முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நாக்குழறுதல் முதல் - நாகவல்லி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நாக்குழறுதல் முதல் - நாகவல்லி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நாக்குழறுதல் | நாத்தழுதழுத்தல் . |
| நாக்குறுதி | சொல் தவறாமை . |
| நாக்கைப்பிடுங்கிக்கொள்ளுதல் | தவறு நடந்ததற்கு மிக்க வருத்தங்காட்டுதல் ; நாவைப்பிடுங்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளுதல் ; முயற்சியெடுத்துக்கொள்ளுதல் ; அதிகமாகப் பேசுதல் . |
| நாக்கொட்டுதல் | நாவறளுகை . |
| நாகக்குவடு | செம்புமலை . |
| நாககர்ணம் | செவ்வாமணக்கஞ்செடி . |
| நாககற்பம் | செவ்வீயம் . |
| நாககன்னிகை | நாகலோகத்துப் பெண் . |
| நாக்கெந்தி | நேர்வாளம் ; காண்க : வஞ்சிக்கொடி . |
| நாகசம் | சிந்தூரம் ; ஈயம் . |
| நாகசரம் | காண்க : நாகசுரம் . |
| நாகசாபம் | நல்லபாம்பைக் கொல்வதனால் ஏற்படும் பழிவினை . |
| நாகசுரம் | துளைக்கருவிவகை . |
| நாகசேதகன் | மலைகளின் சிறகை அரிந்தோனாகிய இந்திரன் . |
| நாகணம் | நறும்பண்டவகை ; நேர்வாளம் . |
| நாகணவாய் | பூவைப் பறவை . |
| நாகணவாய்ச்சி | பூவைப் பறவை . |
| நாகணவாய்ப்புள் | பூவைப் பறவை . |
| நாகணை | திருமாலின் பாம்புப் படுக்கை . |
| நாகணையினான் | பாம்பபைப் படுக்கையாகக்கொண்ட திருமால் . |
| நாகத்திசை | வடமேற்கு . |
| நாகதந்தம் | யானைக்கொம்பு ; பாம்பின் பல் ; முளையாணி . |
| நாகதாளி | காண்க : சப்பாத்துக்கள்ளி . |
| நாகதிசை | மேற்கு . |
| நாகதீபம் | ஐந்தலை நாகத்தின் வடிவம்போன்ற விளக்கு . |
| நாகதேவன் | காண்க : ஆதிசேடன் . |
| நாகதேனி | காண்க : பெருமருந்து |
| நாகதொனி | மருதப் பண்களுள் ஒன்று . |
| நாகந்தி | காண்க : நேர்வாளம் . |
| நாகநாடு | துறக்கம் ; நாகர் என்னும் மனித சாதியார் வாழும் நாடு ; பவணலோகம் . |
| நாகநாதன் | துறக்கத்துக்கு இறைவனான தேவேந்திரன் ; காண்க : ஆதிசேடன் ; சிவன் . |
| நாகப்பகை | பாம்பிற்குப் பகையான கருடன் . |
| நாகப்பச்சை | பச்சைக்கல்வகை . |
| நாகப்பாம்பு | நல்லபாம்பு ; வயிற்றுப்பூச்சி . |
| நாகப்பூ | ஒரு மரவகை . |
| நாகப்பூச்சி | காண்க : நாக்குப்பூச்சி . |
| நாகபடம் | நல்லபாம்பின் படம் ; பாம்புப்படத்தின் உருவம்கொண்ட ஒரு காதணிவகை ; படமெடுத்த நாகத்தின் உருக்கொண்ட தோளணிவகை . |
| நாகபந்தம் | ஒரு சித்திரகவிவகை . |
| நாகபந்து | அரசமரம் . |
| நாகபாசம் | பாம்புருவான ஒரு படைக்கலம் . |
| நாகம் | வானம் ; துறக்கம் ; மேகம் ஒலி ; காண்க : நல்லபாம்பு ; நாகப்பச்சை ; நாவல் ; பாம்பு நஞ்சு ; நாகலோகம் ; யானை ; குரங்கு ; கருங்குரங்கு ; காரீயம் ; துத்தநாகம் ; நற்சீலை ; மலை ; புன்னைமரம் ; ஞாழல் ; சுகம் . |
| நாகம்மா | பாம்புத் தேவதை . |
| நாகமணி | நாகத்தின் தலையில் இருப்பதாகக் கருதப்படும் இரத்தினம் . |
| நாகமல்லி | கொடிவகை . |
| நாகமாதா | துளசி . |
| நாகமாபுரம் | மதுரை . |
| நாகமுகன் | யானைமுகத்தவனான கணபதி . |
| நாகர் | தேவர் ; மகளிர் தலையணிவகை ; பாதி மக்கள் வடிவுமாய் அமைந்த நாகலோகவாசிகள் ; ஒரு பழைய சாதியார் . |
| நாகரகன் | சித்திரகாரன் ; கள்வன் . |
| நாகரத்தினம் | காண்க : நாகமணி . |
| நாகரம் | காண்க : தேவநாகரி ; வடமொழி எழுத்து ; சுக்கு ; தேன்றொடை . |
| நாகரவண்டு | பொன்வண்டு ; நத்தைவகை ; சிறுகுழந்தை . |
| நாகரன் | நகரத்தான் ; சிறந்தோன் ; கணவன் ; உடன்பிறந்தான் . |
| நாகராகம் | பெரும் பண்களுள் ஒன்று . |
| நாகராசன் | காண்க : ஆதிசேடன் . |
| நாகரி | குருக்கத்திக்கொடி . |
| நாகரிகம் | நகரவொழுக்கம் ; காண்க : தேவநாகரி ; செப்பம் ; கண்ணோட்டம் ; மரியாதை ; பிலுக்கு . |
| நாகரிகர் | கண்ணோட்டமுடையவர் ; நகரத்தார் ; பல்கலை வல்லோர் ; காமுகர் ; சதுரர் ; சுவைஞர் . |
| நாகரிகி | செப்பமான நடையுடையவள் . |
| நாகரையன் | காண்க : ஆதிசேடன் . |
| நாகல் | நாவல் . |
| நாகலதை | ஆண்குறி . |
| நாகலிங்கம் | நாகத்தால் கவிக்கப்பெற்ற இலிங்கம்போன்ற உருவத்தைக்கொண்ட பூவுள்ள மரவகை . |
| நாகலோகம் | தேவலோகம் ; கீழேழுலகுள் ஒன்று , பாதலம் . |
| நாகவடம் | காண்க : நாகபடம் . |
| நாகவராளி | ஒரு பண்வகை . |
| நாகவல்லி | வெற்றிலைக்கொடி ; திருமணநிறைவுச் சடங்கில் ஒன்று . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 647 | 648 | 649 | 650 | 651 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாக்குழறுதல் முதல் - நாகவல்லி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஆதிசேடன், ஒன்று, பறவை, நாகத்தின், பூவைப், நேர்வாளம், நாகபடம், மரவகை, நாவல், நாகலோகம், நாகமணி, நல்லபாம்பு, தேவநாகரி, துறக்கம், பண்களுள், நாகசுரம், சொல், நாகர், சாதியார், நாகப்பச்சை

