தமிழ் - தமிழ் அகரமுதலி - தேங்காய்முறி முதல் - தேது வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தேங்காய்முறி | இரண்டாக உடைந்த தேங்காயில் பாதி . |
| தேங்காய்மூடி | இரண்டாக உடைந்த தேங்காயில் பாதி . |
| தேங்காய்மூரி | தேங்காயின் நரம்பு . |
| தேங்காய்வழுக்கை | தேங்காயின் முற்றாத உள்ளீடு . |
| தேங்காயெண்ணெய் | காண்க : தேங்காய்நெய் . |
| தேங்காயெறிதல் | சிதறுதேங்கா யுடைத்தல் . |
| தேங்குதல் | நிறைதல் ; தங்குதல் ; மிகுதல் ; மனங்கலங்குதல் ; அஞ்சுதல் ; தாமதித்தல் ; கெடுதல் . |
| தேங்குழல் | முறுக்குவகை . |
| தேசகன் | நாடாள்வோன் . |
| தேசகாலம் | இடமும்பொழுதும் ; கால நிகழ்ச்சி . |
| தேசத்தொண்டு | நாட்டிற்குழைத்தல் . |
| தேசப்படம் | நாட்டு அமைப்பைக் காட்டும் படம் . |
| தேசப்பழமை | காண்க : தேசவழக்கம் . |
| தேசபரிச்சேதம் | இடத்தால் அளவிடுகை . |
| தேசம் | நாடு ; இடம் ; ஒளி . |
| தேசமுகி | அரசிறை அதிகாரி . |
| தேசலம் | மாமரம் . |
| தேசவழக்கம் | நாட்டுவழக்கம் . |
| தேசவளமை | நாட்டுவழக்கம் . |
| தேசவாசி | நாட்டில் வாழ்வோன் ; கண்டபடி அலைவோன் ; நாட்டுநடப்பு அறிபவன் . |
| தேசவியவகாரம் | நாட்டுவழக்கம் . |
| தேசன் | ஒளிமயமாயுள்ளவன் ; பெரியோன் . |
| தேசனம் | திருத்தம் ; மூங்கில் . |
| தேசனி | மருள் ; மஞ்சள் . |
| தேசா | ஒரு பண்வகை . |
| தேசாக்கிரி | பாலை யாழ்த்திறவகை . |
| தேசாசாரம் | காண்க : தேசவழக்கம் . |
| தேசாட்சரி | உச்சிவேளையில் பாடப்படுவதாகிய ஒரு பண்வகை . |
| தேசாதிபத்தியம் | நாடாளும் தலைமை . |
| தேசாதிபதி | நாடோள்வோன் . |
| தேசாதேசம் | பற்பல நாடு . |
| தேசாந்தரம் | அயல் நாடு . |
| தேசாந்தரி | அயல்நாட்டான் ; பயணிகளை உண்பிக்கும்பொருட்டு ஏற்பட்ட கோயிற் கட்டளை . |
| தேசாந்திரி | பல இடங்களுக்குச் சென்று வாழ்பவன் ; பயணி ; பரதேசி . |
| தேசாவரம் | பூடுவகை ; கண்டதிப்பிலி ; திப்பிலி மூலம் . |
| தேசி | பெரிய குதிரை ; ஒரு பண்வகை ; ஒரு கூத்துவகை ; அழகு ; ஒளிரும் அழகுள்ளவள் ; எலுமிச்சைமரம் . |
| தேசிகம் | அவ்வந்நாட்டுச்சொல் ; அயல்நாட்டுச் சொல் ; இசைப் பாடல்களில் வரும் சொல் வழக்கு ; ஒரு கூத்துவகை ; ஒளி ; அழகு ; பொன் . |
| தேசிகன் | குரு ; ஆசான் ; மடாதிபதிக்கு வழங்கும் பட்டப்பெயர் ; தந்தை ; சைவகுருக்கள் மரபினன் ; வணிகன் ; அழகன் ; வேதாந்த தேசிகன் ; அயல்நாட்டான் . |
| தேசியம் | அந்தந்த நாட்டுச்சொல் ; கூத்துவகை . |
| தேசு | ஒளி ; பொன் ; அழகு ; விந்து ; அறிவு ; புகழ் ; பெருமை . |
| தேசோமந்தரம் | காண்க : நெல்லி . |
| தேசோமயம் | பேரொளி . |
| தேட்கடை | மூலநாள் ; பூடுவகை . |
| தேட்குடிச்சி | கருவண்டு . |
| தேட்கெண்டை | ஒரு மீன்வகை . |
| தேட்கொடுக்கி | சிறுசெடிவகை . |
| தேட்கொடுக்கு | சிறு செடிவகை ; தேளின் வாலிலுள்ள கொடுக்கு . |
| தேட்டக்காரன் | பொருள் தேடுவோன் ; திருடன் . |
| தேட்டம் | தேடிய பொருள் , சம்பாத்தியப் பொருள் ; சேகரிப்பு ; கவலை ; விருப்பம் . |
| தேட்டாக்கூறு | காண்க : தேடாக்கூறு . |
| தேட்டாண்மை | நாட்டம் ; விசாரிப்பு ; சம்பாத்தியம் . |
| தேட்டாளன் | சம்பாத்தியம் மிக்கவன் ; புதல்வன் . |
| தேட்டு | விருப்பம் ; துருவிக்கொள்கை ; சம்பாத்தியப் பொருள் ; சாப்பாடு முதலியவற்றின் சிறப்பு ; பாதுகாப்பு . |
| தேட்டை | காண்க : தேட்டம் ; தெளிவு ; தெளிந்த நீர் ; உயர்ந்தது . |
| தேடாக்கூறு | பாதுகாப்பின்மை . |
| தேடாத்தேட்டம் | பெருமுயற்சி அல்லது தீயவழியால் சேர்த்த பொருள் . |
| தேடி | அதிவிடயப்பூண்டு . |
| தேடிப்பிடித்தல் | ஆராய்ந்து கண்டெடுத்தல் ; சோரபுருடனைப் பெறுதல் . |
| தேடியோடித்திரிதல் | பெருமுயற்சி செய்தல் . |
| தேடிவைத்தல் | பொருள் சேர்த்துவைத்தல் . |
| தேடுதல் | ஆராய்தல் ; துருவிநாடுதல் ; சம்பாதித்தல் ; விசாரித்தல் ; ஒம்புதல் ; முயலுதல் . |
| தேண்டுதல் | துருவி நாடுதல் . |
| தேணிறம் | மாந்தளிர்க்கல் . |
| தேத்தடை | தேனிறால் . |
| தேத்தண்ணீர் | தேயிலைப் பானகம் . |
| தேத்தாலடித்தல் | பலவிடத்தும் மலிவாக விற்றல் . |
| தேத்திறால் | தேன் இறால் . |
| தேதாவெனல் | இசைக்குறிப்பு . |
| தேதி | நாள் . |
| தேது | காண்க : தேசு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 613 | 614 | 615 | 616 | 617 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேங்காய்முறி முதல் - தேது வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பொருள், பண்வகை, நாட்டுவழக்கம், கூத்துவகை, அழகு, நாடு, சொல், தேசவழக்கம், சம்பாத்தியம், பெருமுயற்சி, தேடாக்கூறு, விருப்பம், சம்பாத்தியப், தேட்டம், தேசு, பூடுவகை, தேங்காயில், உடைந்த, இரண்டாக, பாதி, தேங்காயின், பொன், அயல்நாட்டான், தேசிகன்

