தமிழ் - தமிழ் அகரமுதலி - நாதி முதல் - நாய்ச்சீரகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நாதி | ஞாதி ; உறவினன் ; காப்பாற்றுவோன் ; பெருங்காயவகை . |
| நாதிக்காரன் | ஞாதி ; உறவினன் . |
| நாதித்தல் | ஒலியெழுதல் ; ஒலியெழுப்புதல் . |
| நாதியன் | காண்க : நாதான் . |
| நாதேயம் | காண்க : வஞ்சிக்கொடி ; சீந்திற் கொடி ; துரிசு ; இந்துப்பு . |
| நாந்தகம் | திருமாலின் வாள் ; வாள் |
| நாந்தல் | மந்தாரம் ; ஈரம் ; மந்தாரமாய் இருக்குங் காலம் . |
| நாந்தி | நாடக முன்னுரை ; பாயிரம் ; சிராத்த வகை ; முதுகு . |
| நாந்திகந்துரு | மரமஞ்சள் . |
| நாந்துதல் | நனைதல் . |
| நாநல்கூர்தல் | பேசாதிருத்தல் . |
| நாநீட்டுதல் | நாவைநீட்டிப் பேசுதல் . |
| நாப்பண் | நடு ; தேர்நடு ; யாழினுறுப்பு . |
| நாப்பாடம் | மனப்பாடம் பண்ணிய வாய்ப்பாடம் . |
| நாப்பு | பரிகாசம் , ஏளனம் . |
| நாப்புக்காட்டுதல் | அழகுகாட்டுதல் ; வஞ்சித்தல் . |
| நாப்புதல் | அழகுகாட்டுதல் ; வஞ்சித்தல் . |
| நாப்புற்று | நாநோவுவகை . |
| நாபதி | பேச்சாற்றல் படைத்தவன் ; பேச்சு அருளுவோன் . |
| நாபி | கொப்பூழ் ; கத்தூரி ; காண்க : வச்சநாபி ; வச்சநாபி முறிவு என்னும் ஒரு மருந்துவகை . |
| நாபிக்கொடி | கொப்பூழ்க்கொடி . |
| நாபிசன் | திருமாலின் உந்தியில் பிறந்தோனான நான்முகன் . |
| நாபிதன் | காண்க : நாவிதன் . |
| நாபிநாடி | காண்க : நாபிக்கொடி . |
| நாபிநாளம் | காண்க : நாபிக்கொடி . |
| நாபிரம் | விந்து . |
| நாபீலம் | கடிதடம் ; கொப்பூழ்க்குழி . |
| நாம் | அச்சம் ; தன்மைப் பன்மைப் பெயர் ; தாங்கள் . |
| நாம்பல் | இளைப்பு : இளைத்த விலங்கு . |
| நாம்பன் | இளவெருது . |
| நாம்பு | மெலிந்தது ; மெல்லிய கொடி . |
| நாம்புதல் | இளைத்தல் . |
| நாமக்கட்டி | வைணவர் அணியுந் திருமண் கட்டி . |
| நாமக்காரர் | வைணவர் . |
| நாமகரணம் | பெயரிடுஞ் சடங்கு . |
| நாமகள் | பிரமன் நாவில் வசிக்கும் கலைமகள் . |
| நாமகீர்த்தனம் | கடவுள் திருப்பெயர் ஒதுகை . |
| நாமசங்கீர்த்தனம் | கடவுள் திருப்பெயர் ஒதுகை . |
| நாமசேடம் | பெயர்மட்டும் மிஞ்சும் சாவு . |
| நாமஞ்சாத்துதல் | பெயரிடுதல் ; நெற்றியில் நாமம் இடுதல் ; ஏமாற்றுதல் . |
| நாமஞ்செய்தல் | பெயரிடுதல் . |
| நாமடந்தை | காண்க : நாமகள் . |
| நாமடிக்கொள்ளுதல் | நாவை மடித்தல் . |
| நாமத்தாலி | கார்காத்த வேளாளரது விளக்கிடு கலியாணத்தில் பெண் கழுத்தில் அணியும் தாலிவகை . |
| நாமதாது | பெயரடியாகப் பிறந்த வினை . |
| நாமதாரணம் | பெயர் தரிக்கை ; திருமண் தரிக்கை . |
| நாமதாரி | நாமந்தரிப்பவனான வைணவன் ; மூங்கில்வகை ; சீலைவகை . |
| நாமதேயம் | பெயர் ; யாகாதிகளுக்குப் பெயரிடும் வேதவாக்கியவகை . |
| நாமநீர் | அச்சத்தைத் தரும் கடல் . |
| நாமம் | திருமண் கட்டி ; அச்சம் ; நிறைவு ; புகழ் ; திருமாலின் பன்னிரண்டு பெயர்களைக் கூறி உடலில் இடும் திருமண் காப்பு ; பேர் ; தும்பைச் செடி ; முள்தராசின் நடு ; காண்க : நாரத்தை ; பாசி . |
| நாமமிடுதல் | காண்க : நாமஞ்சாத்துதல் . |
| நாமமோதிரம் | பெயர் எழுதிய மோதிரம் . |
| நாமயம் | தற்போதம் . |
| நாமராசி | பெயர்ப் பொருத்தம் ; இராசிப் பொருத்தம் . |
| நாமவந்தம் | காண்க : யானைநெருஞ்சி . |
| நாமவெகுண்டம் | தும்பைப்பூடு . |
| நாமவைகுண்டம் | தும்பைப்பூடு . |
| நாமறுதல் | பேருமில்லாதபடி முற்றும் அழிந்து போதல் . |
| நாமனூரலைவாய் | திருச்செந்தூர் . |
| நாமாது | காண்க : நாமகள் . |
| நாமாவளி | திருப்பெயர் வரிசை . |
| நாமிதம் | வளைவு . |
| நாமுடி | நாநுனி . |
| நாமோச்சாரணம் | திருப்பெயரைச் சொல்லுதல் . |
| நாய் | ஒரு விலங்கு ; சூதாடுகருவி . |
| நாய்க்கடி | நாயின் கடிப்பு ; நாய்க்கடியால் உண்டாகும் சன்னி நோய் . |
| நாய்க்கடுகு | நாய்வேளைப்பூடு . |
| நாய்க்கரந்தை | குன்றிக்கொடி . |
| நாய்க்குட்டி | குட்டிநாய் ; ஒரு பணிவுமொழி . |
| நாய்க்குணம் | இழிகுணம் ; முருட்டுத்தனம் . |
| நாய்க்கெரித்தல் | நாய்க்குச் சோறு சமைத்தலான இழிதொழில் செய்தல் . |
| நாய்க்கெரிப்போன் | நாய்க்குச் சோறு சமைப்பவனான சண்டாளன் . |
| நாய்கன் | வணிகன் ; தலைவன் ; கணவன் ; தந்தை . |
| நாய்ச்சீரகம் | ஒரு பூண்டுவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 652 | 653 | 654 | 655 | 656 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாதி முதல் - நாய்ச்சீரகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, திருமண், பெயர், நாபிக்கொடி, திருமாலின், நாமகள், திருப்பெயர், நாமஞ்சாத்துதல், ஒதுகை, பெயரிடுதல், நாமம், நாய்க்குச், சோறு, தும்பைப்பூடு, பொருத்தம், தரிக்கை, கடவுள், வைணவர், அழகுகாட்டுதல், வாள், கொடி, உறவினன், வஞ்சித்தல், வச்சநாபி, ஞாதி, விலங்கு, அச்சம், கட்டி

