முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சங்கிலிக்கோவை முதல் - சச்சிதானந்தை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சங்கிலிக்கோவை முதல் - சச்சிதானந்தை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சச்சாரம் | யானைக்கூடம் . |
| சச்சிதம் | அலங்கரித்துவைக்கை . |
| சச்சிதானந்தம் | உண்மை , அறிவு , இன்பம் என்னும் பரம்பொருட்குரிய முக்குணங்கள் . |
| சச்சிதானந்தன் | சச்சிதானந்தம் உடையவன் , கடவுள் . |
| சச்சிதானந்தை | உண்மை , அறிவு , இன்பம் என்னும் முக்குணங்களையுடைய சக்தி வடிவம் . |
| சச்சரை | கலகம் ; பிளந்த துண்டு ; ஒரு வாத்திய வகை . |
| சச்சற்புடம் | எட்டு மாத்திரைகொண்ட தாள வகை . |
| சச்சனம் | காவல் . |
| சங்கினி | காமசாத்திரம் கூறும் நால்வகைப் பெண்களுள் மூன்றாம் இனத்தவள் ; பத்து நாடியுள் ஒன்று ; சங்கங்குப்பி . |
| கங்கீதக்கச்சேரி | பக்கவாத்தியங்களுடன் நிகழும் பாட்டுக் கச்சேரி . |
| சங்கீதக்காரன் | இசைவல்லான் . |
| சங்கீதம் | இசை ; இசைப்பாட்டு ; வாத்தியத்துடன் பாடுதல் ; இராக சாத்திரம் ; கிச்சிலிக் கிழங்கு . |
| சங்கீதலோலன் | இசையில் பெரிதும் ஈடுபட்டவன் . |
| சங்கீதவாத்தியம் | இசைக்கருவி . |
| சங்கீர்த்தனம் | சொல்லுகை ; புகழ்கை , துதிக்கை ; பாவ அறிக்கை . |
| சங்கீர்தம் | ஒன்றுசேர்கை ; புணர்ச்சி . |
| சங்கீரணசாதி | ஒன்பது அட்சரகாலங்கொண்ட தாளவளவை . |
| சங்கீரணம் | புணர்ச்சி ; கலப்பு ; கலவையணி ; சங்கீரணசாதி ; மத்தளவகை . |
| சங்கு | வலம்புரி , இடம்புரி , சலஞ்சலம் , பாஞ்சசன்னியம் என்னும் நான்கு வகைப்படும் நீர்வாழ் சங்கு ; ஐம்படை என்னும் அணியின் ஓர் உரு ; சங்கரேகை ; சங்கினாற் செய்தகைவளை ; குரல் என்னும் இசை ; மிடறு ; ஒரு பேரெண் ; படையிலொரு தொகை ; பெருவிரல் நிமிர மற்ற நான்கு விரல்களும் வளைந்து நிற்கும் இணையாவினைக்கைவகை ; கோழி ; கடுகுரோகிணி ; சங்கஞ்செடி ; முளை ; மட்டிப் படைக்கலம் . |
| சங்குகர்ணம் | சங்குபோன்ற செவிகளையுடைய ஒட்டகம் ; கழுதை . |
| சங்குச்சுரி | சங்கின் உட்பக்கத்துச் சுழி ; புரியாணி . |
| சங்குசிதம் | சுருக்கமானது . |
| சங்குட்டம் | எதிரொலி . |
| சங்குத்தாலி | சங்குருவமுள்ள தாலி ; சங்கினாற் செய்யப்பட்டு மகளிர் அணியும் தாலி . |
| சங்குத்திரி | சங்கின் உட்சுழி . |
| சங்குதல் | பல்லாங்குழியில் ஆட்டமுறை இலாபமின்றி நின்றுவிடுதல் ; ஊக்கங்கெடுதல் . |
| சங்குதிருகி | சங்கறுக்குங் கருவி ; அடைத்த நெட்டித் தக்கையை இழுத்து வாங்கும் கருவி . |
| சங்குநிதி | வட்டக் கிலுகிலுப்பைச்செடி . |
| சங்குப்புரி | காண்க : சங்குச்சுரி . |
| சங்குபுட்பம் | ஞாழற்செடி . |
| சங்குமணி | சங்குகளாற் செய்த மணி . |
| சங்குமதம் | புனுகு . |
| சங்குமரு | வேப்பமரம் . |
| சங்குமூர்த்தினி | உச்சி . |
| சங்குருளை | ஆமை . |
| சங்குலம் | கூட்டம் ; போர் . |
| சங்குவடம் | பரிசல் என்னும் ஒரு தோணிவகை . |
| சங்குவளை | சங்கினாற் செய்த வளையல் . |
| சங்கூதுதல் | கோயில் முதலியவற்றில் சங்கை ஊதுதல் ; வேலைக்களத்துக்கு ஆள்களை அழைக்க இயந்திரத்தல் ஒலி எழுப்புதல் . |
| சங்கேதம் | குறி ; உடன்பாடு ; குழூஉக்குறி ; உறுதிமொழி ; கோயிலுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலம் ; சாதிசமயங்களால் உண்டாகும் ஒற்றுமையுணர்ச்சி . |
| சங்கேபம் | சுருக்கம் . |
| சங்கை | எண்ணம் ; வழக்கம் ; வறட்சுண்டி ; சுக்கு ; எண் ; அளவு ; கனம் ; கணைக்கால் ; ஐயம் ; அச்சம் ; பகை ; பூத பிசாசு முதலியன . |
| சங்கைக்கேடு | இகழ்ச்சி , அவமரியாதை . |
| சங்கைமான் | மதிக்கத்தக்கவன் . |
| சங்கைவான் | மதிக்கத்தக்கவன் . |
| சங்கோசபரிவாரம் | தக்கோரைப் போற்றுவதற் கென்று அரசனால் அமர்த்தப்பட்ட சிறு கூட்டத்தார் . |
| சங்கோசபிசுனம் | குங்குமம் . |
| சங்கோசம் | குங்குமம் ; மஞ்சள் ; சுருங்குதல் ; கூச்சம் . |
| சங்கோபனம் | கமுக்கம் , இரகசியம் , மறைவு . |
| சச்சடம் | தாமரை . |
| சச்சடி | சந்தடி ; மக்கள் திரண்டு கூடுதல் . |
| சச்சம் | உண்மை . |
| சச்சம்பிரதாயம் | நல்ல வரன்முறை . |
| சச்சரவு | கலகம் . |
| சச்சரி | வாத்தியவகை . |
| சங்கிலிக்கோவை | தொடர்ச்சியானது . |
| சங்கிலிப்பூட்டு | சங்கிலியின் பின்னல் ; சங்கிலிமாட்டும் அணி ; ஒருவகை மல்லுப்பிடி ; பெருஞ்சிக்கல் . |
| சங்கிலிவடம் | சங்கிலிவடிவா யமைந்த கழுத்தணி ; தேரிழுக்குஞ் சங்கிலி . |
| சங்கின்குடியோன் | நாகரவண்டு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 410 | 411 | 412 | 413 | 414 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கிலிக்கோவை முதல் - சச்சிதானந்தை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், என்னும், சங்கினாற், உண்மை, தாலி, சங்கின், கருவி, சங்கை, குங்குமம், மதிக்கத்தக்கவன், சங்குச்சுரி, செய்த, நான்கு, இன்பம், அறிவு, கலகம், புணர்ச்சி, சங்கு, சங்கீரணசாதி, சச்சிதானந்தம்

