தமிழ் - தமிழ் அகரமுதலி - நடேசன் முதல் - நண்ணுவழி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நடேசன் | காண்க : நடராசன் . |
| நடை | காலாற் செல்லுகை ; பயணம் ; அடி வைக்குங் கதி ; வாசல் ; இடைகழி ; ஒழுக்கம் ; வழக்கம் ; நீண்டநாள் ; நடைகூடம் ; இயல்பு ; அடி ; கூத்து ; தொழில் ; செல்வம் ; ஒழுக்கநூல் ; நித்தியபூசை ; கோயில் ; கோள் முதலியவற்றின் கதி ; கப்பல் ஏறும் வழி ; மொழியின் போக்கு ; வாசிப்பின் நோட்டம் ; தடவை . |
| நடைக்காவணம் | காண்க : நடைப்பந்தல் . |
| நடைக்குநடை | ஒவ்வொரு தடவையும் . |
| நடைக்கூடம் | வாயிலிடம் ; மாளிகையின் முகப்புக்கூடம் ; நடந்துசெல்லும் கூடமான உடம்பு . |
| நடைகாவற்காரன் | கோயில் முதலியவற்றின் வாயில்களின் காவலாய் நிற்பவன் . |
| நடைகிணறு | இறங்க ஏற உதவும் படிகள் கொண்ட கிணறு . |
| நடைகூடம் | காண்க : நடைக்கூடம் . |
| நடைகூலி | நடந்து செல்வதற்குரிய கூலி . |
| நடைச்சலங்கு | சிறுபடகு . |
| நடைசாரி | குதிரையின் மந்தநடை ; உலாவுகை ; இடையறாத நடை . |
| நடைத்திண்ணை | இடைகழித் திண்ணை . |
| நடைத்தேர் | சிறுதேர் . |
| நடைநீர் | ஓட்டமுள்ள தண்ணீர் . |
| நடைப்படம் | நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை . |
| நடைப்படாம் | நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை . |
| நடைப்பந்தல் | விழாக்காலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் பந்தல் ; புறப்பாட்டில் சுவாமியுடன் செல்லுமாறு அமையும் பூப்பந்தல் . |
| நடைப்பரிகாரம் | வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்கள் ; பயணத்திற்கு வேண்டிய பொருள்கள் ; பத்தியமில்லாத மருந்து . |
| நடைப்பிணம் | பயனற்றவன் ; நடக்கும் பிணம் . |
| நடைப்பெருவாயில் | கோயிலின் தலைவாசல் . |
| நடைப்பொன் | நடப்புச் செலவுக்குத் தேவையான பணம் . |
| நடைபடம் | காண்க : நடைபாவாடை . |
| நடைபடி | நடத்தை ; வழக்கம் ; நீதிமன்ற நடவடிக்கை . |
| நடைபரிதல் | விரைந்து நடத்தல் . |
| நடைபழகுதல் | நடக்கக் கற்றல் ; தாமதமாய் நடத்தல் . |
| நடைபாதை | நடக்கும் பாதை . |
| நடைபாவாடை | நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை . |
| நடைபாவி | படிக்கிணறு ; படிக்கட்டு . |
| நடைமலை | நடக்கும் மலையாகிய யானை . |
| நடைமனை | நடக்கும் வீடாகிய உடல் . |
| நடைமாடு | ஆடுமாடுகள் . |
| நடைமாற்று | காண்க : நடைபாவாடை . |
| நடைமுதல் | நடப்பிலுள்ள ஆண்டு . |
| நடைமுறை | வழக்கமாக நடைபெறும் செயல்கள் ; பரம்பரை வழக்கம் . |
| நடையறிதல் | ஊர்வழக்கங்களையறிதல் ; எழுத்து நடையை அறிதல் . |
| நடையன் | நடக்கிறவன் ; உழவுமாடு ; குதிரை முதலியன ; செருப்பு . |
| நடையாட்டம் | வழக்கிற் பயின்றுவருகை . |
| நடையாடுதல் | சஞ்சரித்தல் ; பரவுதல் . |
| நடையில்விடுதல் | மாடு முதலியவற்றைப் பெருநடையிற் செலுத்துதல் . |
| நடையுடைபாவனை | மக்களின் வழக்கவொழுக்கம் முதலியன . |
| நடையுடையோன் | காற்று . |
| நடையொத்து | ஒரு தாளவகை . |
| நடைவண்டி | சிறுபிள்ளைகள் நடைபழகுதற்கு உதவும் சிறுவண்டி . |
| நடைவரம்பு | நடந்து செல்வதற்குத் தக்கபடி அமைந்த வயல் வரப்பு . |
| நடைவழி | மூன்று முழ அகலமுள்ள பாதை ; நடக்கும் வழி . |
| நடைவாவி | படிகளமைந்த கிணறு . |
| நடைவானம் | காண்க : நடைப்பந்தல் . |
| நடைவிளக்கெரித்தல் | தண்டனையாகத் தலையில் விளக்கை வைத்து குற்றஞ்செய்தோரை ஊரில் வலம்வரச் செய்தல் . |
| நடைவெள்ளம் | தோட்டம் முதலியவற்றிற்குத் தானாகவே பாயும் நீர் . |
| நண்டு | நீர் ஓரம் வாழும் ஒருவகைக் சிறு உயிரி ; கற்கடகராசி . |
| நண்டுக்கரம் | தெரிநிலைக்கையிரண்டும் அங்குலி பிணைந்துவரும் இணைக்கைவகை . |
| நண்டுக்காற்கீரை | ஒரு கீரைவகை . |
| நண்டுக்காற்புல் | ஒரு புல்வகை . |
| நண்டுக்கொடுக்கு | நண்டின் முன்புறத்துள்ள உறுப்பு . |
| நண்டுச்செலவு | நண்டு இருக்கும் வளை . |
| நண்டுஞ்சுண்டும் | சிறியவும் பெரியவுமான இளங்குழந்தைகள் . |
| நண்டுநசுக்கு | சிறியவும் பெரியவுமான இளங்குழந்தைகள் . |
| நண்டுவாய்க்காலி | காண்க : நட்டுவாய்க்காலி . |
| நண்ணம் | சிறிது . |
| நண்ணலர் | பகைவர் . |
| நண்ணார் | பகைவர் . |
| நண்ணுதல் | கிட்டுதல் ; பொருந்துதல் ; செய்தல் ; இருத்தல் . |
| நண்ணுநர் | நட்பினர் . |
| நண்ணுவழி | அருகிலுள்ள இடம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 636 | 637 | 638 | 639 | 640 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நடேசன் முதல் - நண்ணுவழி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நடக்கும், நடத்தற்பொருட்டு, வழியில், நடைபாவாடை, நடந்து, விரிக்கும், நடைப்பந்தல், வழக்கம், நீர், செய்தல், நண்டு, பெரியவுமான, பகைவர், இளங்குழந்தைகள், முதலியன, சிறியவும், நடத்தல், முதலியவற்றின், நடைக்கூடம், கிணறு, கோயில், வேண்டிய, உதவும், நடைகூடம், பாதை

