தமிழ் - தமிழ் அகரமுதலி - அலவாங்கு முதல் - அவ்வியத்தம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அலைத்தல் | அசைத்தல் ; அலையச் செய்தல் ; நீரைக் கலக்குதல் ; வருத்துதல் ; அடித்தல் ; நிலைகெடுத்தல் ; உருட்டுதல் ; அலைமோதுதல் . |
| அலைத்திடல் | காண்க : அலைத்தல் . |
| அலைதரல் | அலைதல் ; அலையச் செய்தல் . |
| அலைதல் | திரிதல் ; வருந்துதல் ; சோம்புதல் ; ஆடுதல் . |
| அலைதாங்கி | அலையைத் தடுக்கும் செய்கரை . |
| அலைதாடி | ஆடுமாடுகளின் கழுத்தில் புடைத்துத் தொங்கும் தசை . |
| அலைநீர் | கடல் . |
| அலைப்படுதல் | வருந்துதல் . |
| அலைப்பு | அசைக்கை ; வருத்தம் . |
| அலைமகள் | திருமகள் . |
| அலையல் | திரிகை ; சோர்வு ; சோம்பல் |
| அலைவாய் | கடல் ; திருச்செந்தூர் . |
| அலைவு | அசைகை ; கலக்கம் . |
| அலோகம் | காணப்படாத உலகம் . |
| அலௌகிகம் | உலகநடைக்கு மாறானது . |
| அவ் | சுட்டுச்சொல் ; அவை . |
| அவ்வது | அவ்வாறு . |
| அவ்வாய் | அழகிய இடம் . |
| அவ்வாறு | அப்படி ; தனித்தனி ஆறு . |
| அவ்விடம் | அங்கு . |
| அவ்வித்தல் | பொறுமை இழத்தல் ; மனம் கோணச்செய்தல் . |
| அவ்விதழ் | அழகிய பூவிதழ் . |
| அவ்வியக்தம் | அறியப்படாத எண் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மூலப்பிரகிருதி ; பீடத்தோடுகூடிய சிவலிங்கம் ; ஆன்மா . |
| அவ்வியத்தம் | அறியப்படாத எண் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மூலப்பிரகிருதி ; பீடத்தோடுகூடிய சிவலிங்கம் ; ஆன்மா . |
| அலவாங்கு | கடப்பாரை . |
| அலவாட்டு | வழக்கம் |
| அலவான் | பல்லாங்குழியாட்டத்தில் கூடும் காய்கள் . |
| அலவு | மனத்தடுமாற்றம் . |
| அலவுதல் | வருந்துதல் ; சிந்துதல் . |
| அலவை | அல்லவை ; விடாது பிதற்றுபவள் ; விபச்சாரம் . |
| அலற்றுதல் | இடைவிடாமலும் முறையில்லாமலும் பேசுதல் . |
| அலறல் | புலம்புதல் , கதறுதல் . |
| அலறுதல் | அலறல் ; மிக்கொலித்தல் ; மாடு , ஆந்தை முதலியன கதறுதல் ; உரத்தழுதல் ; வருந்துதல் ; விரிதல் ; காய்தல் . |
| அலன் | கலப்பைப் படையையுடைய பலராமன் . |
| அலன்றல் | சாவு . |
| அலாதம் | கடைக்கொள்ளி ; மரம்சுட்ட கரி . |
| அலாதி | தனியானது . |
| அலாது | தனியானது . |
| அலாபத்திரம் | இணையா வினைக்கை வகை . |
| அலாபம் | இலாபமின்மை ; தீது . |
| அலாயுதன் | காண்க : அலன் . |
| அலாரிதா | அலரிச்செடி . |
| அலாரிப்பு | நாட்டிய ஆரம்பத்தில் பாடும் சொற்கட்டு . |
| அலாவு | சுரைக்கொடி . |
| அலி | ஆண்பெண் அல்லாதது ; பலராமன் ; யமன் ; உழவன் ; காகம் ; குயில் ; தேன் ; விருச்சிகராசி ; நறுவிலிமரம் ; வயிரம் இல்லாமரம் ; தீ ; சோறு . |
| அலிக்கிரகம் | சனி , புதன் என்னுங் கோள்கள் , |
| அலிக்கை | அலிச்செயல் காட்டும் அபிநயக்கை . |
| அலிகம் | நெற்றி . |
| அலிப்பேடு | அல்லியம் என்னும் கூத்து . |
| அலிபகம் | கருவண்டு ; தேள் ; நாய் . |
| அலிமரம் | வயிரமில்லாத மரம் ; பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம் . |
| அலியன் | கடுக்காய்மரம் . |
| அலியெழுத்து | ஆய்தவெழுத்து . |
| அல¦கன் | தலை . |
| அலுக்குத்து | முகமதியப் பெண்கள் காதணி . |
| அலுக்குதல் | சிறிது அசைத்தல் ; பிலுக்குப்பண்ணல் ; பகட்டித் திரிதல் ; ஆடம்பரங்காட்டி மயக்குதல் . |
| அலுசிலும்பல் | குழப்பம் . |
| அலுப்தசத்தி | பேரருளுடைமை . |
| அலுத்தசத்தி | பேரருளுடைமை . |
| அலுத்தல் | சோர்தல் ; தளர்தல் ; களைத்தல் . |
| அலுத்தன் | பற்றற்றவன் . |
| அலுப்பு | தளர்வு ; சோர்வு ; களைப்பு . |
| அலுவல் | தொழில் . |
| அலுவீகம் | வில்வமரம் . |
| அலேகம் | எழுதப்படாத வெள்ளேடு ; உலோகமணல் . |
| அலை | நீர்த்திரை ; கடல் ; திரையடித்தொதுக்கிய கருமணல் ; நிலம் ; மது ; கண்டனம் ; வருத்துகை ; மிகுதி ; கொலை . |
| அலைக்கழித்தல் | அலைத்து வருத்துதல் . |
| அலைக்கழிதல் | அலைந்து வருந்துதல் . |
| அலைக்கழிவு | உலைவு ; அலைந்து வருந்தும் வருத்தம் . |
| அலைகாற்று | பெருங்காற்று . |
| அலைகுலையாக்குதல் | நிலைகுலையச் செய்தல் . |
| அலைச்சல் | திரிகை ; தொந்தரவு . |
| அலைசடி | சோர்வு . |
| அலைசடை | சோர்வு . |
| அலைசல் | அலைகை ; துன்பம் ; சோம்பல் . |
| அலைசுதல் | ஆடை முதலியவற்றை நீரில் அலைத்துக் கழுவுதல் ; குலுக்குதல் ; கலக்குதல் ; சோம்புதல் . |
| அலைசோலி | அலைச்சல் ; தொந்தரவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலவாங்கு முதல் - அவ்வியத்தம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வருந்துதல், சோர்வு, கடல், செய்தல், கதறுதல், ஆன்மா, அலறல், பீடத்தோடுகூடிய, ஒன்று, மூலப்பிரகிருதி, சிவலிங்கம், அலன், பேரருளுடைமை, அலைந்து, அலைச்சல், மரம், தனியானது, உபநிடதங்களுள், பலராமன், தொந்தரவு, அழகிய, காண்க, அலைதல், வருத்துதல், கலக்குதல், அசைத்தல், அலையச், திரிதல், சோம்புதல், அலைத்தல், அறியப்படாத, அவ்வாறு, சோம்பல், வருத்தம், திரிகை, நூற்றெட்டு

