தமிழ் - தமிழ் அகரமுதலி - நடுக்குதல் முதல் - நடுவே வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நடுக்குதல் | காண்க : நடுக்குறுத்தல் ; மயங்கச் செய்தல் ; நடுங்குதல் . |
| நடுக்குவாதம் | காண்க : நடுக்கல்வாதம் . |
| நடுக்குறுத்தல் | நடுங்கச்செய்தல் . |
| நடுக்கேட்டல் | வழக்கு விசாரித்தல் ; நியாயமாகத் தீர்ப்புச் சொல்ல வேண்டுதல் . |
| நடுகல் | போரில் இறந்துபட்ட வீரனைத் தெய்வமாக நிறுத்தும் கல் . |
| நடுகூலி | நாற்று நட்ட கூலி . |
| நடுகை | நாற்று நடவு . |
| நடுங்க | ஓர் உவம உருபு . |
| நடுங்கநாட்டம் | தோழி தலைவி நடுங்குமாறு பேசும் ஒரு துறை . |
| நடுங்கல் | அச்சம் . |
| நடுங்கலன் | நடுக்கல்வாதக்காரன் . |
| நடுங்குதல் | அசைதல் ; அஞ்சுதல் ; மனங்குறைதல் ; பதறுதல் ; நாத் தடுமாறுதல் ; தலையசைத்தல் ; ஒப்பாதல் ; அதிர்தல் . |
| நடுச்சாமம் | நள்ளிரவு ; மூன்றாம் சாமம் . |
| நடுச்செய்தல் | நியாயம் சொல்லுதல் . |
| நடுச்சொல்லுதல் | தீர்மானஞ்செய்தல் ; காண்க : நடுச்செய்தல் ; சான்று கூறுதல் . |
| நடுச்சொல்வார் | சான்று கூறுவோர் . |
| நடுத்தரம் | மத்தியநிலை . |
| நடுத்தலை | உச்சந்தலை ; மத்தியமான இடம் . |
| நடுத்திட்டம் | நடுவுநிலைமை . |
| நடுத்தீர்ப்பு | நியாயத் தீர்மானம் ; தெய்வத் தீர்ப்பு ; கர்த்தருடைய கடைசித்தீர்ப்பு . |
| நடுத்துஞ்சல் | காண்க : அவமிருத்து . |
| நடுத்தெரு | ஊரின் மத்தியிலுள்ள வீதி ; தெருவின் மத்தி . |
| நடுத்தெருவில்விடுதல் | ஆதரவின்றிக் கைவிட்டுப் போதல் . |
| நடுதல் | ஊன்றுதல் ; வைத்தல் ; நிலைநிறுத்துதல் . |
| நடுதறி | நட்ட கம்பம் ; கன்றாப்பூரில் உள்ள சிவபிரான் . |
| நடுநடுங்குதல் | பயத்தால் மிகக் கலங்குதல் ; குரல் இசைக்கேடாகக் கம்பித்தல் . |
| நடுநாடி | காண்க : சுழுமுனை . |
| நடுநாயகம் | அணிகலன் மத்தியில் பதிக்கும் மணி ; சிறந்தவன் . |
| நடுநாள் | நண்பகல் ; இடையாமம் ; சித்திரைநாள் . |
| நடுநிலை | நீதி ; மத்தியநிலைமை ; நியாயம் ; சைவத்திற்கு யோக பூசைவகை . |
| நடுநிலைஞாயம் | மத்தியத்தம் . |
| நடுநிலைமை | மத்தியநிலைமை ; நியாயம் ; காண்க : நடுநிலைஞாயம் . |
| நடுநிற்றல் | பிணைபடுகை . |
| நடுநெஞ்சு | நடுமத்தியம் . |
| நடுப்பகல் | மத்தியானம் , உச்சிவேளை , உருமம் . |
| நடுப்பாதை | நடைவழியின் நடுவிலுள்ள பகுதி . |
| நடுப்பார் | மத்தி . |
| நடுப்பார்த்தல் | மத்தியத்தம் பார்த்தல் . |
| நடுப்புற | மத்தியில் . |
| நடுப்பெற | மத்தியில் . |
| நடுப்பேசுதல் | ஒருவருடைய வழக்கை எடுத்துப் பேசுதல் . |
| நடுமத்தி | காண்க : நடுமையம் . |
| நடுமத்தியானம் | உச்சிக்காலம் , உருமம் . |
| நடுமையம் | நடுமத்தி ; உச்சி . |
| நடுராசி | நடுத்தரம் . |
| நடுவண் | இடையில் . |
| நடுவத்தசாமம் | நள்ளிரவு . |
| நடுவயது | இளமைக்கும் மூப்புக்கும் இடைப்பட்டப் பருவம் . |
| நடுவர் | நீதிபதி . |
| நடுவழி | பயணததின் மத்தி ; நடைவழியின் நடுவிலுள்ள பகுதி . |
| நடுவறுத்தல் | சீர்தூக்கிப் பார்த்தல் ; வழக்குத் தீர்த்தல் . |
| நடுவறுத்தான் | மூக்கிரட்டைக்கொடி . |
| நடுவன் | காண்க : நடுவர் ; நமன் , நடுநிலைமையோன் . |
| நடுவனாள் | பரணி . |
| நடுவாந்தரம் | உதவியற்ற நிலை ; செயலினிடையில் ; எதிர்பாராதபடி ; மத்தியப்பகுதி . |
| நடுவிரல் | ஐவிரல்களுள் இடையிலுள்ள விரல் . |
| நடுவிலவன் | புதல்வர்களுள் நடுவுள்ளவன் . |
| நடுவிலான் | புதல்வர்களுள் நடுவுள்ளவன் . |
| நடுவின்மை | நீதிக்கேடு . |
| நடுவீடு | பூசைக்குரிய உள்வீடு ; சாப்பாட்டு அறை . |
| நடுவு | இடை ; நடுவுநிலைமை ; மாதரிடுப்பு ; நீதி . |
| நடுவுநிலை | ஒருபக்கம் சாராமை ; சாந்தம் என்னும் சுவை . |
| நடுவுநிலைத்திணை | பாலைத்திணை . |
| நடுவுநிலைமை | காண்க : நடுநிலை ; செம்மை ; நிதானம் . |
| நடுவுபாடு | மத்தியப்பகுதி . |
| நடுவுள்ளவன் | இடையிலுள்ளவன் ; புதல்வர்களுள் மத்தியில் உள்ளவன் . |
| நடுவூர் | ஊரின் நடுவிடம் . |
| நடுவெலும்பு | முதுகெலும்பு . |
| நடுவெழுத்து | பத்திரம் எழுதுபவன் ; பத்திரப்பதிவு அலுவலன் . |
| நடுவெளி | இடைவெளி ; பரந்தவெளி . |
| நடுவே | இடையில் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 635 | 636 | 637 | 638 | 639 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நடுக்குதல் முதல் - நடுவே வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மத்தியில், நடுவுள்ளவன், மத்தி, நடுவுநிலைமை, புதல்வர்களுள், நியாயம், பகுதி, உருமம், நடைவழியின், நடுவிலுள்ள, நடுமத்தி, நடுவர், மத்தியப்பகுதி, இடையில், நடுமையம், மத்தியத்தம், பார்த்தல், நீதி, நட்ட, நள்ளிரவு, நாற்று, நடுங்குதல், நடுக்குறுத்தல், நடுச்செய்தல், சான்று, மத்தியநிலைமை, நடுநிலை, ஊரின், நடுத்தரம், நடுநிலைஞாயம்

