தமிழ் - தமிழ் அகரமுதலி - அவ்வியத்தன் முதல் - அவதி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அவசானம் | எல்லை ; முடிவு ; இறப்பு . |
| அவசித்தாந்தம் | தவறான முடிவு . |
| அவசியம் | இன்றியமையாமை ; கட்டாயம் ; உறுதி . |
| அவடி | இடுதிரை . |
| அவிடி | இடுதிரை . |
| அவடு | பிடர் ; குழி ; கிணறு . |
| அவண் | அவ்விடம் ; அவ்விதம் . |
| அவணம் | இருபதினாயிரம் கொட்டைப்பாக்கு . |
| அவணன் | திண்ணியன் ; செல்வாக்குடையவன் . |
| அவணி | நன்மை . |
| அவத்தம் | காண்க : அபத்தம் ; பயனற்றது ; கேடு ; நாய்வேளைப் பூண்டு . |
| அவத்தன் | பயனற்றவன் . |
| அவத்தியம் | குற்றம் . |
| அவத்திரியம் | ஆபத்து , கேடு . |
| அவத்துறை | தீயவழி . |
| அவத்தை | நிலை ; வேதனை ; மனநிலை ; ஆன்மாவுக்குண்டாகும் சாக்கிர முதலியநிலை ; பாலிய முதலிய மானிடப் பருவங்கள் . |
| அவத்தைப்பிரயோகம் | அறுபத்து நான்கு கலையுள் சூனியம் வைத்துக் கொல்லும் வித்தை . |
| அவதஞ்சம் | செவிமலர்ப்பூ ; தலைமாலை . |
| அவதந்திரம் | சூழ்ச்சி ; சதியோசனை . |
| அவதரம் | சமயம் . |
| அவதரித்தல் | பிறத்தல் ; தங்குதல் . |
| அவதாதம் | தூய்மை ; பொன்மை ; வெண்மை அழகு . |
| அவதாரணம் | அவதாரம் ; தேற்றம் ; உறுதி ; முகவுரை . |
| அவதாரம் | இறங்குகை ; உயர்பிறப்பு ; பிரிக்கை ; தீர்த்தத்துறை . |
| அவதாரிகை | முகவுரை ; முன்னுரை . |
| அவதானம் | மேன்மைச் செயல் ; கவனம் ; நினைவாற்றல் ; சாதுரியம் ; பிரிவு ; ஒரே சமயத்தில் பல பொருள்களைக் கவனிக்கை ; வரம்பு மீறுகை ; மனஒருமைப்பாடு ; முடிவு . |
| அவதானி | கருத்துள்ளவன் ; வேதங்களில் தேர்ச்சியுள்ளவன் ; அவதானம் செய்வோன் . |
| அவதி | துன்பம் ; எல்லை ; தவணை ; அளவு ; கணக்கு ; ஐந்தாம் ; வேற்றுமை ; எல்லைப்பொருள் ; அவதிஞானம் ; பரிச்சேதம் ; காலம் ; குழி ; விடுமுறை . |
| அவ்வியத்தன் | கடவுள் ; அறிவிலி . |
| அவ்வியம் | மனக்கோட்டம் ; பொறாமை , வஞ்சகம் ; தேவர்க்கிடும் பலி ; காண்க : அவ்வியயம் . |
| அவ்வியயம் | அழியாதது ; இடைச்சொல் . |
| அவ்வியயன் | அழிவில்லாதவன் ; கடவுள் . |
| அவ்வை | தாய் ; கிழவி ; தவப்பெண் ; காண்க : ஔவை . |
| அவ்வோன் | அவன் . |
| அவ | கீழ் முதலிய பொருள்களைக் குறித்து வரும் ஒரு வடமொழி முன்னொட்டு ; எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க வரும் ஒரு வடமொழி முன்னொட்டு . |
| அவக்கவக்கெனல் | விரைவுக் குறிப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு . |
| அவக்கிரகம் | தடை ; மழையின்மை ; யானை நெற்றி . |
| அவக்கிரசம் | காடி . |
| அவக்குறி | கேடு காட்டும் குறி . |
| அவக்கொடை | தகுதியற்றவர்க்குத் தரும் பொருள் ; பயனற்ற அறம் . |
| அவகடம் | வஞ்சகம் ; தீச்செயல் ; தீவினை . |
| அவகதவாய் | கீழக்காய்நெல்லிப் பூண்டு . |
| அவகதி | தாழ்ந்தநிலை . |
| அவகாசம் | சமயம் ; இடம் ; திராணி ; உரிமை . |
| அவகாசமுறி | பாகபத்திரம் . |
| அவகாயம் | வானம் . |
| அவகாரம் | முதலை ; போர் முதலியவற்றில் இளைப்பாறுகை ; சூது ; களவு ; கொள்ளை ; பொருள் ; அழைப்பு . |
| அவகிருத்தியம் | கெட்ட செய்கை . |
| அவகீதம் | பலர் பழித்தது ; அபவாதம் ; வசைப்பாட்டு . |
| அவகீர்த்தி | புகழ்க்கேடு . |
| அவகுண்டனம் | மூடுகை ; முகத்தை மறைக்கும் துணி . |
| அவகுணம் | தீக்குணம் . |
| அவகேசி | பூத்தும் காயாத மரம் . |
| அவகேடு | பெருந்தீங்கு . |
| அவச்சாவு | காண்க : அகாலமிருத்து . |
| அவச்சின்னம் | குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது . |
| அவச்சுழி | தீவினை . |
| அவச்சேதகம் | வேறுபடுத்தும் தன்மை . |
| அவச்சொல் | பழிச்சொல் . |
| அவசகுனம் | தீநிமித்தம் . |
| அவசங்கை | அவமரியாதை . |
| அவசத்தம் | அமங்கல ஒலி ; பிழைச் சொல் . |
| அவசம் | தன்வசப்படாமை . |
| அவசர்ப்பிணி | வாழ்நாள் ; போகம் முதலியவை சுருங்கும் காலம் . |
| அவசரக்குடுக்கை | பதற்றக்காரன் . |
| அவசரம் | சமயம் ; விரைவு ; இன்றியமையாமை ; கோலம் ; மழை ; ஆண்டு ; அரசாங்கப் பதவிகளுள் ஒன்று . |
| அவசன் | தன்வசம் இழந்தவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவ்வியத்தன் முதல் - அவதி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சமயம், கேடு, முடிவு, அவ்வியயம், கடவுள், காலம், வஞ்சகம், வரும், தீவினை, பொருள், முன்னொட்டு, வடமொழி, பொருள்களைக், அவதாரம், இடுதிரை, உறுதி, இன்றியமையாமை, எல்லை, குழி, பூண்டு, முகவுரை, சொல், முதலிய, அவதானம்

