தமிழ் - தமிழ் அகரமுதலி - கைம்மதம் முதல் - கையடைப்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கையடக்கம் | கைக்குள் அடங்குகை ; கைக்குள் அடங்கிய பொருள் ; சேமித்து வைக்கப்பட்ட பொருள் ; ஒளித்துவைக்கப்பட்ட பொருள் . |
| கையடித்தல் | கையடித்து உறுதிதருதல் ; விலைக்கு விற்றல் ; கைவேலை செய்தல் . |
| கையடிப்படுதல் | ஒரு பொருள் பல கைகளில் கடந்துசெல்லுதல் . |
| கையடுத்தல் | கையடைத்தல் ; அடைக்கலம் புகுதல் . |
| கையடுப்பு | கையால் எடுத்துச்செல்லத்தகும் சிற்றடுப்பு . |
| கையடை | பிறர் கையில் ஒப்புவிக்கை ; பாதுகாக்குமாறு ஒப்படைத்த பொருள் ; அடைக்கலப் பொருள் ; இலஞ்சம் . |
| கையடைத்தல் | பிறர் கையில் ஒப்புவித்தல் ; கடனைத் தீர்த்தல் . |
| கையடைப்பு | கைவசமான பொருள் . |
| கைம்மருந்து | கையிலுள்ள வசியமருந்து ; அனுபவ மருந்து ; கணவனைத் தன்வசமாக்கப் பெண்டிர் பயன்படுத்தும் மருந்து . |
| கைம்மலை | யானை . |
| கைம்மறதி | நினைவுத் தவறு ; கைப்பிழை . |
| கைம்மறித்தல் | கையால் தடுத்தல் ; கைகவித்து விலக்குதல் . |
| கைம்மா | கையை உடைய விலங்கு , யானை . |
| கைம்மாறு | மறு , பிரதி ; பதிலுதவி . |
| கைம்மாறுதல் | மேற்கொள்ளுதல் ; விற்றல் . |
| கைம்மான் | காண்க : கைம்மா . |
| கைம்மிகுதல் | அளவுகடத்தல் ; சாதி அறத்திற்கு மாறுபட்டு ஒழுகுதல் ; அதிகப்படல் . |
| கைம்மீறுதல் | அளவுக்கு மிஞ்சுதல் . |
| கைம்மீன் | அத்தநாள் . |
| கைம்முகிழ்த்தல் | கடவுள் வழிபாடு , வணக்கம் முதலியவற்றில் கையைக் கூப்புதல் . |
| கைம்முதல் | வாணிகத்திற்கு வைத்த முதற் பொருள் ; பொருள் ; சாதனம் . |
| கைம்முற்றுதல் | முடிவுபெறுதல் . |
| கைம்மேலே | உடனே . |
| கைம்மேற்பணம் | உடனே கொடுக்கும் பணம் . |
| கைம்மை | காதலனைப் பிரிந்திருக்கும் தன்மை , கணவனை இழந்த நிலைமை ; கைம்பெண் ; சிறுமை ; அறிவின்மை ; பொய் . |
| கைம்மைபெற்றோன் | கைம்பெண்ணுக்குப் பிறந்தவன் . |
| கைம்மைவினை | கையால் வேலை செய்யுந்திறம் . |
| கைமகவு | காண்க : கைம்மகவு . |
| கைமட்டம் | கைமதிப்பு ; கையனுபவம் ; கொத்தன் மட்டம் பார்க்கும் கருவி ; பூமி மட்டத்திலிருந்து தாழவிட்ட கைவரையிலுள்ள உயரம் . |
| கைமட்டு | கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு ; உத்தேச மதிப்பு . |
| கைமதிப்பு | கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு ; உத்தேச மதிப்பு . |
| கைமயக்கு | வசிய மருந்து . |
| கைமரம் | வீட்டுக் கூரையின் கை . |
| கைமலிவு | விலைநயம் . |
| கைமறித்தல் | காண்க : கைம்மறித்தல் . |
| கைமறிதல் | கைமாறுதல் . |
| கைமாட்டாதார் | வேலை செய்ய இயலாதார் . |
| கைமாட்டிக்கொள்ளுதல் | அகப்பட்டுக்கொள்ளுதல் . |
| கைமாற்று | கைக்கடன் ; கையை மாற்றி நீந்தும் நீச்சல் ; பரிவர்த்தனை ; விறபனை . |
| கைமாற்றுதல் | ஆளை வேலையினின்று முறை மாற்றுதல் ; பரிவர்த்தனை செய்தல் ; விற்றல் . |
| கைமாறாட்டம் | கைத்தவறு ; கைவன்மையாற் செய்யும் ஏமாற்றம் . |
| கைமாறுதல் | ஒருவர் கையில் இருந்து வேறு ஒருவர் கைக்குச் செல்லுதல் ; விற்றல் ; வேலையாள்கள் முறை மாறுதல் ; ஒழுக்கத்தைக் கைவிடுதல் ; கட்சிமாறுதல் ; பண்டமாற்றுதல் . |
| கைமிஞ்சுதல் | வரம்பு மீறுதல் ; பிறரோடு சண்டை செய்ய முற்படுதல் . |
| கைமுட்டி | விரல் மடக்கியுள்ள கை ; முட்டியுத்தம் . |
| கைமுடக்கம் | பணமுட்டுப்பாடு ; செய்கைக்குக் கை பயன்படாமை . |
| கைமுடிப்பு | கைப்பொருள் ; கட்டுச்சோறு . |
| கைமுடை | கைமுடக்கம் ; பணமுட்டுப்பாடு . |
| கைமுதல் | காண்க : கைம்முதல் . |
| கைமுதிர்தல் | இளமைப்பருவம் நிரம்புதல் . |
| கைமுந்துதல் | கைமிஞ்சுதல் ; திருடுதல் . |
| கைமுளி | மணிக்கட்டிலுள்ள எலும்பு . |
| கைமுறி | ஓலைத்துண்டு , ஓலைச்சீட்டு . |
| கைமுறை | கைமாற்றுமுறை ; அனுபவம் ; நாட்டியம் . |
| கைமூட்டு | தோட்பொருத்து . |
| கைமூலம் | கமுக்கட்டு ; கைராசி ; கன்றிழந்த பசு . |
| கைமெய்யாய் | கையுங்களவுமாய் . |
| கைமேலே | காண்க : கைம்மேலே . |
| கைமேற்பணம் | காண்க : கைம்மேற்பணம் . |
| கையகப்படுத்துதல் | சிக்கப்பண்ணுதல் ; தன் வசப்படுத்துதல் ; காட்டிக்கொடுத்தல் . |
| கையகலுதல் | விட்டுநீங்குதல் . |
| கைம்மதம் | யானையின் துதிக்கையினின்று வெளியேறும் மதநீர் . |
| கைம்மயக்கம் | மோகமயக்கம் . |
| கைம்மயக்கு | மோகமயக்கம் . |
| கைம்மரம் | வீட்டின் பாய்ச்சுமரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 377 | 378 | 379 | 380 | 381 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைம்மதம் முதல் - கையடைப்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், காண்க, கையால், விற்றல், மதிப்பு, மருந்து, கையில், பரிவர்த்தனை, செய்ய, கைமாறுதல், உத்தேச, மதிக்கும், கைமிஞ்சுதல், பணமுட்டுப்பாடு, மோகமயக்கம், கைமுடக்கம், தூக்கி, ஒருவர், முறை, உடனே, யானை, கைம்மறித்தல், பிறர், கையடைத்தல், செய்தல், கைம்மா, கையை, கைம்மேற்பணம், வேலை, கைக்குள், கைம்மேலே, கைம்முதல், கைமதிப்பு

