முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நன்மைப்பகுதி முதல் - நாக்குவிழுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நன்மைப்பகுதி முதல் - நாக்குவிழுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நன்மைப்பகுதி | நல்வினைப்பயன் . |
| நன்மைப்பேறு | நல்வினைப்பயன் . |
| நன்மையாதல் | பூப்படைதல் . |
| நன்மொழி | இன்மொழி ; உறுதிமொழி ; தேவபாணி . |
| நன்மொழிபுணர்த்தல் | நூலழகு பத்தனுள் இனிய மொழிகளைச் சேர்த்து வழங்குகை . |
| நன்றாக | செம்மையாக ; ஒரு வாழ்த்துத் தொடர் . |
| நன்றாய் | தாராளமாய் ; காண்க : நன்றாக . |
| நன்றாயிருத்தல் | நல்ல நிலைமையிலிருத்தல் ; நல்வாழ்வோடிருத்தல் . |
| நன்றி | நன்மை ; உதவி ; செய்ந்நன்றி ; அறம் . |
| நன்றிகெட்டவன் | செய்ந்நன்றியை மறந்தவன் . |
| நன்றிகேடு | செய்ந்நன்றி மறக்கை . |
| நன்றிகொல்லுதல் | செய்ந்நன்றி மறக்கை . |
| நன்றிகோறல் | செய்ந்நன்றி மறக்கை . |
| நன்றிசொல்லுதல் | செய்ந்நன்றியறிவித்தல் . |
| நன்றிமறத்தல் | செய்ந்நன்றி மறந்துவிடுதல் . |
| நன்றியற்றவன் | செய்ந்நன்றி மறந்தவன் . |
| நன்றியறிதல் | செய்ந்நன்றியுணர்தல் . |
| நன்றியில்செல்வம் | பயன்படாச் செல்வம் . |
| நன்றியீனம் | காண்க : நன்றிகேடு . |
| நன்று | நல்லது ; சிறப்பு ; பெரிது ; அறம் ; இன்பம் ; நல்வினை ; உதவி ; வாழ்வின் நோக்கம் ; துறக்கம் ; ஏற்கைக்குறிப்பு . |
| நன்னடத்தை | நல்லொழுக்கம் . |
| நன்னடை | நல்லொழுக்கம் . |
| நன்னயம் | இன்சொற் செயல்கள் ; நல்ல உதவிகள் ; உபசாரம் ; நன்மை ; நினைவு . |
| நன்னர் | நன்மை . |
| நன்னாட்கொள்ளுதல் | மங்கலமான நாளைக் குறிப்பிடுதல் . |
| நன்னாரி | கொடிவகை . |
| நன்னாள் | நல்ல நாள் ; விழாநாள் . |
| நன்னி | சிறியது . |
| நன்னிக்கல் | மருந்தரைக்கும் அம்மி . |
| நன்னிலம் | நன்செய் . |
| நன்னிலமிதித்தல் | மணமகனான அரசன் தன் மனைவியைவிட்டு முதன்முதல் அத்தாணி மண்டபத்திற்கு அடிவைக்கும் சடங்கு . |
| நன்னிலை | நல்ல நிலைமை ; நல்லொழுக்க்ம் ; தவம் ; உலகம் . |
| நன்னிறம் | வெண்ணிறம் . |
| நன்னீர் | தூயநீர் ; பனிநீர் ; நல்ல இயற்கை . |
| நன்னுதல் | பல்லாற் கடித்தல் ; நறுக்குதல் . |
| நன்னெறி | நல்ல வழி ; ஒரு நீதிநூல் . |
| நனந்தலை | அகன்ற இடம் ; மண்டலம் ; நடு ; உச்சந்தலை ; உச்சி ; திசை . |
| நனம் | அகற்சி ; அகலம் . |
| நனவு | மெய்ம்மை ; விழிப்பு ; நினைவு ; களன் ; போர்க்களம் ; தேற்றம் ; அகலம் . |
| நனா | நனவுநிலையான விழிப்பு . |
| நனி | மிகுதியாய் . |
| நனை | பூவரும்பு ; தேன் ; கள் ; யானைமதம் . |
| நனைத்தல் | ஈரமாக்குதல் . |
| நனைதல் | ஈரமாதல் ; அரும்புதல் ; தோன்றுதல் . |
| நனைவு | ஈரம் . |
| நா | ஓர் உயிர்மெய்யெழுத்து(ந்+ஆ) ; சொல் ; நடு ; மணி முதலியவற்றின் நாக்கு ; தீயின் சுடர் ; திறவுகோலின் நாக்கு ; நாகசுரத்தின் ஊதுவாய் ; துலைநாக்கு ; அயல் ; பொலிவு . |
| நாக்கரளை | நாவில் வரும் ஒரு நோய்வகை . |
| நாக்களாம்பூச்சி | காண்க : நாக்குப்பூச்சி . |
| நாக்கறுத்தான்புல் | தருப்பை . |
| நாக்கு | நாக்கு என்னும் உறுப்பு ; சொல் ; நடு ; துலைநா ; மணியின் நாக்கு ; தீயின் சுடர் ; பூட்டின் தாள் ; திறவுகோலின் நாக்கு ; நாகசுரத்தின் ஊதுவாய் ; அயல் ; தானியக்கதிர் ; படகு வலிக்கும் தண்டு . |
| நாக்குத்தவறுதல் | சொல்தவறுதல் ; பொய்சொல்லுதல் . |
| நாக்குநரம்பற்றவன் | தீயவை பேசுபவன் ; அளவு கடந்து பேசுபவன் . |
| நாக்குநீட்டுதல் | அளவுகடந்து பேசுதல் . |
| நாக்குநீளுதல் | விருப்பமிகுதல் ; கடுமையாய்ப் பேசுதல் . |
| நாக்குப்புண் | நாவில் தோன்றும் நோய்வகை . |
| நாக்குப்புரட்டு | பொய் . |
| நாக்குப்புரளுதல் | சொல் தவறுதல் . |
| நாக்குப்புற்று | நாவில் உண்டாகும் புண்வகை . |
| நாக்குப்பூச்சி | மலப்பையில் வாழும் சிறு புழு ; வயிற்றில் உள்ள நீண்ட புழுவகை ; நாங்கூழ் . |
| நாக்குவழித்தல் | நாவின் அழுக்கினை வழித்து நீக்குதல் . |
| நாக்குவளைத்தல் | பழித்தல் . |
| நாக்குவாங்குதல் | நாக்கை உள்ளிழுத்தல் ; களைத்துப்போதல் ; வில்லங்கப்படுத்துதல் ; களைக்கப்பண்ணுதல் . |
| நாக்குவிழுதல் | பேச நாவெழாதிருத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 646 | 647 | 648 | 649 | 650 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நன்மைப்பகுதி முதல் - நாக்குவிழுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செய்ந்நன்றி, நாக்கு, நல்ல, சொல், நாவில், நன்மை, மறக்கை, காண்க, ஊதுவாய், திறவுகோலின், நாகசுரத்தின், நோய்வகை, பேசுதல், பேசுபவன், நாக்குப்பூச்சி, சுடர், அயல், நினைவு, அறம், உதவி, நன்றாக, நல்வினைப்பயன், மறந்தவன், நன்றிகேடு, விழிப்பு, அகலம், நல்லொழுக்கம், தீயின்

