தமிழ் - தமிழ் அகரமுதலி - அரும்பதவுரை முதல் - அரைசிலை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அருளரசி | வெட்பாலை மரம் ; குடசப்பாலை . |
| அருளல் | பெருங்கொடை ; காத்தல் ; கொடுத்தல் ; படைத்தல் ; இரங்குதல் . |
| அருளவம் | அழிஞ்சில்மரம் ; பெருமரம் . |
| அருளறம் | அருளாகிய அறம் . |
| அருளாழி | அறச்சக்கரம் . |
| அருளாழிவேந்தன் | அருகன் ; கடவுள் . |
| அருளாளன் | அருளை உடையவன் . |
| அருளிச்செய்தல் | சொல்லுதல் . |
| அருளிச்செயல் | கட்டளை ; அடியார் பாடல் . |
| அருளிப்பாடு | அருளப்பட்ட ஆணை ; ஆணை ; கட்டளை . |
| அருளுறுதி | வேம்பு . |
| அருளொடுநீங்கல் | உலகின் துயரைக் கண்டு பற்று நீங்கும் புறத்துறை . |
| அரூபம் | உருவம் இன்மை ; அருவம் . |
| அரூபமாதல் | பாழடைதல் . |
| அரூபி | உரு இல்லாதது ; கடவுள் ; சிவன் ; அசரீரி ; கருப்பூரம் . |
| அரேசகண்டு | கருணைக்கிழங்கு . |
| அரேசிகம் | வாழைமரம் . |
| அரேணு | குலப்பெண் ; வால்மிளகு ; கடலை . |
| அரேணுகம் | காண்க : வால்மிளகு ; காட்டுமிளகு ; கடுமரவேர் . |
| அரை | பாதி ; இடம் ; இடை ; தொடையின் மேற்பாகம் ; வயிறு ; அல்குல் ; ஒரு மரம் ; மரத்தின் அடிப்பக்கம் ; தண்டு ; அரசியல் . |
| அரைக்கச்சு | இடையில் அணியும் சிறப்பு உடை . |
| அரைக்காசுத்தொண்டன் | மிகவும் எளியவன் . |
| அரைக்காணி | ஓர் அளவை ; நூற்றறுபதில் ஒரு பங்கு . |
| அரைக்கால் | ஓர் அளவை ; எட்டில் ஒரு பங்கு . |
| அரைகல் | அம்மி . |
| அரைகுலையத் தலைகுலைய | மிக விரைவாய் . |
| அரைகுறை | முற்றுப்பெறாமை . |
| அரைச்சதங்கை | குழந்தைகளின் இடைஅணி . |
| அரைசிலை | அம்மி . |
| அரும்பதவுரை | கடின சொல்லுக்குத் தரப்படும் உரை . |
| அரும்பர் | காண்க : அரும்பு . |
| அரும்பல் | முளைத்தல் . |
| அரும்பாடு | கடினமான உழைப்பு . |
| அரும்பாலை | பாலைப்பண் வகை . |
| அரும்பாவி | மிகக் கொடியவன் . |
| அரும்பிஞ்சு | மிக இளங்காய் . |
| அரும்பித்தல் | தோன்றுதல் . |
| அரும்பு | மொட்டு ; அணிகளின் அரும்பு வேலை ; முகத்தில் தோன்றும் இளமயிர் ; அரிசி . |
| அரும்புதல் | சிறிதாகத் தோன்றுதல் ; முகிழ்த்தல் . |
| அரும்புவளையம் | உருத்திராக்கம் முதலியவற்றின் இடையிலே கோக்கப்படும் வளையம் . |
| அரும்பூட்டு | வருந்திப் பூட்டுவது ; இயல்பிலாத் தொடர்ச்சி . |
| அரும்பெறல் | பெறுதற்கு அரியது . |
| அரும்பொருள் | முயன்று உணரும் இயல்புடைய சொற்பொருள் ; பெறுதற்கு அரிய பொருள் . |
| அருமணவன் | ஒரு தீவு ; அருமணத் தீவின் யானை ; அகில்வகை . |
| அருமதாளம் | ஒன்பது தாளத்துள் ஒன்று . |
| அருமந்த | அருமையான . |
| அருமந்தன்ன | அருமையான . |
| அருமருந்து | பெறுவதற்கு அரிய மருந்து ; அமிழ்தம் . |
| அருமவதி | பண்வகை . |
| அருமிதம் | அளவின்மை . |
| அருமை | அரிய தன்மை ; பெருமை ; கடினம் ; எளிதிற் கிட்டாமை ; சிறுமை ; இன்மை . |
| அருமைசெய்தல் | பேராண்மை காட்டுதல் ; அருமை பாராட்டுதல் . |
| அருவம் | உருவமின்மை ; அருமை . |
| அருவர் | தமிழர் . |
| அருவருத்தல் | மிக வெறுத்தல் . |
| அருவருப்பு | மிகுவெறுப்பு . |
| அருவல் | துன்பம் ; ஒருவகை நோய் |
| அருவா | அருவாநாடு ; கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்று . |
| அருவாட்டி | அருவாநாட்டுப் பெண் . |
| அருவாணம் | செப்புத் தட்டு ; கோயில் பிரசாதம் . |
| அருவாவசு | கதிரவன் கதிர்களுள் ஒன்று . |
| அருவாளர் | ஒரு சாதியார் . |
| அருவி | மலைவீழ் நீர் ; நீரூற்று ; கழிமுகம் ; நீர் ; ஒழுங்கு ; உருவமில்லாதது ; பயிரின் தாள் ; தினைத் தாள் ; அறுத்த ஒருபிடிக் கதிர் ; ஆறு ; மலை . |
| அருவுடம்பு | நுண்ணுடல் , சூக்குமவுடல் . |
| அருவுதல் | அறுத்தொழுகுதல் ; மெல்லெனச் செல்லுதல் ; கிட்டுதல் ; துன்பப்படுத்துதல் . |
| அருவுருவம் | அரு என்றும் உறு என்றும் சொல்லத்தகாதது . |
| அருள் | சிவசக்தி ; கருணை ; பொலிவு ; முதிர்ந்த மாதுளை மரம் ; நல்வினை ; ஏவல் . |
| அருள்வாக்கு | இறைவன் அருள் பெற்றவரின் வாக்கு . |
| அருள்தல் | காண்க : அருளல் ; கருணை காட்டுதல் ; கொடுத்தல் ; பணித்தல் ; மகிழ்தல் ; அச்சமுறுதல் . |
| அருளுதல் | காண்க : அருளல் ; கருணை காட்டுதல் ; கொடுத்தல் ; பணித்தல் ; மகிழ்தல் ; அச்சமுறுதல் . |
| அருளகம் | வெள்ளெருக்கஞ்செடி . |
| அருளம் | பொன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரும்பதவுரை முதல் - அரைசிலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மரம், அரும்பு, காட்டுதல், அரிய, ஒன்று, அருளல், அருமை, கொடுத்தல், கருணை, அச்சமுறுதல், என்றும், மகிழ்தல், பணித்தல், நீர், அருள், தாள், தோன்றுதல், அருவம், இன்மை, கட்டளை, கடவுள், வால்மிளகு, அளவை, பெறுதற்கு, அம்மி, பங்கு, அருமையான

