தமிழ் - தமிழ் அகரமுதலி - சாக்தன் முதல் - சாட்டி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சாட்டி | சாட்டை ; அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம் ; பயிரிடுதற்காக உரமிடப்பட்டிருக்கும் நிலம் ; சவுக்கு . |
| சாகரம் | விழித்திருக்கை ; கடல் ; பதினாயிரங்கோடி . |
| சாகரி | ஒரு பண்வகை . |
| சாகவாசம் | காண்க : சகவாசம் . |
| சாகவில்வம் | காண்க : சேம்பு |
| சாகளம் | வெள்ளாடு . |
| சாகாங்கம் | மிளகு . |
| சாகாடு | வண்டி ; வணடியுருளை ; உரோகிணிநாள் |
| சாகாதுண்டம் | அகில்மரம் ; சீந்திற்கொடி . |
| சாகாமருந்து | தேவாமிழ்தம் ; ஒரு மூலிகைவகை . |
| சாகாமிருகம் | மரக்கிளையில் வாழும் விலங்கு ; குரங்கு ; அணில் . |
| சாகாமுலி | சீந்திற்கொடி . |
| சாகாரம் | வடிவுடையது ; துயிலொழிகை . |
| சாகி | மரம் ; ஈச்சமரம் ; காண்க : திராய் . |
| சாகித்தியசக்தி | கவிபாடுந் திறமை . |
| சாகித்தியம் | செய்யுள் ; இசைப்பாட்டு ; இலக்கியம் . |
| சாகியம் | நட்பு . |
| சாகினி | கீரைவகை ; பூங்கீரை ; துர்த்தேவதை . |
| சாகீர் | மானியம் . |
| சாகுபடி | பயிர்செய்தல் |
| சாகுபடிக்கணக்கு | பயிர்செய்யப்பட்ட நிலங்களின் கணக்கு . |
| சாகுபடித்திட்டம் | பயிர்செய்யத் தீர்மானித்த நிலங்களின் விவரம் ; பயிரிடுவதற்கு ஏற்படும் எதிர்பார்ப்புச் செலவு |
| சாகை | மரக்கிளை ; கிளைக்குடும்பம் ; கை ; வேதநூற் பதிவு வேதம் ; இலை ; வட்டில் ; சாதல் ; வாழுமிடம் . |
| சாங்கம் | உறுப்புகள் அனைத்தும் ; சாயல் ; முழுதும் ; பத்திரமாய் . |
| சாங்கமிலார் | சாதியிலிருந்து விலக்கப்பட்டவர் . |
| சாங்கரம் | கலப்புச்சாதி . |
| சாங்கரர் | கலப்புச் சாதியார் . |
| சாங்கரிசம் | கலப்பு . |
| சாங்கரிசய | கலப்பு . |
| சாங்கிமம் | மருத யாழ்த்திறவகை . |
| சாங்கியம் | கபிலர் மதம் ; எண்ணிக்கைக்கு உட்படுவது ; சடங்கு . |
| சாங்கியயோகம் | பிரமமே சீவன் , சீவனே பிரமம் என்னும் மதம் . |
| சாங்கு | ஓர் அம்புவகை |
| சாங்குகௌரி | காண்க : புளிநறளை . |
| சாங்கேதிகம் | அடையாளம் ; கட்டுப்பாடு முதலியவற்றால் நிகழ்வது . |
| சாங்கோபாங்கம் | முழுமை . |
| சாசற்புடம் | ஐவகைத் தாளத்துள் ஒன்று . |
| சாசனம் | கட்டளை ; அரசாணை முதலியவற்றைக் குறிக்கும் கல்வெட்டு ; உறுதிப்பத்திரம் ; இறையிலிநிலம் ; அதிகாரச்சின்னம் ; தண்டனை ; வேட்டுவச்சேரி ; வெண்கடுகு . |
| சாசனம்பண்ணுதல் | நிலம் முதலியவற்றை விற்பனைசெய்தல் . |
| சாசி | திராய்ப்பூண்டு ; முலைப்பால் . |
| சாசிபம் | தவளை . |
| சாசுவதம் | அசையாநிலை ; வீடுபேறு ; நிலையுள்ளது . |
| சாஞ்சலியம் | நிலையின்மை . |
| சாட்குலி | ஊன் உண்போன் . |
| சாட்கோல் | சாண் அளவுள்ள கோல் . |
| சாட்சாத்கரித்தல் | நேரே காணுதல் . |
| சாட்சாத்காரம் | நேரில் உணர்கை . |
| சாட்சாத்து | கண்கூடாக , வெளிப்படையாக . |
| சாட்சி | நேரிற் கண்டவர் ; வழக்கில் சாட்சி கூறுவோர் ; எடுத்துக்காட்டு ; உடன் உண்ணும் விருந்து ; சைதன்னியம் ; சான்று . |
| சாட்சிக்காரன் | வழக்கில் சான்று சொல்வோன் . |
| சாட்சிப்படி | சாட்சிக்காரர்களுக்குச் செலவாகும் பணம் . |
| சாட்சிபூதம் | சாட்சியாயிருத்தல் . |
| சாட்சியம் | வழக்கில் கூறும் சான்று . |
| சாட்சிவாங்குதல் | சாட்சிக் கையெழுத்து வாங்குதல் ; சாட்சி விசாரித்தல் . |
| சாட்டம் | அடிக்கை ; செருக்கு . |
| சாட்டாங்கநமஸ்காரம் | இருகை , இருமுழங்கால் , இருதோள் , மார்பு ; நெற்றி என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோய வணங்குதல் . |
| சாட்டாங்கம் | இருகை , இருமுழங்கால் , இருதோள் , மார்பு ; நெற்றி என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோய வணங்குதல் . |
| சாக்தன் | சாக்த சமயத்தைத் தழுவியவன் . |
| சாக்தேயன் | சாக்த சமயத்தைத் தழுவியவன் . |
| சாகசக்கியம் | திறமை ; பாசாங்கு . |
| சாகசபட்சி | குலிங்கம் என்னும் பறவை . |
| சாகசம் | துணிவு ; பாசாங்கு ; மெய்மை ; யானை ; காண்க : சாகபட்சி . |
| சாகசன் | துணிவுள்ளவன் . |
| சாகசிகன் | துணிவுள்ளவன் ; பாசாங்கு செய்வோன் . |
| சாகதன் | துணிவுள்ளவன் , வீரன் . |
| சாகபட்சிணி | புல்லுண்ணி . |
| சாகம் | வெள்ளாடு ; தேனீ ; இலைக்கறி ; இலை ; சிறுகீரை ; தேக்கமரம் ; இலைச்சாறு ; வில் ; சாகத்தீவு . |
| சாகரணம் | விழித்திருக்கை . |
| சாகரப்பிரபை | எப்பொழுதும் விழித்தே இருக்க வேண்டிய ஒரு நரகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 440 | 441 | 442 | 443 | 444 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாக்தன் முதல் - சாட்டி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, என்னும், நிலம், சான்று, பாசாங்கு, துணிவுள்ளவன், வழக்கில், சாட்சி, எட்டு, உறுப்புகளும், வணங்குதல், தழுவியவன், சமயத்தைத், சாக்த, நெற்றி, நிலத்தில், இருகை, திறமை, சீந்திற்கொடி, வெள்ளாடு, விழித்திருக்கை, நிலங்களின், கலப்பு, இருதோள், இருமுழங்கால், மதம், மார்பு

