தலையணிவகை . |
| மயிர்க்குச்செறிதல் | உடம்பு சிலிர்த்தல் . |
| மயிர்க்குட்டி | காண்க : மயிர்ப்புழு . |
| மயிர்க்குடி | மயிர்ச்செறிவு . |
| மயிர்க்குழற்சி | மயிர்க்குழைவு ; உடம்பு சிலிர்த்தல் . |
| மயிர்க்கூச்சு | மயிர்சிலிர்க்கை . |
| மயிர்க்கேடகம் | காண்க : மயிர்க்கிடுகு . |
| மயிர்க்கோள் | காண்க : மயிர்க்கூச்சு . |
| மயிர்கழித்தல் | மழித்தல் , சவரஞ்செய்தல் . |
| மயிர்களைதல் | மழித்தல் , சவரஞ்செய்தல் . |
| மயிர்களைவோன் | காண்க : மயிர்வினைஞன் . |
| மயிர்குறைகருவி | மயிர்க்கத்திரி ; சவரக்கத்தி . |
| மயிர்ச்சந்தனம் | கூந்தலுக்கு இடும் மணச்சாந்து . |
| மயிர்ச்சாந்தம் | கூந்தலுக்கு இடும் மணச்சாந்து . |
| மயிர்ச்சாந்து | கூந்தலுக்கு இடும் மணச்சாந்து . |
| மயிர்ச்சிகைப்பூண்டு | காண்க : அரிவாள் முனைப்பூண்டு . |
| மயிர்ச்சுருள் | மயிர்க்குழைவு ; மயிரின் சுருள் . |
| மயிர்ச்சேணம் | மயிரடைத்துச் செய்த மெத்தை . |
| மயிர்த்தவிசு | மயிரடைத்துச் செய்த இருக்கை . |
| மயிர்ப்படம் | கம்பளியாடை . |
| மயிர்ப்பாடு | மயிர் செறிந்து தோன்றுகை . |
| மயிர்ப்பிளவை | தலைப்பொடுகு . |
| மயிர்ப்புழு | கம்பளிப்பூச்சி . |
| மயிர்பிடித்துக்கொள்ளுதல் | சண்டைபோடுதல் . |
| மயிர்பொடித்தல் | மயிர்சிலிர்த்தல் . |
| மயிர்மாட்டி | ஓர் அணிகலவகை . |
| மயிர்மாணிக்கம் | அரிவாள்முனைப்பூண்டு ; ஒரு செடிவகை ; பூடுவகை ; மரவகை ; கொடிவகை ; கோரோசனை . |
| மயிர்முடி | முடிந்த மயிர் . |
| மயிர்முள் | முள்ளம்பன்றியின் மயிர் . |
| மயிர்வாங்கி | காண்க : சிமிட்டா . |
| மயிர்வாரி | சீப்பு . |
| மயிர்வினை | சவரம் ; குழந்தைகளுக்கு முதன் முதலில் மயிர்கழிக்கும் சடங்கு ; கத்திரிக்கோல் ; காண்க : மயிர்வினைஞன் ; சவரக்கத்தி . |
| மயிர்வினைஞன் | நாவிதன் . |
| மயிரிழவு | துன்பக்குறியாக மயிர்நீக்குகை . |
| மயிருதிரல் | வழுக்கைநோய் . |
| மயிரெறிகருவி | காண்க : மயிர்குறைகருவி . |
| மயிரெறிதல் | மயிர் சிலிர்த்தல் . |
| மயிரொழுக்கு | மயிர்வரிசை . |
| மயிரொழுங்கு | மயிர்வரிசை . |
| மயில் | பறவைவகை ; செடிவகை ; சிறு மரவகை ; இருக்கைவகை . |
| மயில்வாகனன் | மயிலேறிச் செல்லும் முருகக் கடவுள் . |
| மயில்விசிறி | மயில்தோகையால் அமைந்த ஆலவட்டம் . |
| மயிலடி | மாதர் காலணியுள் ஒன்று , காற்பீலி ; காட்டுநொச்சிமரம் ; மரவகை ; எருமை . |
| மயிலம் | மயிலிறகு ; ஓர் ஊர் ; பருத்திவகை ; குப்பைமேனி . |
| மயிலாப்பு | மயிலாப்பூர் . |
| மயிலாபுரி | மயிலாப்பூர் . |
| மயிலார் | கன்னிப்பெண்கள் நோற்கும் சடங்குவகை ; பொங்கற்பண்டிகையின் பின்பு வண்ணார் கும்பிடுந் தெய்வவழிபாடு . |
| மயிலாளி | மயிலை ஏறி ஆள்வோனாகிய முருகக்கடவுள் . |
| மயிலியம் | செடிவகை . |
| மயிலியல் | மயில்போலுஞ் சாயலுள்ள பெண் . |
| மயிலூர்தி | காண்க : மயில்வாகனன் . |
| மயிலெண்ணெய் | மயிலின் கொழுப்பிலிருந்து எடுக்கும் எண்ணெய்வகை . |
| மயிலெள் | ஓர் எள்வகை . |
| மயிலை | இருவாட்சி ; மீன் ; மீனராசி ; காண்க : வெட்சி ; காட்டுநொச்சிமரம் ; மரவகை ; மயிலாப்பூர் ; அழுக்கு ; வெண்மை கலந்த கருநிறம் . |
| மயிலைநந்தி | ஒரு செடிவகை . |
| மயிலைப்பச்சை | கருமை கலந்த பச்சை . |
| மயிற்கழுத்து | மயிலின் கழுத்து உருவும் வண்ணமுமமைந்த மாலைவகை . |
| மயிற்கூத்து | ஒரு காலை யூன்றி ஒரு காலைத் தூக்கியாடுங் கூத்துவகை ; ஒன்றை நாட்டும் வழி மற்றொன்று விட்டுப்போவதைக் காட்டும் ஒருவகை நியாயம் . |
| மயிற்கொடி | தாலிவகை ; முருகக்கடவுட்குரிய மயில் எழுதிய கொடி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 848 | 849 | 850 | 851 | 852 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மயானம் முதல் - மயிற்கொடி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மயிர், செடிவகை, மரவகை, கூந்தலுக்கு, இடும், மணச்சாந்து, மயிலாப்பூர், மயிர்வினைஞன், சவரக்கத்தி, சிலிர்த்தல், மயிர்வரிசை, மயில், மயிர்க்கிடுகு, மயில்வாகனன், காட்டுநொச்சிமரம், கலந்த, மயிலின், மயிலை, எருமை, செய்த, மயிரடைத்துச், மழித்தல், மயிர்க்கூச்சு, மயிர்க்குழைவு, மயிர்ப்புழு, சவரஞ்செய்தல், துர்க்கை, மயிர்சிலிர்த்தல், உடம்பு, மயிர்குறைகருவி, மயிரின்

