முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தேர்ந்துசெயல் முதல் - தேவதாசி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தேர்ந்துசெயல் முதல் - தேவதாசி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தேர்ந்துசெயல் | செயல் கைகூடும் வகையறிந்து செயல்புரிகை . |
| தேர்நிலை | தேர் நிலையாக நிற்குமிடம் . |
| தேர்ப்பாகன் | தேரோட்டி ; வலவன் ; சாரதி ; புதன் . |
| தேர்ப்பார் | தேரின் உட்பரப்பு . |
| தேர்மரச்சுற்று | தேர்த்தட்டைச் சுற்றிவர அமைக்கும் பலகை . |
| தேர்மறம் | அரசனது போர்த்தேரின் சிறப்பினைக் கூறும் புறத்துறை . |
| தேர்முட்டி | கோயில்தேர் நிற்கும் இடம் . |
| தேர்மொட்டு | கொடிஞ்சிமரம் ; தேர்க்கூம்பு ; பூவரசின் முதிர்ந்த மொட்டு . |
| தேர்வடம் | தேரிழுக்கும் பெரிய கயிறு . |
| தேர்வலவன் | தேர்ப்பாகன் . |
| தேர்வலான் | தேர்ப்பாகன் . |
| தேர்வீரர் | தேர்நடத்திப் போர்புரியும் வீரர் . |
| தேர்வு | ஆராய்ச்சி ; தேர்ந்தெடுத்தல் ; பயிற்சி ; சுவை . |
| தேரகன் | தேரோட்டி . |
| தேரடி | தேர்ச்சக்கரம் ; திருமாலின் சக்கரப் படை ; காண்க : தேர்முட்டி . |
| தேரர் | பௌத்தமுனிவர் ; சித்தருள் ஒருவர் . |
| தேரலர் | பகைவர் . |
| தேரறேர் | உண்மைத் தேர் அல்லாத தேரான கானல் நீர் . |
| தேரன் | பௌத்தன் ; தமிழ் மருத்துவநூல்கள் பல இயற்றிய சித்தரான தேரையர் . |
| தேராணி | தேரின் அச்சாணி . |
| தேராதுதெளிதல் | ஆராயாது ஒன்றை மற்றொன்றாக உறுதிசெய்தல் . |
| தேரார் | கல்லாதார் ; கீழோர் ; பகைவர் . |
| தேரி | மணல்தரை ; மணற்குன்று . |
| தேரிடக்கியம் | காண்க : தேர்க்கொடி . |
| தேரை | தவளைவகை ; தூண்டிலில் உணவு ; தேங்காய்நோய் ; கல்லின் குற்றம் . |
| தேரைபாய்தல் | பிறக்கும் குழந்தை இளைக்கும் படி கருப்பிணிமீது தேரை விழுகை ; நோய்ப்பட்டு உடல் தேய்தல் . |
| தேரோர் | தேர்வீரர் ; ஏர்க்களம் போர்க்களம் இவற்றை இசைக்கருவிகளுடன் பாடியாடும் புலவர் . |
| தேரோன் | தேருடையவனான சூரியன் ; தேர்ப்படைவீரன் . |
| தேலிக்கை | எளியது . |
| தேலுதல் | தப்புதல் ; காண்க : தேறுதல் . |
| தேவக்கிரியை | ஒரு பண்வகை ; தெய்வச்செயல் . |
| தேவகங்கை | ஆகாயகங்கை . |
| தேவகடாட்சம் | இறைவனருள் . |
| தேவகண்ணி | மலைவேப்பமரம் . |
| தேவகணம் | தேவர்களின் கூட்டம் ; அசுவினி , மிருகசீரிடம் , புனர்பூசம் , பூசம் , அத்தம் , சுவாதி , அனுடம் , திருவோணம் , இரேவதி என்னும் ஒன்பது நட்சத்திரங்கள் . |
| தேவகணிகை | காண்க : தேவதாசி . |
| தேவகதி | நால்வகைப் பிறப்புகளுள் ஒன்று , தெய்வப்பிறப்பு . |
| தேவகந்தம் | குங்கிலியம் ; நெய்ச்சிட்டிப்பூண்டு . |
| தேவகன்மி | கோயில் கடவுள் காரியம் பார்ப்பவன் . |
| தேவகாந்தாரி | ஒரு பண்வகை . |
| தேவகானம் | தேவர்கள் பாடும் இசை . |
| தேவகுசுமம் | கிராம்பு . |
| தேவகுஞ்சரி | தெய்வயானை . |
| தேவகுண்டம் | தானாக உண்டான ஊற்று . |
| தேவகுமாரன் | கடவுளின் புதல்வனான இயேசு கிறிஸ்து . |
| தேவகுரு | தேவர்க்கு ஆசானான வியாழன் ; காண்க : தேவகுருவம் . |
| தேவகுருவம் | அறுவகைப் போகபூமிகளுள் ஒன்று . |
| தேவகுலம் | கோயில் . |
| தேவகோட்டம் | கோயில் . |
| தேவகோடி | ஒரு பேரெண் . |
| தேவசடங்கு | சங்கநிதி . |
| தேவசபை | இந்திரசபை . |
| தேவசாட்சியாய் | தெய்வமே சான்றாக ; உண்மையாய் . |
| தேவசிந்தனை | கடவுள் தியானம் . |
| தேவசேவை | தெய்வ ஊழியம் . |
| தேவசேனாபதி | தேவர்களின் படைத் தலைவனான முருகக்கடவுள் . |
| தேவடியாள் | காண்க : தேவதாசி . |
| தேவதச்சன் | தெய்வலோகத்துத் தச்சனாகிய விச்சுவகருமா . |
| தேவதத்தம் | கோயிலுக்கு அளிக்கும் கொடை ; அருச்சுனன் கைச்சங்கு . |
| தேவதத்தன் | யாரேனும் ஒருவனைக் குறிக்கும் சொல் ; கொட்டாவியை உண்டுபண்ணும் வாயு . |
| தேவதரு | ஐந்தருக்களுள் ஒன்றான கற்பகம் ; மதகரி வேப்பமரம் . |
| தேவதா | தெய்வம் ; பிசாசம் . |
| தேவதாகாரம் | கோயில் . |
| தேவதாசன் | தெய்வத் தொண்டன் ; அரிச்சந்திரன் மகன் . |
| தேவதாசி | கோயிற் பணிவிடைபுரியும் கணிகை ; தேவலோகத்து நாடகமகளிர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 615 | 616 | 617 | 618 | 619 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேர்ந்துசெயல் முதல் - தேவதாசி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கோயில், தேவதாசி, தேர்ப்பாகன், தேவர்களின், தேவகுருவம், ஒன்று, கடவுள், பண்வகை, பகைவர், தேரோட்டி, தேர், தேரின், தேர்முட்டி, சொல், தேர்வீரர், தேரை

