தமிழ் - தமிழ் அகரமுதலி - மதுரை முதல் - மந்திரமாடம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மதுரை | கள் ; இனிமையானது ; ஒரு நகரம் . |
| மதுரைச்சங்கம் | மதுரையிலிருந்த மூன்றாம் தமிழ்ச்சங்கம் . |
| மதுரைத்தொகை | மதுரையிலிருந்த மூன்றாம் தமிழ்ச்சங்கம் . |
| மதுரைமாதெய்வம் | மதுரையின் காவற்றெய்வமாகிய மதுராபதி . |
| மதுரோதயவளநாடு | கோயில்பட்டி வட்டத்தைச் சுற்றியுள்ள ஒரு பழந்தமிழ்நாட்டுப் பிரிவு . |
| மதுவம் | கள் ; தேன் ; வண்டு . |
| மதூகம் | இருப்பைமரம் . |
| மதூத்தம் | சிறுநாகப்பூ . |
| மதைஇய | மதர்த்த ; அழகிய ; மடமையான ; வலிய . |
| மதோமதி | பெருங்களிப்புடையாள் . |
| மதோற்கடம் | மதயானை ; யானைமத்தகம் . |
| மதோன்மத்தன் | மிகு களிப்புடையோன் ; செருக்கு மிக்குடையோன் . |
| மந்தக்குணம் | தாமதத்தன்மை ; உணவு செரியாமையால் உண்டாகும் நோய்வகை . |
| மந்தகதி | தாமதநடை ; தாமதத்தன்மை . |
| மந்தகாசம் | புன்னகை ; புன்சிரிப்பு ; காசநோய்வகை . |
| மந்தகுணம் | காண்க : மந்தக்குணம் . |
| மந்தணம் | சூழ்வினை ; கமுக்கம் ; இரகசியம் . |
| மந்தப்புத்தி | அறிவுக்குறைவு ; குறைந்த அறிவுடையவன் . |
| மந்தம் | தாமதம் ; அறிவுமழுக்கம் ; சோம்பல் ; புன்மை ; மென்மைத்தன்மை ; பாடற்பயன் எட்டனுள் ஒன்றான சமனிசை ; படுத்தலிசை ; தென்றல் ; குதிரைநடைவகை ; தனக்கு மாத்திரங் கேட்கும்படி மந்திரோச்சாரணஞ் செய்கை ; செரியாமை ; குடிவெறி ; மத்து ; செறிவு ; செவ்வியழியாமை . |
| மந்தமந்தம் | மெல்லமெல்ல . |
| மந்தமந்திரம் | தனக்கு மாத்திரங் கேட்கும்படி உச்சரிக்கும் மந்திரம் . |
| மந்தமா | யானை . |
| மந்தமாருதம் | தென்றல் . |
| மந்தரம் | ஒரு மலை ; மகாமேரு ; துறக்கம் ; கோயில் ; படுத்தலோசை ; 'நி' என்னும் ஏழாம் சுரம் . |
| மந்தரன் | ஒற்றன் ; சோம்பன் . |
| மந்தல் | சோம்பல் . |
| மந்தவறிவு | மழுங்கலான அறிவு . |
| மந்தவாடை | இளவாடைக் காற்று . |
| மந்தவாரம் | சனிக்கிழமை . |
| மந்தவிசை | படுத்தலோசை . |
| மந்தன் | அறிவு மழுங்கியவன் ; தாமதமாக வேலை செய்யும் பணியாளன் ; யமன் ; சனி . |
| மந்தனம் | யானை முகபடாம் ; ஆலோசனை ; காண்க : மந்தணம் . |
| மந்தாகினி | வானகங்கை ; பால்வீதிமண்டலம் ; கங்கையாறு ; அறுபது வயதுள்ளவள் . |
| மந்தாரச்சிலை | ஒரு மருந்துக் கல்வகை . |
| மந்தாரம் | மேகமூட்டம் ; ஐவகைத் தருவிலொன்று ; முள்முருக்கு ; செம்பரத்தை . |
| மந்தாரம்போடுதல் | மேகமூட்டமாயிருத்தல் . |
| மந்தாரித்தல் | மேகமூட்டமாயிருத்தல் . |
| மந்தாரை | ஒரு மரவகை . |
| மந்தானம் | மத்து . |
| மந்தானிலம் | காண்க : மந்தமாருதம் . |
| மந்தி | பெண்குரங்கு ; குரங்கு ; வண்டு ; சூரியன் ; காண்க : ஆடுதின்னாப்பாளை . |
| மந்தித்தல் | தாமதித்தல் ; செரியாமை ; மந்தமடைதல் . |
| மந்திப்பு | சுறுசுறுப்பின்மை ; செரியாமை . |
| மந்திரக்கலப்பை | மந்திரசெபத்துக்குரிய பண்டம் . |
| மந்திரக்கிழவர் | சூழ்வினையாளர் . |
| மந்திரக்கூறை | பூசைப்பட்டு . |
| மந்திரக்கோட்டி | ஆலோசனை செய்யும் சபை . |
| மந்திரக்கோடி | மந்திரவாழ்த்துகளோடு மணமகள் பெறும் கூறைப்புடைவை . |
| மந்திரகலை | மந்திரங்களைக் கூறும் நூல் . |
| மந்திரகாவி | செங்காவி தோய்த்த சன்னியாச உடை . |
| மந்திரகூடன் | தூதன் ; ஒற்றன் ; வேவுகாரன் . |
| மந்திரகூர்மை | இந்துப்பு . |
| மந்திரச்சுற்றம் | அமைச்சர்குழு . |
| மந்திரசத்தி | அமைச்சரின் சூழ்ச்சிவன்மையால் அரசருக்கு உண்டாகும் ஆற்றல் ; மந்திரத்திற்குள்ள ஆற்றல் . |
| மந்திரசாலை | மந்திரிகளுடன் சூழ்வினை புரியும் தனி மண்டபம் . |
| மந்திரசித்தி | மந்திரத்தால் பெற்ற பேறு . |
| மந்திரத்துணைவர் | காண்க : மந்திரக்கிழவர் . |
| மந்திரத்தோழி | தலைவியின் அணுக்கமான பாங்கி . |
| மந்திரதந்திரம் | மந்திரமும் கிரியையும் . |
| மந்திரபாரகர் | சூழ்வினையில் தேர்ந்தவர் . |
| மந்திரபுட்பம் | அஞ்சலியிற்கொண்டு மந்திரம் ஓதித் தூவப்படும் மலர் . |
| மந்திரம் | ஆலோசனை ; அமைச்சர்கள் அவை : எண்ணம் ; வேதமந்திரம் ; காண்க : திருமந்திரம் ; வீடு ; அரண்மனை ; தேவர் கோயில் ; மண்டபம் ; உறைவிடம் ; குகை ; அறச்செயல்வகை ; குதிரைச்சாலை ; குதிரைக்கூட்டம் ; கள் ; யானைவகை ; மேருமலை . |
| மந்திரமாக்கள் | காண்க : மந்திரக்கிழவர் . |
| மந்திரமாடம் | ஆலோசனை செய்யும் மண்டபம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 846 | 847 | 848 | 849 | 850 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை முதல் - மந்திரமாடம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஆலோசனை, செய்யும், செரியாமை, மந்திரம், மண்டபம், மந்திரக்கிழவர், மந்தமாருதம், கோயில், யானை, அறிவு, ஆற்றல், மேகமூட்டமாயிருத்தல், மத்து, ஒற்றன், படுத்தலோசை, கேட்கும்படி, மந்தக்குணம், தாமதத்தன்மை, வண்டு, தமிழ்ச்சங்கம், மூன்றாம், உண்டாகும், மந்தணம், தனக்கு, மாத்திரங், தென்றல், சோம்பல், சூழ்வினை, மதுரையிலிருந்த

