தமிழ் - தமிழ் அகரமுதலி - சச்சு முதல் - சட்டக்கால் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சஞ்சீவகரணி | புளியமரம் ; மூர்ச்சை தெளிவித்து உயிர்தரும் மருந்து . |
| சஞ்சீவன் | மாமரம் . |
| சஞ்சீவனம் | உயிர்ப்பித்தல் . |
| சஞ்சீவனி | காண்க : சஞ்சீவி . |
| சஞ்சீவனை | காண்க : சஞ்சீவி ; நாங்கூழ் . |
| சஞ்சீவி | மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து அல்லது மூலிகை ; சீந்திற்கொடி . |
| சஞ்சீவிமூலிகை | உயிர்தரும் ஒரு மருந்துப் பச்சிலைவகை . |
| சஞ்சீவினி | காண்க : சஞ்சீவி . |
| சஞ்சு | பறவைமூக்கு ; ஆமணக்கஞ்செடி ; குலதருமம் ; சாயல் . |
| சஞ்சுபம் | அரசர்க்குரிய விருதுகள் ; ஆயத்தம் . |
| சஞ்சுபவம் | அரசர்க்குரிய விருதுகள் ; ஆயத்தம் . |
| சஞ்சேபம் | சுருக்கம் . |
| சஞ்சை | பெருங்காற்று ; பேரொலி ; பெருமழை ; சூரியன் மனைவி . |
| சட்சட்டெனல் | விரைவுக்குறிப்பு . |
| சட்சம் | முத்திரைத் துளைக்கு அடுத்த துளை . |
| சட்சமயம் | அறுசமயம் , ஆறு வகையான மதம் . |
| சட்சு | கண் . |
| சட்ட | செவ்விதாக ; நன்றாக ; முழுதும் ; விரைவாக . |
| சட்டக்கதவு | சட்டங்களைக் கோத்து உள்ளே மெல்லிய துண்டுப் பலகைகளால் அமைக்கப் பட்ட கதவு . |
| சட்டக்கல்லி | வீண்பேச்சு . |
| சட்டக்கால் | கடைத்தட்டியைத் தூக்கி நிறுத்துங் கால் . |
| சச்சு | மட்டமான புகையிலை ; சிறுமை ; பதர் ; சந்தடி ; தொந்தரவு ; பறவைமூக்கு ; கொஞ்சம் ; நீர்ச்சுண்டிச்செடி . |
| சச்சை | ஆராய்ச்சி ; பலமுறை ஓதுதல் . |
| சச்சையன் | உண்மைப் பொருளானவன் . |
| சசகதி | குதிரைநடை ஐந்துனுள் முயலின் ஓட்டம் போன்ற நடை . |
| சசகம் | காண்க : சசம் . |
| சசசசவெனல் | காற்றின் ஒலிக்குறிப்பு . |
| சசம் | முயல் . |
| சசம்பரி | ஆமணக்கஞ்செடி . |
| சசமதம் | கத்தூரி . |
| சசன் | முயற்சாதி ஆடவன் . |
| சசாபம் | சிறு நன்னாரிப்பூடு . |
| சசி | கற்பூரம் ; முயற்கறை உடைய சந்திரன் ; இந்திராணி ; இந்துப்பு ; கடல் ; மழை . |
| சசிகன்னம் | பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவு . |
| சசிகேந்திரம் | சந்திரன் இலக்கினத்துக்கும் ஒன்று , நான்கு , ஏழு , பத்தாமிடங்களில் இருக்கை ; சந்திர மந்தோச்சத்துக்கும் அப்போதப்போ தமைந்த அதன் மத்திய நிலைக்குமுள்ள வேறுபாடு . |
| சசிசேகரன் | சந்திரனைத் தலையில் தரித்த சிவன் . |
| சசிதரன் | சந்திரனைத் தலையில் தரித்த சிவன் . |
| சசிதேகம் | சந்திரவட்டம் . |
| சசிமணாளன் | சசியின் கணவனான இந்தரன் . |
| சசியம் | பயிர் ; தானியம் ; காய்கனி முதலிய விளைபொருள் ; மராமரம் ; இந்துப்பு ; கஞ்சாச் செடி ; நிலப் பனங்கிழங்கு . |
| சசிவல்லவன் | காண்க : சசிமணாளன் . |
| சசிவன் | மந்திரி ; நண்பன் . |
| சசுபம் | அசோகமரம் , நெட்டிலிங்கம் . |
| சஞ்சடி | காண்க : சச்சடி . |
| சஞ்சத்தகர் | சூளுரை தவறாது நடக்கும் அரசவீரக் கூட்டத்தார் . |
| சஞ்சம் | பூணூல் ; கச்சு . |
| சஞ்சயம் | கூட்டம் ; ஐயம் . |
| சஞ்சயனம் | பால் தெளித்தலாகிய ஈமச்சடங்கு . |
| சஞ்சரம் | சஞ்சலம் ; விரைந்து அசைகை ; உடல் ; வழி . |
| சஞ்சரிகம் | ஒரு வண்டுவகை . |
| சஞ்சரித்தல் | நடமாடுதல் ; வாழ்தல் ; திரிதல் ; நெறிதப்பி ஒழுகுதல் . |
| சஞ்சலம் | நிலையில்லாமை ; அசைவு ; விரைந்து அசைகை ; நடுக்கம் ; மனக்கவலை , துன்பம் ; நோய் . |
| சஞ்சலரகிதன் | மனக்கலக்கமற்றவன் . |
| சஞ்சலை | மின்னல் ; திருமகள் ; திப்பிலி . |
| சஞ்சாயம் | குடிவாரம் ; நாட்கூலி ; குத்தகைக்கு விடாமல் நிலச்சொந்தக்காரரே நிலத்தைப் பயிரிடுதல் ; இலவசம் ; அதிக இலாபம் , |
| சஞ்சாரபிரேதம் | நடைப்பிணம் ; பயன்றறவன் . |
| சஞ்சாரம் | யாத்திரை ; நடமாட்டம் ; சஞ்சரித்தல் ; நெறிதப்பிய ஒழுக்கம் ; நடனத்துக்குரிய பாத வைப்புவகை ஐந்தனுள் ஒன்று ; ஏற்ற இறக்கக் கலப்பு . |
| சஞ்சாரன் | உயிர் . |
| சஞ்சாரி | திரிபவன் ; சங்கீத வர்ணபேதம் ; குடியானவன் ; பெரிய குடும்பமுடையவன் . |
| சஞ்சாரிகன் | தூதன் . |
| சஞ்சாரிகை | தூதி . |
| சஞ்சாலி | பெரிய துப்பாக்கி . |
| சஞ்சாலிகம் | காண்க : சஞ்சரிகம் . |
| சஞ்சாளிகம் | காண்க : சஞ்சரிகம் . |
| சஞ்சிகை | புத்தகப் பகுதி ; பத்திரிகைப் பகுதி . |
| சஞ்சிதம் | ஈட்டியது , திரட்டியது ; நுகர்ந்தது போக எஞ்சியுள்ள வினை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 411 | 412 | 413 | 414 | 415 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சச்சு முதல் - சட்டக்கால் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சஞ்சீவி, சஞ்சரிகம், உயிர்தரும், சசிமணாளன், சஞ்சலம், சிவன், விரைந்து, தரித்த, சஞ்சரித்தல், பகுதி, பெரிய, தலையில், அசைகை, இந்துப்பு, அரசர்க்குரிய, ஆமணக்கஞ்செடி, பறவைமூக்கு, மருந்து, விருதுகள், ஆயத்தம், ஒன்று, மூர்ச்சை, சந்திரன், சசம், சந்திரனைத்

