தமிழ் - தமிழ் அகரமுதலி - நாட்போது முதல் - நாண்மலர் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நாட்போது | அன்றலர்ந்த போது . |
| நாடகக்கணிகை | நாட்டியப் பெண் . |
| நாடகக்காரன் | நாடகமாடுவோன் ; காமுகன் ; பாசாங்குக்காரன் . |
| நாடகக்காரி | நாடகமாடுவோள் ; பாசாங்குக் காரி . |
| நாடகச்சந்தி | முகம் , பிரதிமுகம் , கருப்பம் , விளைவு , துயத்தல் என்னும் ஐவகைப்பட்ட நாடகக் கதைப்பொருத்து . |
| நாடகசாலை | கூத்து நிகழும் இடம் ; நாடகக் கணிகை . |
| நாடகசாலையர் | கூத்தர் , நடிகர் . |
| நாடகத்தமிழ் | முத்தமிழில் கூத்துப்பற்றி வழங்கும் தமிழ் இலக்கியப் பகுதி . |
| நாடகத்தரம்பையர் | மேனகை , அரம்பை , ஊர்வசி , திலோத்தமை என்னும் தேவகணிகையர் . |
| நாடகத்தரு | நாடகப் பாடல்வகை . |
| நாடகத்தி | கூத்து நிகழ்த்தும் பெண் ; விபசாரி . |
| நாடகத்துறை | நடனவித்தை . |
| நாடகப்பண் | நாடகத்தில் வழங்கும் பண்வகை . |
| நாடகபப்பரத்தை | காண்க : நாடகக்கணிகை . |
| நாடகப்பெண் | காண்க : நாடகக்கணிகை . |
| நாடகபாத்திரம் | நாடக மேடையில் நடிப்போன்(ள்) . |
| நாடகம் | கலை அறுபத்து நான்கனுள் ஒன்று ; காண்க : நாடகத்தமிழ் ; கதை மாந்தர்களின் வடிவம் பூண்டு ஒரு கதையை நடந்ததுபோல் நடித்துக்காட்டுவது . |
| நாடகமகள் | நாடகமாடுங் கணிகை . |
| நாடகமாடுதல் | கூத்து நடித்தல் . |
| நாடகமேடை | நாடகமாடும் அரங்கு . |
| நாடகர் | கூத்தர் . |
| நாடகவழக்கு | நாடகத்திற்குரிய நெறி ; புனைந்துரை வழக்கு . |
| நாடகவிருத்தி | சாத்துவதி , ஆரபடி , கைசிகி , பாரதி என்னும் நால்வகை நாடகநடை . |
| நாடகன் | நடனமாடுவோன் . |
| நாடகாங்கம் | அபிநயம் . |
| நாடகியர் | கூத்தர் . |
| நாடல் | ஆராய்தல் . |
| நாடவர் | தேசத்தார் . |
| நாடறிவான் | நாடுகளை அறிபவனான சந்திரன் . |
| நாடன் | தேசத்தான் ; ஆளுந்தலைவன் ; குறிஞ்சி நிலத் தலைவன் ; கார்த்திகைநாள் . |
| நாடன்பருத்தி | ஒரு செடிவகை . |
| நாடா | நெசவுக்கருவிவகை ; நூற்பட்டை ; அணி வகை . |
| நாடி | நாட்டிலுள்ளவள் ; நாட்டையுடையவள் ; இரத்தக்குழாய் முதலியன ; மூச்சுக்குழாய் யாழின் நரம்பு ; உட்டொளை ; பூவின் தாள் ; நாழிகை ; மூக்கு ; மோவாய் ; மாளிகையின் மேற்பாகத்தோர் உறுப்பு ; சோதிடநூல் ; தாதுநரம்பு ; இலைநரம்பு . |
| நாடிகேளம் | காண்க : நாளிகேர(ள)ம் . |
| நாடிதாரணை | நாடிகளின் நாடைமுறை . |
| நாடிநரம்பு | நாடியோட்ட நரம்பு . |
| நாடிப்பரீட்சை | நாடியைச் சோதித்து அறிகை . |
| நாடிபார்த்தல் | தாது பார்த்தல் . |
| நாடிமண்டலம் | சூரியவீதி . |
| நாடியொடுங்குதல் | தாதுவின் ஒடுக்கம் ; ஊக்கமிழத்தல் . |
| நாடிவிழுதல் | தாதுவின் ஒடுக்கம் ; ஊக்கமிழத்தல் . |
| நாடு | நாட்டுப்பகுதி ; இடம் ; பூமி ; உலகம் ; நாட்டுப்புறம் ; மருதநிலம் ; பக்கம் ; இடப்பரப்பு ; பூவுலகப்பொது ; ஒரு பேரெண் . |
| நாடுசார்நிலம் | நாட்டின் பக்கத்திலுள்ள கழனி முதலியவை . |
| நாடுதல் | தேடுதல் ; ஆராய்தல் ; விரும்புதல் ; தெரிதல் ; ஒத்தல் ; அளத்தல் ; கிட்டுதல் ; நினைத்தல் ; மோப்பம்பிடித்தல் ; அளவு படுதல் . |
| நாடுபடுதிரவியம் | நாட்டிலுண்டாகும் பொருள்களான செந்நெல் , செவ்விளநீர் , சிறுபயறு , ஆனெய் , வாழை , கரும்பு . |
| நாடுபிடித்தல் | நாட்டை வென்று கைக்கொள்ளுதல் ; குத்தகையெடுத்தல் . |
| நாடுரி | ஒன்றரை நாழிகொண்ட முகத்தல் அளவை . |
| நாடேயன் | நாடகக் கணிகையின் மகன் . |
| நாடோடி | ஊர்சுற்றித் திரிபவன் ; நாட்டுக்குரியது ; சாதாரண வழக்கில் உள்ளது . |
| நாடோடிப்பேச்சு | வழக்குச்சொல் ; சாதாரணப் பேச்சில் வழங்கும் மொழி . |
| நாடோறும் | தினமும் . |
| நாண் | வெட்கம் ; மகளிர்க்குரிய கூச்சம் ; வில்நாண் ; கயிறு ; மாங்கலியங் கோத்த சரடு ; காண்க : அரைஞா(நா)ண் . |
| நாண்ஞாயிறு | காலை . |
| நாண்புடை | வில்லின் நாணொலி . |
| நாண்பூட்டுதல் | காண்க : நாணேற்றுதல் . |
| நாண்மகிழ் | நாளோலக்கம் . |
| நாண்மகிழிருக்கை | நாளோலக்கம் . |
| நாண்மங்கலம் | அறம் விளைக்கும் செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் சிறப்பைச் சொல்லும் புறத்துறை ; அரசற்கு யாண்டு இத்துணை சென்றது என்று எழுதும் மங்கலம் . |
| நாண்மதி | முழுநிலா . |
| நாண்மதியம் | முழுநிலா . |
| நாண்மலர் | அன்றலர்ந்த பூ . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 650 | 651 | 652 | 653 | 654 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாட்போது முதல் - நாண்மலர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வழங்கும், கூத்தர், கூத்து, நாடகக், நாடகக்கணிகை, என்னும், ஒடுக்கம், தாதுவின், நாளோலக்கம், முழுநிலா, நரம்பு, ஊக்கமிழத்தல், நாடகத்தமிழ், பெண், இடம், கணிகை, அன்றலர்ந்த, ஆராய்தல்

