தமிழ் - தமிழ் அகரமுதலி - சாத்தா முதல் - சாதரா வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சாதகங்கணித்தல் | ஒருவனது பிறந்தநாட்குறிப்பைக் கோள் நிலையைக் கணக்கிட்டு அறிந்து எழுதுதல் . |
| சாதகஞ்செய்தல் | ஒருவனது பிறந்தநாட்குறிப்பைக் கோள் நிலையைக் கணக்கிட்டு அறிந்து எழுதுதல் . |
| சாதகப்பட்டிகை | சாதகம் எழுதிய பத்திரம் . |
| சாதகப்புள் | காண்க : சாதகபட்சி |
| சாதகப்பொருத்தம் | மணமக்களுடைய சாதகங்கள் தம்முள் பொருந்துகை . |
| சாதகபட்சி | வானத்திலிருந்து விழும் மழைத்துளியைப் பருகி வாழும் ஒரு பறவைவகை . |
| சாதகபலன் | சாதகத்தின்படியுள்ள நிகழ்ச்சிகள் . |
| சாதகபுட்பம் | காண்க : கடனுரை . |
| சாதகபுடம் | சாதகம் கணித்தல் . |
| சாதகம் | பிறப்பு ; பிறவிக்குணம் ; சாதகப்பத்திரிகை ; ஒரு நூல்வகை ; பயிற்சி ; துணைக்காரணம் ; உதவி ; ஏந்து ; முடிக்கவேண்டியது ; அனுகூலம் ; பிரமாணம் ; பூதம் ; சாதகப்புள் ; மறைப்பு ; எருக்கு . |
| சாதகராகத்தி | கோழித்தலைக் கந்தகம் . |
| சாதகருமம் | காண்க : சாதகன்மம் |
| சாதகன் | பயிற்சியுள்ளவன் ; யோகவழி நிற்போன் ; நிருவாணதீட்சை பெற்றவன் ; மாணாக்கன் ; இறப்புவரை இல்லற ஒழுக்கத்தில் நிற்பவன் ; உதவியாளன் ; பூதம் ; சாதகத்துக்குரியவன் . |
| சாதகன்மம் | பிள்ளை பிறந்த காலத்தில் செய்யும் சடங்கு . |
| சாதகும்பம் | பொன் . |
| சாதங்காண்தல் | உலையிலிட்ட அரிசி அளவுக்குமேல் சோறாகத் தோன்றுதல் . |
| சாதங்காணுதல் | உலையிலிட்ட அரிசி அளவுக்குமேல் சோறாகத் தோன்றுதல் . |
| சாதம் | பிறப்பு ; தோன்றுவது ; இளமையுடையது ; உண்மை ; கூட்டம் ; சோறு ; பூதம் . |
| சாதர் | பிறந்தவர் ; உயர்ந்த சால்வை . |
| சாதரா | உயர்ந்த சால்வை . |
| சாத்தா | காண்க : ஐயனார் . |
| சாத்தாதவன் | காண்க : சாத்தானி . |
| சாத்தாவாரி | தண்ணீர்விட்டான் கொடிவகை . |
| சாத்தான் | பிசாசநாதன் . |
| சாத்தானி | கோயிலில் பூமாலைத் தொண்டு புரிந்துவரும் பார்ப்பனனல்லாத வைணவன் . |
| சாத்திக்கொள்ளுதல் | பகட்டாக மாலை முதலியன அணிதல் . |
| சாத்திகம் | முக்குணத்துள் ஒன்றான சாத்து விகம் சிற்பநூலுள் ஒன்று . |
| சாத்தியந்தன் | பிறவிக்குருடன் . |
| சாத்தியம் | முடிக்கத்தக்கது , சாதிக்கத்தக்கது ; அனுமான உறப்புள் துணியப்பட வேண்டும் பொருள் ; இருபத்தேழு யோகத்துள் ஒன்று ; தீர்க்கக்கூடியது . |
| சாத்தியர் | தேவருள் ஒரு பகுதியார் . |
| சாத்தியரோகம் | தீர்க்கக்கூடிய நோய் |
| சாத்திரக்காரன் | குறி சொல்பவன் ; சோதிடன் . |
| சாத்திரம் | நூல் ; வேதாந்தம் , தருக்கம் முதலிய நூல் . |
| சாத்திரம்பார்த்தல் | குறிபார்த்தல் ; சோதிட நூலால் நன்மை தீமை பார்த்தல் |
| சாத்திரவேரி | காண்க : சாத்தாவாரி . |
| சாத்திரி | சாத்திரங் கற்றவன் . |
| சாத்து | சாத்துகை ; காண்க : சாத்துமுறை ; அடி ; பெயர்த்து நடப்பெற்ற நாற்று ; வாணிகர் கூட்டம் ; கூட்டம் ; கைம்மரம் . |
| சாத்துக்கவி | நூல்செய்தோன் பெருமை முதலியவற்றை விளக்கும் சிறப்புப் பாயிரம் . |
| சாத்துக்குடி | கிச்சிலிவகை ; தித்திப்பெலுமிச்சை . |
| சாத்துதல் | அணிதல் ; தரித்தல் ; பூசுதல் ; அடைத்தல் ; நூலைப் படித்து முடித்தல் ; அடித்தல் ; பெயர்த்து நடுதல் . |
| சாத்துப்படி | கோயில் சிலைகளுக்கு மாலை முதலியன சாத்தி அலங்கரித்தல் ; சந்தனம் . |
| சாத்துப்பயிர் | பிடுங்கி நடப்பெற்று வளர்ந்த பயிர் . |
| சாத்துமாலை | அணிதற்குறிய பூமாலை . |
| சாத்துமுறை | கோயில் முதலிய இடங்களில் வைணவர் திவ்வியப் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களைச் சிறப்புத் தோன்றத் தனியே ஓதுகை ; ஆழ்வாராதியர் திருவிழாவின் முடிவு ; தெய்விக நூல்கள் பற்றிய உரைக்கோவையின் முடிவு . |
| சாத்துலம் | புலி . |
| சாத்துவதி | அறம் பொருளாகவும் , தெய்வமானிடர் தலைவராகவும் வரும் நாடக விருத்தி . |
| சாத்துவம் | சாத்துவிகம் |
| சாத்துவி | சாத்துவ வடிவமாயுள்ள சிவபெருமான் . |
| சாத்துவிகம் | முக்குணத்துள் ஒன்றாகிய உயர்ந்த நற்குணம் , அஃது அருள் , ஐம்பொறியடக்கல் , ஞானம் , தவம் , பொறை , மேன்மை , மோனம் , வாய்மை என எண்வகைப்படும் . |
| சாத்துவிகன் | சாந்தகுணமுடையவன் . |
| சாத்துறி | உறிவகை . |
| சாத்தெறிதல் | வாணிகக் கூட்டத்தைக் கொள்ளையிடுதல் . |
| சாதகக்குணசலம் | கந்தகம் . |
| சாதகக்குறிப்பு | பிறந்த ஆண்டு , மாதம் , நாள் , இராசி முதலியவற்றின் குறிப்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 442 | 443 | 444 | 445 | 446 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாத்தா முதல் - சாதரா வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பூதம், சாதகம், கூட்டம், உயர்ந்த, அணிதல், முக்குணத்துள், மாலை, சால்வை, சாத்தானி, சாத்தாவாரி, முதலியன, ஒன்று, கோயில், முடிவு, சாத்துவிகம், பெயர்த்து, சாத்துமுறை, நூல், முதலிய, சாத்து, சோறாகத், அறிந்து, எழுதுதல், சாதகப்புள், கணக்கிட்டு, நிலையைக், பிறந்தநாட்குறிப்பைக், கோள், சாதகபட்சி, பிறப்பு, அரிசி, அளவுக்குமேல், ஒருவனது, உலையிலிட்ட, பிறந்த, கந்தகம், சாதகன்மம், தோன்றுதல்

