தமிழ் - தமிழ் அகரமுதலி - அரைசெலவு முதல் - அல்லிமாதர் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அல் | இரவு ; இருள் ; மாலை ; சூரியன் ; வெயில் ; மதில் ; சுக்கு ; மெய்யெழுத்து ; மயக்கம் ; எதிர்காலத் தன்மை ஒருமை விகுதி ; வியங்கோள் விகுதி ; தொழிற்பெயர் விகுதி ; ஒரு சாரியை ; ஆண்பால் பெயர் விகுதி ; எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி ; எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி ; எதிர்மறை வினை இடைநிலை . |
| அல்கந்தி | அந்திப்பொழுது . |
| அல்கல் | தங்குகை ; குறைதல் ; வருமை ; இரவு ; நாள் . |
| அல்கா | இழிவான ; குதிரைச் சேணத்தில் கழுத்து வளையத்துக்குக் கீழிடும் மெத்தை . |
| அல்கு | இரவு ; பிற்பகல் ; தங்குகை . |
| அல்குகழி | உப்பங்கழி ; சிற்றாறு . |
| அல்குதல் | அல்கல் ; தங்குதல் ; நிலைத்து நிற்றல் ; சேருதல் ; அழிதல் ; சேமித்து வைத்தல் . |
| அல்குல் | பக்கம் ; அரை ; பெண்குறி ; நிதம்பம் . |
| அல்பொருள் | பாவம் ; உவமானம் . |
| அல்லகண்டம் | துன்பம் . |
| அல்லகம் | உற்பலம் ; செந்தாமரை ; கோவணம் . |
| அல்லகுறி | தலைமகனால் அன்றிப் பிறிதொன்றினால் நிகழும் குறி ; |
| அல்லகுறிப்படுதல் | இரவுக் குறியிடத்துக் குறியல்லாத குறியில் மயங்குதல் . |
| அல்லங்காடி | மாலைக்கடை . |
| அல்லது | தீவினை ; தவிர . |
| அல்லதூஉம் | அல்லாமலும் . |
| அல்லதேல் | அல்லாமற்போனால் . |
| அல்லதை | அல்லாமல் . |
| அல்லம் | காண்க : இஞ்சி . |
| அல்லல் | துன்பம் . |
| அல்லவை | தீயவை ; பயனின்மை . |
| அல்லறைசில்லறை | மிச்சத்தொகை ; சிறு துன்பங்கள் . |
| அல்லா | வருத்தம் ; மகமதியர் வழிபடும் கடவுளின் பெயர் . |
| அல்லாட்டம் | அலைச்சல் . |
| அல்லாடுதல் | அலைதல் ; தொல்லைப்படுதல் . |
| அல்லாத்தல் | துன்பம் அடைதல் ; மகிழ்தல் . |
| அல்லாத | மாறான ; மாறானவை . |
| அல்லாதார் | ஒழிந்த பிறர் ; தீயார் . |
| அல்லாப்பண்டிகை | இசுலாமியரின் விழாக்களுள் ஒன்றான மொகரம் . |
| அல்லாப்பு | வருத்தம் . |
| அல்லாமல் | தவிர . |
| அல்லாமலும் | மேலும் . |
| அல்லாமை | தீக்குணம் . |
| அல்லாரி | வெள்ளாம்பல் ; சுவரின் ஆரல் தாங்கும் முளை ; அடர்த்தியின்மை . |
| அல்லால் | அல்லாமல் . |
| அல்லி | ஆம்பல் ; வெள்ளாம்பல் ; தாமரை ; காயாம்பூ ; அகவிதழ் ; பூந்தாது ; அல்லியரிசி ; இளவேர் ; இரவு ; அலி . |
| அல்லிகம் | பேய்க்கொம்மட்டிக் கொடி . |
| அல்லித்தாமரை | செங்கழுநீர்க் கொடி . |
| அல்லித்தாள் | அகவிதழ் உறுப்புவகை . |
| அல்லிப்பாவை | அல்லியக்கூத்தில் ஆட்டும் பொம்மை . |
| அல்லிப்பிஞ்சு | இளம்பிஞ்சு . |
| அல்லிமாதர் | திருமகள் . |
| அரைசெலவு | கறிக்கூட்டுப் பொருள் . |
| அரைஞாண் | இடுப்பில் கட்டும் கயிறு ; வெள்ளிக் கயிறு ; கிணற்றின் செங்கல் வரை . |
| அரைநாண் | இடுப்பில் கட்டும் கயிறு ; வெள்ளிக் கயிறு ; கிணற்றின் செங்கல் வரை . |
| அரைத்தல் | மாவாக்கல் ; தேய்த்தல் ; கொட்டை நீக்குதல் ; அழித்தல் . |
| அரைதல் | தேய்த்தல் ; அரைபடல் . |
| அரைநாள் | பாதிநாள் ; நடுநாள் ; நள்ளிரவு . |
| அரைப்பட்டிகை | மாதர் இடையில் கட்டும் அணிவகை . |
| அரைப்படிப்பு | நிரம்பாக் கல்வி . |
| அரைப்பணம் | அல்குல் ; பாதிக்காசு . |
| அரைப்பை | இடுப்பில் கட்டும் நீண்ட பணப்பை ; அல்குல் . |
| அரைமதியிரும்பு | பாதித் திங்களைப் போன்ற ஒருவகை அங்குசம் . |
| அரைமனிதன் | பெருமை குறைந்தவன் . |
| அரைமூடி | பெண்குழந்தைகளின் அரையில் கட்டும் அரசிலை வடிவ அணி . |
| அரையர் | திருமால் திருக்கோயில்களில் திவ்வியப் பிரபந்தம் பாடித் தொண்டு செய்பவர் . |
| அரையன் | அரசன் ; ஒரு பழைய பட்டம் . |
| அரையாப்பு | தொடையிடுக்கில் உண்டாகும் கட்டி . |
| அரையிருள் | நள்ளிரவு . |
| அரைவட்டம் | வட்டத்தில் பாதி ; காண்க : அரைமூடி . |
| அரைவடம் | காண்க : அரைஞாண் . |
| அரைவாசி | பாதி . |
| அரைவாய் | குறைபட்ட வாய் . |
| அரைவைரக்கண் | தட்டார் கருவியுள் ஒன்று . |
| அரோ | ஓர் அசைச்சொல் . |
| அரோகதிடகாத்திரம் | சுகமும் வலிமையுமுள்ள உடல் . |
| அரோகம் | நோயின்மை . |
| அரோகி | நோய் இல்லாதவன் ; சகமுடையவன் . |
| அரோசகம் | பசியின்மை ; அருவருப்பு . |
| அரோசிகம் | பசியின்மை ; அருவருப்பு . |
| அரோசனம் | அருவருப்பு . |
| அரோசித்தல் | அருவருத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரைசெலவு முதல் - அல்லிமாதர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், விகுதி, கட்டும், இரவு, கயிறு, அல்லாமல், காண்க, இடுப்பில், துன்பம், அல்குல், அருவருப்பு, வெள்ளிக், பசியின்மை, பாதி, அரைமூடி, தேய்த்தல், செங்கல், நள்ளிரவு, கிணற்றின், வெள்ளாம்பல், அல்கல், எதிர்மறை, பெயர், ஒருமை, தங்குகை, தவிர, கொடி, அகவிதழ், வருத்தம், அல்லாமலும், அரைஞாண்

